readwhattold.asp
Messages
- 2008
Latest Message
3/8/2010 9:03:51 PM
Tea Time...
அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஊரில் பொழுதுகள் இனிதே செல்கிறது.
அதிகாலை நேரங்களில் நல்ல பனிமூட்டம் இருக்கிறது.
இன்று காலை கூட நகரில் பல இடங்கள் பனிபோர்வையில் மூடப்பட்ட்டு இருந்தது.
இரன்டு தினங்களுக்கு முன்
படப்பைக்காடு அருகே ஆடுமேய்த்து முடித்து விட்டு
ஆடுகள் சாலையை கடக்கும்போது
ஆட்டின் மேல் லாரி ஏறி 56 ஆடுகள் இறந்துபோனது.
இந்த துயர சம்பவத்தை வேண்டுமென்று செய்ததாக தான் இருக்கவேண்டும்.
ஏனெனில், ஒரு ஆடு அடிபட்டாலே தெரிந்துவிடும்.
ஆனால், இறந்ததோ 56.
நேற்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக
நடைபெற்ற மதுக்கடை மறியல் போராட்டத்தில்
முப்பதுக்கும் மேற்பட்டோர் கைதாகி மாலை விடுதலையானார்கள்.
ஊரில் வெயில் கொளுத்த துவங்க விட்டது எனலாம்.
நேற்றும் நல்ல வெயில்,
இன்றும் அதுபோல நல்ல வெயில்.
மார்ச் முதல் வாரமே இப்படியா?
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
3/8/2010 2:09:10 PM
மதுக்கூரிலிருந்து................
அன்பு நண்பர்களே,15 நாள் விடுமுறையில் ஊர் வந்துள்ளேன், நமதூரின் இன்றைய நிலவரம் நேற்று இருந்ததைவிட இன்று வெயிலின் தாக்கம் குறைவு,அடித்து கொலுத்தும் அனலை கண்டால் அரபு நாடு அம்சமான நாடாக தெரிகிறது,மேலும் விபத்துக்குள்ளாகி தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த நமதூர் என் எஸ் எம் பஷிர் சாச்சா(பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட்)அவர்கள் நேற்று இரவு வீடு திரும்பினார்கள்,காலில் அருவை சிகிச்சை செய்து ஸ்டீல் வைத்துள்ளார்கள்,அவர் பூரண குணம் அடைய நாம் அனைவரும் பிரார்த்திர்ப்போம்.
மேலும் புதிதாக தொடங்கிய மதினா சூப்பர் மார்க்கெட் சிறப்பாக செயல்படுகிறது அதில் இருப்பவர்கள் ஆர்வமாக சுறுசுறுப்புடன் உள்ளார்கள் அவர்களின் முயற்சி வெற்றியடைய இணையம் சார்பாக வாழ்த்துக்கள்,
நமதூரில் பல தெருக்களில் நமது பிரசிடென்ட் அவர்களின் முழு முயற்சியால் சிமென்ட் ரோடு உருவாகிவருகிறது,உடல் நலம் விசாரிக்க வரும் அதிகாரிகளிடத்தில் அக்கறையோடு ஊரில் நடைபெரும் ஆக்கபணிகளை பற்றி விசாரித்துவருகிறார்,அதை காணும் பொழுது நமக்கு மிகச்சிறந்த தலைவர் கிடைத்த திருப்தி ஏற்படுகிறது,அவர்களின் பணி சிறக்க நாம் அவரை வாழ்த்துவோமாக.
H.R. Akbar Ali E-mail: hrmanson_@gmail.com City: Madukkur Country: India
3/4/2010 3:36:49 PM
Test Message Please Ignore
info E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE
3/2/2010 5:55:58 PM
Job Market booming up in India.
Hai all As we see that the Job Market is booming up , I request all our job seekers to equip themselves for the next march . I do see that there are opening in all sectors here in Bangalore and other places. Also our blooming students to plan there career according rather hunting in the forest for a job. Make use of the valuable time and the resources available. All the best .
Regards
Siddharthan Bangalore: siddharthan.vp@gmail.com
Siddharthan E-mail: siddharthan.vp_@gmail.com City: Bangalore Country: India
3/2/2010 10:26:04 AM
சிந்தனைக்கு...
தியாகம் செய்யவும் நன்றி கூறவும்
மன்னிக்கவும் தெரிந்து கொண்டு விட்டால் போதும்.
மகிழ்ச்சியையோ அமைதியையோ தேடி ஓட வேண்டியதில்லை.
அவை நம்மை தேடி வரும்.
- ஜோச்ப் நியூட்டன்.
சுறுசுறுப்பான செயல்பாடுதான்
கவலையை மறக்க உதவும் மருந்து;
உழைப்பில் களைப்பை நீக்குவதே
உன்னதான வழி.
உன் முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பற்றி கவலைப்படாதே;
அவர்களுக்கு நீ
இரண்டு அடி
முன்பு இருக்கிறாய்
என்று பெருமை படு.
