உன் விழிகளுக்காக காத்திருக்கிறேன்...!



ஒரு மழைக்கால....முன்னிரவின்..

இருண்ட வனமும்..

"சோ" வென்ற ..பெய்த...மழையும்....

நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!

 

***

 

காதலுடன் நீ பார்த்த...கடைசிப் பார்வை...

ஈட்டியாய் என் நெஞ்சை ...குத்திக் கிழிக்கிறது!

உன் உதட்டோர மச்சமும்...

நெற்றி விழும்..தலை முடியும்...

கூரான நாசியும்....

கவனமாய்...

என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!

 

***

 

ஒவியாமாய்...தலைசாய்த்து....

ஒய்யாரமாய்... நீ ... பார்க்கும்..

காவியக் காட்சியினை...

கவிதைகளால்...சொல்ல முடியாமல்..

மெளனத்தில்... தற்கொலை செய்து கொள்கின்றன....

வார்த்தைகள்...!

 

***

 

உன் விரல்களால்...

என் என் தலை கோதி....

சமாதி நிலைக்குள்...கண நேரம்....எனைத் தள்ளி....

கல கல சிரிப்பொலியால்..மீண்டும் எனை மீட்டெடுப்பாய்....!

 

***

உன் ஒவ்வொரு இமைத்துடிப்பும்....

ஒற்றை வரிக்கவிதை....

அதை வாசித்துக் கொண்டே...

கூடவே நகருகிறது...என் இதயம்..!

 

***

எல்லா வார்த்தைகளையும்....

வாசிக்க தெரிந்த....எனக்கு....

உன் பெயரை....மட்டும்....

சுவாசிக்கத்தான் தெரிகிறது....!

 

***

 

என் இமைகளுக்குள் நீ...இருப்பதால் தான்....

பகல் முழுதும்...உன்னைத் தொட்டு விளையாடியும்....

இரவுகளில் அணைத்துகொண்டும்...உறங்குகிறேன்!

 

***

 

உன் கண்ணசைவில் தான்...நகர்கிறது என் காலம்....

அதனால் தான்....விடியலுக்காய் காத்திருக்கும்...பறவைபோல...

உன் விழிகளுக்காக....காத்திருக்கிறேன்...!

 

***

 

எத்தனை எழுதி என்ன...

என் மொத்த கவிதையும்...

சத்தமின்றி தோற்றுப்போகிறது....
உன் மெளனம் என்னும் கவிதையிடம்...!



- dheva. S