நேர்முகத்தேர்வா?
கவலையே படாதீங்க... பாகம் -
I
ஹெச். ஆர்.
ரவுண்ட் –
டெக்னிக்கல்
இண்டர்வியூல
அசத்தலா
பதில் சொல்லி தேர்வாகிட்டீங்க...
அடுத்தது
ஹெச்.ஆர்
ரவுண்டு. இந்த
வார்த்தையை
கேட்டதுமே, ’டெக்னிக்கலா
ஒன்னும்
இருக்காது’ அப்படீன்னு
ரிலாக்ஸ்டா
போயி
உட்கார்ந்துடாதீங்க. டெக்னிக்கல்
தேர்வு
க்ளீயர்
பண்ணி ஹெச்.ஆர்.
ரவுண்டுல
கோட்டை
விட்டவங்க
எத்தனை பேருன்னு
சொன்னா
மிரண்டுடுவீங்க.
நிறைய
பேர்
நினைக்கறது
இது...
ஹெச்.ஆருக்கு
டெக்னிக்கலா
எதுவும்
தெரியாது.
டெக்னிக்கல்
இண்டர்வியூவுல செலக்ட்
ஆகிட்டா மீதி
உள்ளதெல்லாம்
சப்ப மேட்டர்.
ஹெச்.ஆர்
ரவுண்டு ஒரு கண்துடைப்புதான்.
சம்பளத்தை
சொல்லத்தான்
ஹெச்.ஆர்
ரவுண்டே
வைக்கிறாங்க.
இதேபோல
நீங்களும்
நினைச்சீங்கன்னா
உங்களுக்கான "ஆப்பை"
நீங்களே ரெடி பண்ணிக்கிட்டீங்கன்னு
அர்த்தம். ஹெச்.ஆர்.
அப்படீங்கற
மனிதவள
மேம்பாட்டுத்துறையினர் கிட்ட
பேசும்போது, டெக்னிக்கல்
இண்டர்வியூவை
விட சீரியஸா
இருக்கனும். அதை
அடிச்சு சொல்லத்தான்
இந்த கட்டுரை.
வழக்கமா
ஹெச்.ஆர். ரவுண்டுல
கேட்கப்படுற
கேள்விகள்
சிலவற்றை
பார்க்கலாம்.1.
உங்களைப்பற்றி
சொல்லுங்க...
2. உங்கள் பலம், பலவீனம்
பற்றி சொல்லுங்க...
3. நீங்கள்
வெற்றியடைந்த
ஒரு
விஷயத்தைப்பற்றி
சொல்லுங்க...
4. நீங்கள்
தோல்வியடைந்த
ஒரு
விஷயத்தைப்பற்றி
சொல்லுங்க...
5. நீங்க ஏன்
உங்க பழைய நிறுவனத்தில்
இருந்து
மாறினீங்க?
6. உங்களை ஏன்
நான்
தேர்ந்தெடுக்கனும்?
7. இன்னும்
அஞ்சு
வருஷத்துல
நீங்க எங்க
இருப்பீங்க?
8. ஒரு நல்ல
நிறுவனம்
எப்படி இருக்கனும்னு
நீங்க
நினைக்கிறீங்க?
9. ஏன் எங்கள்
நிறுவனத்தில்
வேலை பார்க்கனும்னு
நினைக்கிறீங்க?
10. உங்கள்
கடுமையான
உழைப்பு
மதிக்கப்படாமல்
போன ஒரு
சம்பவத்தை
சொல்லுங்க...
11. உங்களோட
மற்ற ஹாபீஸ், இண்ட்ரஸ்ட்
என்ன?
12. இந்த
நிறுவனம்
பற்றி
உங்களுக்கு
என்ன தெரியும்?
13. சம்பளம்
இல்லாமல்
வேலை செய்யச்சொன்னா
செய்வீங்களா?
14. சனி, ஞாயிறு
அலுவலகம் வைத்தால் வருவீங்களா?
15. குழுவாக
இணைந்து
பணியாற்றுவது
பற்றி என்ன நினைக்கிறீங்க?
16. உங்களுக்கு
நிறுவனத்தில்
ஏதாவது
பிரச்னை என்றால்
என்ன
செய்வீங்க?
17. ஒரு நாளைக்கு
எவ்வளவு மணி
நேரம் வேலை
செய்வீங்க?
18. உங்களை
நார்த்
இண்டியாவுல
உள்ள ரிமோட்
லொக்கேஷனுக்கு
பணி மாற்றம்
செய்தா அங்க
போய் வேலை
செய்வீங்களா?
19. உங்க குடும்பத்தை
பற்றி
சொல்லுங்க...
20. நீங்க
ஏதாவது கேட்க
விரும்புறீங்களா?
பார்ப்பதற்கு
ஏதோ
எளிமையானதாக
தோன்றும் இந்த
கேள்விகள்
ஒவ்வொன்றிலும்
ஒரு ரகசிய பவுன்ஸர்
ஒளிந்துள்ளது.
அதனை தடுத்து
ஆடலைன்னாலும்
ஹெல்மெட்ல
அடி வாங்கி அவுட்டாகிடாதீங்க.
ஒவ்வொரு
பவுன்ஸர்லயும்
சிக்ஸ்
அடித்து ஆஃபர்
லெட்டரை
வாங்குற வழியை
ரகசியமா
சொல்றேன்
கேட்டுக்கோங்க...
பதில்களை
சொல்றதுக்கு
முன்னால ஹெச்.ஆர்-களின்
மனநிலைப்பற்றி
பற்றி
சொல்றேன். ஹெச்.ஆர்.
எப்போதும்
மரியாதையையும், பணிவையும்
எதிர்பார்ப்பாங்க.
நிறுவனங்களின் கட்டுப்பாடு
கிட்டத்தட்ட 90% அவங்க
கையில்
இருப்பதால்
இயற்கையாகவே
அப்படிப்பட்ட ஆட்டிடியூட்
அவங்களுக்கு
இருக்கும். நீங்க
அந்த
நிறுவனத்தில்
பணியில்
சேரும்போது அவர்களை
மீறி சேரவே
முடியாது. அவங்க
பார்த்து ஓ.கே.
சொன்னாதான்
உங்களுக்கு
அந்த வேலை
கிடைக்கும். டெக்னிக்கலா
நீங்க
சவுண்ட்
பார்ட்டியா
இருந்தாலும், உங்களோட ஆட்டிடியூட்
நல்லா
இருந்தால்
மட்டுமே உங்கள்
கையில் வேலை.
ஹெச்.ஆர். கேட்கும்
கேள்விகள்
மேலோட்டமானதாகவும், அதே
நேரம் உங்கள்
ஆழ் மனதில் இருக்கும்
’நீங்கள்’ யார்
என்பதை
வெளிக்கொண்டு
வருவதாகவும்
இருக்கும். பேசுனா ஆபத்துன்னு
’மண்ணு’ மாதிரி
இருந்தீங்கன்னா
வேலைக்காவாது.
உங்கள்
முகத்தில் உற்சாகம், மலர்ச்சி, உடல்மொழி
(body language) எல்லாம்
சூப்பரா
இருந்தால்தான் ஹெச்.ஆர்.
உங்களை
செலக்ட்
செய்வாங்க.
ஓ.கே. கொஞ்சம்
முன்னாடி
பொதுவா ஹெச்.ஆர்.
கேட்கக்கூடிய
20 கேள்விகளைப் பார்த்தோம்
இல்லையா? அதுக்கான
பதில்களை
சொல்லட்டுமா? ….
(will continue…. .till that time …stay
with www. Madukkkur.com)
- Thanks websources