-ஹிட்லர்
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
3/2/2010 10:13:03 AM
அவஸ்தைகள் பலவிதம்
சமீபத்தில் நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து
எனக்கு ஒரு வீடு கட்ட இடம் வேனும்,
நல்ல இடமாக வந்தால்
சொல்லுங்கள் என சொல்ல,
ஒரு சில தினங்களில் நாம் அவரிடம் இடம் சொல்ல,
பத்திர செலவோட எவ்வளவு வரும் என கேட்க,
உத்தேசமாக நாம் சொல்ல,
சுமார் சில லட்சங்கள் என...
அப்போது அந்த நண்பர் சொன்னார்,
நான் ஏதாவது வங்கியில்
பணம் ஏற்பாடு செய்து விட்டு,
உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் என..
என்ன வேதனை..
வீடு கட்ட, வீட்டை புதுப்பிக்க,
இது போன்ற வேலைகளுக்கு
கடன்கள் வாங்கிய காலம் போய்,
இன்று இடம் வாங்குவதற்கே
வங்கி கடன் வாங்கும் நிலை.
இதற்கு என்ன காரனம்..
நமதூரில் சமீப காலமாக அதிகரித்த
வீட்டு மனைகள் விலை அதிகரிப்பு தான்.
நானும் சில ஊர்களில் பார்த்தேன்.
அதே போல கோடை வாழிடங்களில்
இடங்களின் விலையை பார்த்தேன்.
ஆனால், நமதூரில் விலை உயர்ந்த சதவீதத்திற்கு அளவு எந்த இடங்களிலும் உய்ரவில்லை.
இதற்கான காரனங்கள் என்ன என நாம் ஆராய்ந்தால்,
அதில் முக்கியமான காரனங்கள்..
1)இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் இல்லாததால், தனியாக வீடு கட்டத்தொடங்க
வீட்டு மனைகளின் தேவைகள் அதிகரித்தது.
2) நமதூரில் அதிகரித்த,
இடம் விற்று வாங்கும் தரகர்கள்.
3) அடுத்து வெளி நாடு வாழும் தமிழர்கள்
தனது முதலீட்டை வங்கிகளில் இருந்து மாற்றி இடங்கள் வாங்க துவங்கியது.
இந்த மூன்று காரனங்களினால் தான்
வீட்டு மனைகள் உயர்ந்தது என சொல்லலாம்.
தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால்
காலப்போக்கில் நமதூரில் கூட,
பெரிய நகரங்களின் வாழ்க்கைப்போல
அடுக்கு மாடி குடியிருப்புகள் வரத்துவங்கலாம்.
இதில் நாம் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
இடங்கள் பற்றாக்குறை வரும்போது
இது போல வருவதை நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் எல்.ஐ.சி.கூட
வீட்டுக்கடன் அலுவலகத்தை
நமதூரில் திறந்துள்ளது.
இது போல காலப்போக்கில்,
எஸ்.பி.ஐ. , ரெப்கோ போன்றவைகள் கூட
தனது வீட்டுக்கடன் அலுவலகத்தை துவங்கலாம்.
இன்றைய கால சூழலில் இந்தியா போன்ற நாடுகளில்
விலைவாசிகள் மட்டும் உயரவில்லை.
வாழ்க்கை தரம் மட்டும் உயரவில்லை.
வீட்டுமனைகளும் உயர்ந்தது
காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
3/1/2010 2:55:05 PM
Tea Time..
நலம் நலமறிய
ஊரில் அனைவரும் நலம்.
நல்ல வெயில் தொடங்கிவிட்டது.
மார்ச் முதல் வாரமே வெயில் தெரிகிறது.
இருந்தாலும் அதிகாலை நேரங்களில்
பனித்திரை நமது ஊரை அழகாக போர்த்தித் தான் வைக்கிறது.
முடிந்தால் நல்ல ஒரு புகைப்ப்டம் பதிவு செய்கிறேன்.
'கவிஞன் கண்டாலே கவிதை..'
என்ன ஊரிலே போகுது life..
மக்கள் நடமாட்டம் என்பது
கடைவீதிகளில் குறைவு தான்.
மாலை நேரங்களில் மெயின்ரோடு மட்டும் பரபரப்பாக காணப்படுகிறது.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
2/28/2010 2:26:14 PM
சிலியில் பயங்கர பூகம்பம்: பசிபிக் கடலில் சுனாமி
சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலி அருகே பசிபிக் பெருங்கடலில் மிக பயங்கர நிலநடுக்கம் [^] ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலி, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் சுனாமி அலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜப்பான் புவியியல் மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை சிலி அருகே உள்ள கன்செப்சியான் நகர் அருகே கடல் பகுதியில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரி்க்டர் அளவுகோளில் 8.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சிலியில் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதில் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிர்ப் பலி மிக மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடு்க்கப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி முழுவதும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மின்சாரம் தடைபட்டுவிட்டதால் சர்வதேச விமான நிலையம் உள்பட சிலியின் பெரும்பாலான விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகியிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
1.5 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் உருவாகி தென் அமெரிக்காவுக்கு வடக்கிலும் தெற்கிலுமாக மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் பயணித்து வருவதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது.
