பயணங்களில்.....

09qs8.jpg

இருக்கை தேடி அமர்ந்து

சற்று ஆசுவாசம் ..

அப்புறம் ? நீங்க ..எங்க ..

வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..

 

குறும்பு செய்யும் குழந்தை .

விழுந்து விடுவானோ

பெருமையும் சற்று

பயத்துடனும் தாய்

 

ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .

இப்பதான் ...கிளம்பிச்சு .

இன்ன பிற உரையாடல்கள் ..

 

கொஞ்சம் நேரம் ஆகட்டும் மாப்ள..

"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "

 

கடந்து செல்லும் சிற்றுண்டி

விற்பவனின் குரலிலும்

தெறிக்கும் பசி

 

பிச்சை எடுக்கவில்லையப்பா ..

பார்த்து கொடுங்கள்

மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்

பரிதாப பார்வையில்

பிச்சை பாத்திரம் ....

 

வெள்ளைத்தோல் காரியை

வெறித்து நோக்கும்

வெள்ளந்தி மனிதர்கள் ...

 

சேர்வதே நிச்சயமில்லை

எனினும்

திரும்பும் இடம்

பற்றிய கவலைகள் ..

 

பற்றியும் பற்றாமலும்

சுழன்று கொண்டேயிருக்கிறது

சக்கரம்