
சாலையோர என்வீடு...
வீட்டோர...புங்கை மரம்...
மரமிருக்கும் கிளிக்கூட்டம்...
ஒவ்வொரு அதிகாலை...
விடியலும்...இசைக்கச்சேரிதான் எனக்கு!
பிரம்ம முகுர்த்தத்தில் எழுந்து கொள்ளும்...
என்பகுதி விழிப்பு நிலையில்....
அவற்றின் குடும்ப பேச்சுக்கள்...
விழுந்தும் விழாமல்....
என் காதோராம்....கடந்து சொல்லும்.!
சில நாள்...பேசி சிரிக்கும்...
சில நாள் சண்டையிடும்...
பல நாள் காதல்கொண்டு...
மெதுவாய்....
கிசு கிசுக்கும்....
மனித அரவத்திற்கு முன்னே....
இரை தேடி....புறம் பறந்து செல்லும்....!
என் விடுமுறை நாளின்
எல்லா பகல் நேரமும்....
புங்கை மர கிளிக் கூட்டத்தோடு...
கரைந்து செல்லும்...!
கூட இரண்டு குயில் சேர்ந்து....
இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்...
பிரபஞ்சத்தின்....இணைக்கப்படா....
பகுதி போல.....கவலையின்றி...
தினம் பறக்கும்!
அதுவும் ஒரு விடியல்தான்...
அதிகாலை நேரம்...தான்...ஆனாலும்....சப்தமில்லை.....
ஏன் கடந்த இரவு இன்னும் ...
விடியவே இல்லையா...?
அனிச்சையாய் எழுந்த கேள்வியில்...
அர்த்தம் இருப்பதாய் தோணவில்லை...!
பாதி தூக்கத்தில்...
கலைந்தது என் கனவு.....
கிளி சப்தமில்லா காலையில்....
தகர்ந்தது...என் இரவு.....!
என்னாவாயிற்று...என் இசைக் கச்சேரிக்கு...
மனிதன் எழும் முன்னே எழும் ...
கிளிக் கூட்டம்..மறந்து போய் உறங்குகிறதோ?
காசு வாங்காமல்...கூவும் குயிலின்..
புத்தியை மாற்றிவிட்டது யார்?
காத்திருந்து....புரண்டு...புரண்டு....
சப்தம் இல்லா சூனியத்தில்...
என் உறக்கம் ஓடி ஒளிந்தது.....
கதவு தாள் திறந்து...கண் மடல் விரித்து...
வாசலோராம் நான் பார்த்து திகைத்து...
வீட்டினுள்ளே திரும்பிப்பார்த்தேன்.....
என் வீடுதானே இது..?
நேற்று வரை இங்கிருந்த
புங்கை மரம் ....எங்கே?
புங்கை மர கிளைகளுக்குள்....
குடியிருந்த கிளிகள் எங்கே?
சொல்லாமல் கொள்ளாமல் செல்ல...
மனிதரல்ல...மரமன்றோ....
உற்று நோக்கிய பின்....
சாலையோர சரிவில்....புங்கை மரம்...
பிணமாய் கிடந்தது.....
கிளிகள் குடியிருந்த கிளைகள்...
குண்டடி பட்ட குழந்தைகளாய்....!!!
அறிவியல் வளச்சியின்...தொலைபேசி...
பணியின்....அகழ்வாராச்சிக்காக....
வேரோடு.... பெயர்க்கப்பட்டு....
அதுனை இலைகளும் திறந்த விழிகளாய்...
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!
வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனது புங்கை மரம்...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
பாதியிலேயே...முடிந்திருக்குமே....!
வெட்டவெளி வானத்தை
வெறித்து பார்தேன்...எட்டும் வரை தேடினேன் ...
கிளிக்கூட்டம் காணவில்லை...
இரைச்சலில்லா...விடியல் சூன்யமாகிப்போனது...
உறக்கமில்லா இரவுகள்..தோறும்...
புங்கை மரம்...கிட்ட வந்து சலசலக்கும்
என் நினைவுகளில்..பேசி சிரிக்கும்..
கிளிக் கூட்டம்...காதலாய் கிசுகிசுக்கும்....
வெறுமையாய் விடியும்...காலைகள்....
ஏனோ என்னை தனித்து நிறுத்தும்.....!
வெறுமையால் நிரம்பி நிரம்பி.....
இதோ என் கால்கள்....வேறு வீடு தேடி.....
வாடகையின் பற்றி கவலையில்லை....
ஒரே ஒரு... நிபந்தனைதான்....
....
.......
........
......
"மரம் நிறைந்த வீடு
மனிதர்கள் குறைந்தாலும்
பறவைகள் அதிகமிருக்கவேண்டும் "
தேடலோடு.....தொடர்கிறது.... என் பயணம்!
வீட்டு வாசலில் இருந்த ஒரு புங்கை மரமும்...ஒரு கிளிக்கூட்டமும்...எனது அன்றாட நண்பராயினர்....ஒரு நாள் தொலை பேசி பணிகளுக்காக....இரவோடு இரவாக மரம் வெட்டப்பட்டு காலையில் கிளிக்கூச்சலில்லா ஒரு வெறுமையில்..... என்னுள் ஏற்பட்ட இயலாமையை எழுத்துக்களாய் கோர்த்திருக்கிறேன்.
ஏதோ சில அர்த்தங்கள் பிடி படலாம்....அல்லது பிடிபடாமலும் போகலாம்...அது வாசிப்பவரின் மனோபாவத்தை பொறுத்த விசயம்....கிளிகளின் கீதம்.......உங்களின்....சமகால சராசரி வாழ்க்கையை விட்டு கொஞ்சம் வெறு விதமாய் சிந்திக்க வைக்கப்போவது என்னவோ... நிஜம்தான்!
தேவா. S