இதையடுத்து பசிபி்க் பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ்சிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரமும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் சிலிக்கு அருகே உள்ள கொலம்பியா, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் தூரத்தில் உள்ள ஹவாஸ் தீவுகள், அண்டார்டிகாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டுக்குப் பின் உருவான மிகப் பெரிய பூகம்பங்களில் 5வது பூகம்பம் இது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே சிலியின் தென் பகுதிக்கு சுனாமி ஆபத்து நீங்கிவிட்டதாக அந் நாட்டு கடற்படை தெரிவித்துள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது
info E-mail: info@mkr City: mkr Country: tn
2/10/2010 10:09:58 PM
Tea Time..
அன்பானவர்களே
நலம் நலமறிய
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஊரில் அதிக வெயில் இல்லை
அதே நேரம் இரவு நேரங்களில்
அதிகாலை விடியல்களில் பனிக்காலம் தான்.
இன்னும் பதினைந்து நாட்களுக்கு
இது போல இருக்கும் என சொல்கிறார்கள்.
புதியதால ஒரு இனைப்பு சாலை
அதாவது புதுத்தெருவில் இருந்து சிரமேல்குடி ரோடு.
முகைதீன் மரைக்காயர் வீட்டில் இருந்து
புதுக்குளம் செல்லும் இனைப்பு சாலை
சிமென்ட் ரோடாக உயர்த்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாம் நன்றியை நமது சட்ட மன்ற உறுப்பினருக்கு தான் சொல்லவேண்டும்.
கீழவீதி சங்கத்தின் புதிய கட்டிடம் திறந்தார்கள்.
நிகழ்ச்சிகள் இனிதே நடந்தது.
சிறப்பு பேச்சாளராக சகோ. பேராசியர்
அப்துல் காதர் (அதிரை)அவர்கள் வந்து இருந்தார்கள்.
சமீபத்தில் மனித வள மேம்பாட்டுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஒரு ஆச்சர்யமான ஒரு தகவல் கிடைத்தது,
என்னவெனில், அலைபேசிகளில் உள்ள கேமராவை கண்டுபிடித்து உலகத்திற்கு
அறிமுகபடுத்தியவர் வேறு யாருமல்ல.
இந்தியர் தான். அதுவும் தமிழர்.
மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞர்.
என்ன ஆச்சர்யமான தகவல்.
வியக்கதக்க செய்தி. wowwwwww.....
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
2/4/2010 4:59:37 PM
விளம்பர செய்திகள்
அன்பானவர்களே!
குறைவான செலவில் தாயகத்தில் இருந்து
'உம்ரா' செல்ல தொடர்பு கொள்ளவும்.
முதல் பயணம் இன்ஷால்லாஹ்
மார்ச் மாதம் இறுதி வாரமும்
இரன்டாம் பயணம் இன்ஷால்லாஹ்
ஏப்ரல் இறுதி வாரமும் செல்கிறது.
மொத்தம் பதினைந்து நாட்கள்.
ரூபாய் 50,000.00 மட்டும்.
மேலதிக விபரங்கட்கு +91 9043831275
வேலை வாய்ப்பு செய்திகள்:
REF ; 001
கவரிங் கடையில் பணிபுரிய பெண் தேவை.
நல்ல சம்பளம் கொடுக்கப்படும்.
அலைபேசி ; 9043831275
REF ; 002
செல்போன் கடையில் வேலை செய்ய பெண்கள்
இரன்டு பேர் தேவை.
அலைபேசி ; 9043831275
REF ; 003
புதியதாக துவங்க இருக்கும்
நிறுவனத்திற்கு
ஆண்கள்/ பெண்கள் தேவை..
குறைந்த பட்ச கல்வி தகுதி
ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் அறிவும் அவசியம்.
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல் ;'anwaronline@in.com'
அலைபேசி ; 9043831275
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
2/1/2010 10:40:34 AM
Tea Time..
ஆத்மார்த்த நட்புகளே
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
இப்போது தான் 2010 பிறந்தது
அதற்குள் சனவரி மாதம் கடந்து விட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
கூதலான மார்கழியும்
நீளமான ராத்திரி என்றால்
அடுத்து வந்த தை திங்களோ
தரையெல்லாம் குளிர
அனைவரும் அல்லல் படுவது அன்றாடம்
காரனம், குளிர் நாட்களில்
பனி பொழியும் இரவுகளினால் மட்டும் பாதிப்பு அல்ல
இதோடு சேர்த்து மாசுகட்டுப்பாடும் பல நோய்களை தூண்டுகிறது.
கடந்த வருடங்களை விட இந்த வருடம்
தமிழகத்திலும் குளிர் அதிகம் தான் என்பது உண்மை.
நேற்று நமதூரில் த.மு.மு.கவின்
அவசர ஊர்தி அர்ப்பனிப்பு நிகழ்ச்சி நடந்தது.
நல்ல ஒரு சமய நல்லிணக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
அரசியல் சார்ந்த மக்களை அழைக்காமல்
நமது சுற்று வட்டார கிராமங்களில் உள்ள
ஊர் பெரியவர்களை மட்டும் அழைத்து நடத்தப்பட்ட
நிகழ்ச்சி. மாலை 6.50 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி
இரவு 9.45க்கு நிறைவுற்றது.
