ஹைக்கூ மாதிரி....
கடவுளும் மரமும் :

தன்னை
திட்டுபவனுக்கும்
அருள்
தருகிறது
கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல்
தருகிறது
மரம்.
ஆம்புலன்ஸ் :

அப்பாவுக்கு
நெஞ்சுவலி
எங்களோடு
சேர்ந்து தானும்
கதறுகிறது
சைரனோடு.
பயணச்
சீட்டு :

சீட்டு
இருக்கு
கண்டக்டர்
ஆனால்
சீட்டு தான் இல்லை
கால்வலியோடும்
காமெடி
செய்கிறார்
அந்த
82வயது முதியவர்.
காவ(லி)ல்
நிலையம் :

எப்போதும்
இருவர்
கையில்
ஆயுதங்களுடன் காவலில்
பாதுக்காப்பாய்
தான்
இருக்கிறது
காவல் நிலையம்.
கடவுள் தெரிகிறார்! :

பத்து
ரூபாய்
சேர்த்து
கொடுத்தேன்
இப்போது
பக்கத்தில் தெரிகிறார்
கடவுள்.
மறதி :

குடை
மறந்த நாள்
ஒன்றில்
மறக்காமல்
வந்து சேர்ந்தது
மழை.
நீங்களுமா..? :

ஆத்திரத்தில்
மனைவியை
அடிக்கபோகிறார்
அந்த “லாஃபிங்
தெரபி
டாக்டர்”.
அட! :

"உடம்பு
சரியில்லைங்க
ஆபரேஷன்
நாளைக்கு வெச்சிகலாம்."
அலுப்புடன்
போனை
வைத்தார்
டாக்டர்.
- collected by S. Dheva