அவசர ஊர்தியை அழைக்க
அலைபேசி எண் 9566 99 9798
மாணவ பத்திரிகையாளர் திட்டம்
அன்பான நமது இனைய நண்பர்களே
உங்களுக்கு இனையத்தில் எழுத வேண்டும்
இனையத்தில் உங்கள் எழுத்துக்கள் பதிய வேண்டும்
இனைய உலகில் உலா வர வேண்டும் என விருப்பமா?
இதோ ஒரு அரிய வாய்ப்பு
நமது மதுக்கூர் இனைய தளம்
மாணவ பத்திரிகையாளர்களை உருவாக்க இருக்கிறது.
இனைய விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
1/27/2010 5:16:42 PM
நாட்டின் அதாங்க
நம்ம தாய் திரு நாட்டின்
61வது குடியரசு தினம் கொண்டாடினோம்.
குண்டு துளைக்காத மேடையில் முக்கிய தலைவர்கள் இருந்தனர்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதால்,
சரி அது போகட்டும்..
இந்த 61வது குடியரசு தினம் முதல்
மக்கள் தங்கள் அலுவல்களை சுலபமாக வழி வகுக்கப்படுமா?
என்பது உங்கள் சிந்தனைக்கு தர விரும்புகிறேன்.
உதாரனமாக..
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இல்லை.
சரி அதற்காக தனியாக ஒரு ஆள் வருவார் என்றார்கள்.
அவரும் வந்தார்.. கேட்டதற்கு அது வி.ஒ. அலுவலகத்தில் தான் செய்யவேண்டும்
என சொல்லிவிட்டு அவர் போய்ட்டார்,
சரி என அங்கே கேட்டதற்கு இங்கே இல்லை அவரிடம் தான்
கேட்க வேண்டும் என அவர்கள் சொல்ல..
நண்பர் ஒருவரை சந்திக்கும்போது
பேரூராட்சியில் இதற்கு என
விண்ணப்பம் இருக்கு அதை எழுதி கொடுத்தால் போதும்
என சொல்ல அங்கே விரைந்தால்...
(மூச்சி வாங்குதடி முத்துப்பேச்சி...)
அவர்கள் கூலாக...
நாங்கள் இருப்பதை மட்டும் சரிபார்ப்போம்
நீங்கள் புதியதாக பதியவேண்டும் என்றால்
தாலுகா ஆபிஸ் தான் போகனும் என சொல்ல..
....)))))))))))))))
இப்படி ஓரளவு விபரம் தெரிந்தவர்களையே அலைக்கழிக்க
ஒன்றும் அறியாத பாமர மக்களை
இந்த அரசு அதிகாரிகள் என்ன பாடுபடுத்துவார்கள்.
அட தேவுடா...
மக்களை மடையர்களாக்க...
இலவச திட்டங்கள்..
வாக்கு வாங்க பணம்..
யாரு இதை பத்தி எல்லாம் கவலை படப்போறா?
சமீபத்தில் ஒரு கடற்கரை பட்டணத்தில்
தேர்தல் நடக்கும்போது
நம்ம மக்கள் மார்க்க அறிஞர்களிடம்
சந்தேகம் கேட்க
'ஏன் ஆலிம்ஸா அந்த பணம் நாம வாங்கலாமா?
அது கூடுமா? கூடாதா?
ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
அட உங்க வீட்டுல பசு மாடு பால் கறக்க
நீங்க வாங்கலைன்னா
அந்த கவுன்சிலர் தூக்கிபோட்டு முழுங்கிட்டு
பாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏப்பம் தான்.
சரி இதற்கு தான் இப்படி என்றால்
கடவுச்சீட்டு அலுவலகம் போய்
அது சரி இல்லை
இது சரி இல்லை என திரும்பும் மக்கள்
அதே மாதிரி
பிறப்பு இறப்பு சான்றிதழ்
ஒரு அம்மணிக்கு மாற்று சான்றிதழ்
(transfer certificate) வேண்டுமாம்.
எந்த வருசம் முடித்தது என ஞாபகம் இல்லை
காமாட்சி அம்மா டீச்சர் என பெயர் மட்டும் ஞாபகம்
என்னமோ போங்க ஒவ்வொரு வேலைக்கு இது போன்ற
ஏராளனமான லொள்ளுகள்...
ஆனால் கேட்கும் போது அழகாக பதில் சொல்வார்கள்
குடும்ப அட்டை நகல் இருந்தால் போதும் என..
அதை கொண்டு போய் காண்பித்தால்
இதிலே உங்க போட்டோ இல்லையே?
அட புண்ணாக்கு?
இதில் என்ன குரூப் போட்டோவா ஒட்ட முடியும்?!
யாராவது ஒரு போட்டோ தானே தர முடியும்?
குடும்ப அட்டை நகல் கொடுத்து
நாம் ஒரு சிம்கார்டு வாங்க முடியாத நிலை
சரி இது போகுது நம்ம தொலை தொடர்பு இருக்கே?
அங்கே இதை விட நகைச்சுவைகள் கூடுதல்?
கஸ்டமர் சர்வீஸ் என்றால் என்ன என தெரியாத மக்கள்?
என்னமோ போங்க...
61 வது குடியரசு தினம் நகர்கிறது.
இந்தியா ஒளிர்கிறது
கொஞ்சம் நிதானமான நாடு
நாம தான் பொறுமையா இருக்கனும்.
சாரே ஜ்ஹான்சே அச்சா..................
வெளி நாடுகளில் வாழும் மக்கள்
தாயகம் வரும் போது
மறவாமல் அஞ்சலக அடையாள அட்டை
அதே போல பான்கார்டு இரண்டும் அவசியம்
இரண்டையும் விண்ணப்பிக்குமாறு எனது ஆலோசனை.
anwar E-mail: anwaronline@In.com City: mkr Country: tn
1/26/2010 2:30:27 PM
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
நமது தாய் நாட்டின் குடியரசு விழா
இன்று சிறப்பாக நமதூரில் கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே இதற்காக ஆர்வமுள்ளவர்கள் தயாராக
கூதலான காலைப்பொழுதையும் பொருட்படுத்தாமல்
அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாது
காங்கிரஸ் கட்சியினரும் கொடியேற்றி
நமதூரில் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
1/24/2010 9:18:16 AM
Nestomalt time..
இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு
Sri Lankan presidential election, 2010
January 26, 2010 (2010-01-26)
அதிபர் தேர்தல் அடுத்த சில நாட்களில்
நடைபெற இருக்கிறது. அதாவது சனவரி 26ம் திகதி.
சரி நடக்கட்டும்.. விடுதலைபுலிகள் இல்லாமல்
உள் நாட்டு போர் இல்லாமல்
இனக்கலவரம் இல்லாமல்
தேர்தலை முதன் முறையாக சந்திக்கிறது.
ராஜபக்சேயா ? இல்லை சரத் பொன்சேகாவா என தெரியாத நிலை.
யார் வேண்டுமானாலும் வரட்டும்.
ஆனால், உண்மையாக சன நாயகம் அங்கே மலரவேண்டும்.
ஒரு எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காத புத்தகுருக்கள் வாழும் நாடு.
அங்கே தான் அமைதி நிலவ வேண்டும்.
இருந்தாலும் இங்கே ஒன்று நாம் சொல்ல வேண்டும்.
தேர்தல் வரும் முன் அனைத்து தமிழ் மக்களும்
அவர்கள் வாழ்ந்த ஊருக்கு அனுப்பிவிட்டு
அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததும் தேர்தல் நடத்தனும்.
அப்படியா அங்கே நடக்கிறது.
இன்னும் போரில் புலம் பெயர்ந்த தமிழ்ர்கள்
அகாதி முகாம்களில் அடைக்கப்பட்ட நிலை.
இன்னும் ஊடகங்கள் சுதந்திரமாக அங்கே உலாவ முடியாத நிலை.
பல வெளி நாட்டு பத்திரிகையாளர்கள் செல்ல முடியாத சூல்னிலை.
இன்னும் வட கிழக்கு மாகாணாங்கள் மறு சீரமைப்பு செய்யாத நிலை.
நாம் கேள்விப்பட்ட அழகான ஊர்கள் எல்லாம்
எந்த நிலையில் இப்போது இருக்கிறது என சொல்ல முடியாத நிலை.
சரி நெஸ்டொ மோல்ட் என்றால்?
அதானே உங்க கேள்வி?
சிலோனில் இருந்து தயாராகும்
நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
இது உலகில் வேற எங்கும் தயாரிக்கப்படுவதில்லை.
ஆகவே இலங்கை மக்களுக்கு மட்டும் தான் நெஸ்டொமோல்ட் தெரியும்.
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
1/18/2010 9:47:24 AM
Tea Time..
அன்பான அனைவருக்கும்
நலம் நலமறிய பேராவல்,
ஆத்மார்த்த நட்புகளே!
சிங்கையில் இருந்து நண்பர் அழைத்து
பொங்கல் புகைப்படங்கள் அனுப்பியதற்கு நன்றி சொன்னார்.
வளைகுடா நண்பர் அழைத்து
பிரதமரின் கடிதம் இனிமை என்றார்.
அதே போல பல்கலை கழக ஆசிரியர் ஒருவர்
பிரதமரின் கடிதத்தை படித்து
என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது என்றார்.
அதே போல நாளைய விடியலுக்காக கட்டுரை அழகு என சொன்னவர்களும் உண்டு.
உங்கள் குசலம் விசாரிப்புகளுக்கு
உங்களது பாசத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இனிய புத்தாண்டு துவங்கியது
நமது நம்பிக்கையும் துளிர்விடுகிறது.
என்ன என்று தானே கேட்குறீங்க?
அட ஒன்னும் இல்லைப்பா?
சும்மா மனிதனின் மனம் தான்
தை பிறக்கட்டும் என்பார்கள்,
சில நாட்கள் இனையத்தில் பார்க்காமல்
என்னை விசாரித்ததற்கு நன்றிகள்.
இனிவரும் காலங்கள் நடந்ததை நினைக்காமல்
நடப்பவைகளை நினைப்போம்
ஒரு குறுஞ்செய்தியில் வந்த செய்தி..
beautiful words..
'prayer is not an attempt to
change the god mind,
but its an attempt to let God change our mind!'
wowwwwwwwww....
புதிய வருசம் துவங்கியதும்,
இரன்டு முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தது.
சரி இரன்டுமே முக்கியமானது
பார்க்கனும் என நீண்ட நாள் ஆவல்.
ஒன்று சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி
இரன்டு திருவையாறு இசைவிழா
ஆனால் என்ன, இந்த முதல் வாரத்தில்
சேர நாட்டில் இருந்து அழைப்பு வந்தது.
ஆகையால் அங்கே பறந்தாச்சி.
அங்கே நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வந்து
97வது இந்திய அறிவியல் மாநாட்டை
துவங்கி வைத்து உரையாற்றினார்.
இதைப்பற்றி முடிந்தால் கட்டுரை
அல்லது புகைப்படங்கள் அனுப்புகிறேன்
நமது இனையத்தில் நீங்கள் பார்க்கலாம்.
அட மறந்து போச்சி..
இடையில் இங்கே வந்து எழுத
மனமும் வேதனைப்பட்டது.
வேதனையை உங்களுடன் பகிர்வது
மனப்புழுக்கத்தை விலக்கும்.
அப்படி என்ன என்று தானே கேட்குறீங்க?
எனது நண்பருடன் தொலைபேசியில் உரையாடும்போது சொன்னார்
எதுக்கோ பெயர் மாத்திட்டாங்க என...
நொந்து நூடுல்ஸ் ஆனது தான் மிச்சம்.
எனக்கே இப்படி என்றால்,
நீங்கள் எல்லாம் எப்படி வேதனை பட்டு இருப்பீர்கள் என சொல்லவேண்டியதில்லை.
நம்ம தமிழ் கவிஞன் சொன்னது தானே
'வாழ்வது வரும் போது
சொந்த மொழி பேசி வருபவர் கோடியடி
உயர் தாழ்வு வரும்போது பெற்ற மகன் கூட...''
என்ன செய்வது..
காலச்சக்கரத்தை சுழலவிடுபவன்
நமக்கு மேலே இருந்து இதை செய்கிறான்.
ஆகையால், பொறுமையாக தான் இருக்கனும்.
ஆனால் நமக்கு இது என்ன நிரந்தரமா?
இல்லையே?
இருபது வருசமா நஷ்டத்தில் இருந்த
'ஹாங்காக் ஷங்கை கார்ப்பரேஷன்
எழுந்து நிற்கலையா?
இந்திய இரயில்வே
நம்ம கண்முன்னாடி நிற்கலையா?
என்னமோ போங்க ...
'அசத்தப்போவதில்' சொல்வது போல
அது போகட்டும்.
ஊரில் பொங்கல் இனிதே நிறைவேறியது.
விளையாட்டுப்போட்டிகளும்
பல இடங்களில் நடைபெற்றது.
சமத்துவ பொங்கலும்
பேரூராட்சியில் நடைப்பெற்றது.
அந்த அளவுக்கு குளிர் இல்லை.
கலைஞர் காப்பீட்டு திட்டம்
விடுபட்ட பட்டியல் சேர்ப்பு
நேற்று நடைபெற்றது..
வேற என்னங்க?
இப்படியே மொக்கை போடச்சொன்னால் போடலாம்.
வேற வேலை இருக்கே........
அடுத்த இதழில் சந்திப்போம்.
சமீபத்தில் பண்பலையில் ரசித்த பாடல் ஒன்று..
உங்களுக்காக சில வரிகள் மட்டும்ம்..
just relax have a song
'வாழ்க்கையை யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா
யோசிச்சி பாருங்கடா
எல்லாரும் ஒன்னா சேருங்கடா
இருக்குறவரைக்கும் அனுபவிக்க
இளமையை ஏத்துக்கடா
வருகிற வரைக்கும் லாபமடா
வசதியை தேடுங்கடா..
அட ஜல்சா பன்னுங்கடா
உஜாலா ஜில்பா காட்டுங்கடா...'
அட ஜல்சா பன்னுங்கடா
உஜாலா ஜில்பா காட்டுங்கடா...'
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn
1/14/2010 2:09:40 PM
தமிழர்கள் அனைவருக்கும் தமிழனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்,ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழர்கள் அனைவருக்கும் மற்றுமொறு மகிழ்ச்சியான செய்தி தங்கள் செவி குளிர,மனம் குளிர வைக்க வருகிறது எfப் எம் ரேடியோ,ஆம் நண்பர்களே விரைவில் எதிர் பாருங்கள் 89.5 என்ற அலைவரிசையில்,தற்போது அருமையான பாடல்களாக தொடர்ச்சியாக ஒலிபரப்பிவருகிறார்கள்.கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
என்றும் அன்புடன்,
அக்பர் அலி HR
HR,Akbar Ali Dubai
HR,Akbar Ali E-mail: akbar City: Dubai Country: U.A.E
1/14/2010 10:15:03 AM
'செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'
அனைவருக்கும்
இந்த நன்னாளில்
பொங்கும் நல்வாழ்த்துக்கள்
mkr E-mail: mkr@madukkur City: mkr Country: tn
1/9/2010 10:23:06 AM
துபாயில் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ முகாம்
துபாயில் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவ முகாம்
துபாய் : துபாய் இந்திய பெண்கள் அமைப்பு தொழிலாளர்களுக்காக ஏழாவது இலவச மருத்துவ முகாமினை 08.01.2010 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்திய கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் நடத்த இருக்கிறது.
இம்முகாம் இரண்டாயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெறுவோருக்கும், மருத்துவ காப்பீடு பெற வசதியற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் எதுவம் சாப்பிடாமல் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே மருத்துவரிடம் காண்பித்த ரிப்போர்ட் இருப்பின் அதனை அவசியம் எடுத்து வரவேண்டும்.
மருத்துவ முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை 050-1152021 அல்லது 056 -6945125 ஆகிய அலைபேசியில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Abdul Mohamed Bijili E-mail: biji_bijili@rediffmail.com City: Sharjah Country: U.A.E
1/6/2010 3:52:32 PM
இனிய இணையவாசிகளே
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் எப்படி உள்ளது
வழக்கமாக 09 என எழுதுவதை 10 என எழுத தொடங்கி விட்டிர்களா
ஊரில் வெயில் அவ்வளவாக இல்லை.
கடுமையான பனி பொழிவு காணப்படுகிறது.
நமது சோழ தேசத்தில் அறுவடை ஆரம்பமாகி உள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பமாகி விட்டன.
நாளைய விடியலுக்காக ... கட்டுரையின் வாயிலாக
பொருளாதார வீழ்ச்சியின் கோர நிகழ்வுகளை அன்வர் அண்ணன் அவர்களும்
புத்தாண்டு செய்தியாக நமது ஊருக்கு பல நன்மைகளை செய்திட
மதுக்கூர்.காம் ஒரு தீ க்குச்சியாக விளங்கும் என தேவா அண்ணன் அவர்களும்
அருமையாக எழுதி இருந்தீர்கள். மிக நன்று
நமது வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்,
நமது எண்ணங்களை மிக உயர்வாக்கி
(For Ex.BURJ DUBAI)
வாழ்வில் பல வண்ண வண்ண கனவுகளோடு இன்புற்று இனிதே
வாழ்வை வாழ்வோம் . வாருங்கள்....
- I.Mohamed Sulthan madukkur
I.Mohamed Sulthan E-mail: Sultan City: Madukkur Country: India
1/5/2010 2:29:16 PM
வணக்கம் நட்புகளே...
நாம் சில தினங்ககளுக்கு முன் திரு ஆர் இளங்கோ அவ்ர்களின் துபாய் வருகை பற்றி அறிவித்திருந்தோம் அவர் தனது பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்றிரவு தாயகம் திரும்பினார் அவ்ருக்கு மதுக்கூர்.காம் சார்பில் வாழ்த்தி வழிய்னுப்பு மரியாதை செய்யப்பட்டது
---.மதுக்கூர் தமிழரசன்
மதுக்கூர் தமிழரசன் E-mail: rajup City: Dubai Country: U.A.E
1/5/2010 2:28:43 PM
வணக்கம் நட்புகளே...
நாம் சில தினங்ககளுக்கு முன் திரு ஆர் இளங்கோ அவ்ர்களின் துபாய் வருகை பற்றி அறிவித்திருந்தோம் அவர் தனது பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்றிரவு தாயகம் திரும்பினார் அவ்ருக்கு மதுக்கூர்.காம் சார்பில் வாழ்த்தி வழிய்னுப்பு மரியாதை செய்யப்பட்டது
---.மதுக்கூர் தமிழரசன்
மதுக்கூர் தமிழரசன் E-mail: rajup City: Dubai Country: U.A.E
1/4/2010 10:11:44 AM
அன்பான வாசகர்களே....
நமது இணையத்தின் வாசகர் வட்ட சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.01.2010) மாலை 7 மணி அளவில் சிவஸ்டர் பவன், கராமா (துபாய்) விழா அரங்கில்(மாடியில்) நடைபெறவுள்ளது. நமது வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர் உறவுகள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் கைபேசிகளை தொடர்பு கொண்டு உங்களின் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.
S. தேவா - 055 4208447
H.R. அக்பர் அலி - 050 7942680
P. தமிழரசன் - 050 5149378
madukkur.com E-mail: a1@madukkur.com City: Madukkur & Dubai Country: India & U.A.E
1/2/2010 5:57:54 PM
அன்பான வாசகர்களே....
நமது இணையத்தின் வாசகர் வட்ட சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.01.2010) மாலை 3 மணி அளவில் துபாயில் நடைபெறவுள்ளது. நமது வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர் உறவுகள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் கைபேசிகளை தொடர்பு கொண்டு உங்களின் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.
S. தேவா - 055 4208447
H.R. அக்பர் அலி - 050 7942680
P. தமிழரசன் - 055 5149378
madukkur.com E-mail: a1@madukkur.com City: Dubai Country: U.A.E
1/2/2010 12:43:09 PM
வணக்கம் நமதூர் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திரு. ஆர்.இளங்கோ அவர்கள் துபாய் வருகை தந்துள்ளார் , அவரது வரவு நல்வரவாக மதுக்கூர் .காம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, மதுக்கூர்.காம் சார்பில்அவருடன் நடந்தச சந்திப்பு நிகழ்வுகள் வரும் நாட்களில்.........அவருடன் தொலைபேச விரும்புபவர்கள் மதுக்கூர் தமிழரசனை தொடர்பு கொள்ளவும் எண்:050 5149378
Madukkur Tamilarasan dubai rajuptamil@gmail.com
Tamilarasan E-mail: rajuptamil_@gmail.com City: Dubai Country: UAE
12/31/2009 8:50:58 AM
நாளைய விடியலுக்காக..
உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் வந்து
உலகமே தலைகீழாக மாறிப்போய்
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்
என வியக்கும் அளவுக்கு உலகத்தின் நிலை ஆனது.
2008 ஜூலை, ஆகஸ்ட் முதல் ஏற்பட்ட
அமெரிக்க வங்கிகளின் நிலை,
வலுவடைந்து பெரும் சுனாமியை ஏற்படுத்தி உலகத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அழிவை ஏற்படுத்தியது..
அமெரிக்காவில் பல நகரங்களில்
மக்களின் வாழ்வே மாறியது.
அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தவர்கள்
எல்லாம் காடுகளில் சென்று வசிக்கும் நிலை.
எத்தனையோ முன்னனி நகரங்கள்
'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற
வள்ளுவனின் வாக்கைப்போல
அமைதியாக அடங்கிப்போனது.
இந்த பின்னடைவில் இருந்து இன்னும்
உலகம் எழவில்லை.
எனது நண்பர் ஒருவர் தகவல் தொழில் நுட்ப துறையில் புதியதாக தொழில் தொடங்கி
கையை சுட.. நிறுவனத்தை மூடிய நிலை..
இது நடந்தது சென்னையில் தான்.
அட என இதற்கே வியந்தா எப்படி?
இது போல ஏராள்னமா சம்பவங்களை சொல்லலாம்.
இந்த பொருளாதார தேக்கத்தில்
உலகம் முழுவதும் வேலை இழந்தோர்
எண்ணிக்கை சொல்லி உங்களை பயமுறுத்த விரும்பவில்லை.. இதற்காக பாதிக்கப்பட்டவர்களை,
நஷ்டமடைந்தவர்களை, சிரமப்பட்டவர்களை,
இறைவன் தண்டித்துவிட்டான் என நினைக்காதீர்கள்.
அப்படி சொல்லவும் வேண்டாம்.
ஏனென்றால்,
'காலச்சக்கரத்தை நாமே சுழலவிடுவோம்'
என்ற வேதவரிகளை மறக்கவேண்டாம்.
நம்ம தஞ்சாவூர்பக்கம் தான் சொல்வாங்களே?!
'முப்பது வருசம் வாழ்ந்தவனும் இல்லை
முப்பது வருசம் வீழ்ந்தவனும் இல்லை' என..'
ஆனால் உலகத்தின் நம்பிக்கை சற்றே துளிர்கிறது.
டிஸம்பர் இறுதி வாரத்தில் தொடங்கிய விடுமுறைகள் தொடர்கிறது.
இந்த வருடம் போகட்டும் என...,
பலரும் காத்திருக்கிறார்கள்..
பலரும் புதிய தொழில் தொடங்க,
2010 வரட்டும் என இருக்கிறார்கள்.
எப்படியோ 2009 ஒரு நஷ்டமான வருடமாக இருந்தது
என்பதில் வியப்பில்லை,..
சரி போகட்டும் என உலகம்
உற்சாகத்திற்கு தயாராகி விட்டது.
குடந்தை போன்ற நகரங்களில் கூட
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விளம்பரங்கள்.
மக்கள் நாளைய விடியலுக்கு தயாராகி
ஆட்டம் போட தயாராகி விட்டனர்.
ஆஸ்திரேலியாவின் ஒபேராய் ஹவுஸில் தொடங்கி
ஹாங்காக், ஷங்கைய், சிங்கை, சென்னை ,
துபாய் வழியாக
ஐரோப்பிய நாடுகள் வழியாக
அமெரிக்க நகரங்களை
இந்த புத்தாண்டு செல்ல இருக்கிறது.
காலத்தை குறை சொல்லாமல்
இறைவனை மறக்காமல்
வட்டி இல்லா பொருளாதரத்தை தேடி
இந்த உலகம் சென்று
ஆரோக்யமான காற்றை சுவாசிக்கட்டும்.
'every sunset gives us one day
less to live! but,
every sunrise give us,
one day more to hope!
so, hope for best.
have a lovely day!'
anwar E-mail: anwaronline@in.com City: mkr Country: tn49
1/18/2010 1:34:43 PM
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.
அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது
''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.
''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.
''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.
காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.
நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.
இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.
''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!
நன்றி........ ஆனந்த விகடன்
Sheik Fareed E-mail: reed_kmc@yahoo.co.in City: Dubai Country: UAE
2/9/2010 9:09:33 PM
E-mail: City: Country:
Go to Top