அமீரகத் தமிழ்ச்சங்கத்தின்
10 ஆம் ஆண்டு நிறைவு
விழாவினை
ஒட்டி விஜய் டி.வி
கோபி நாத்தின்
இவர்களா? அவர்களா என்ற நிகழ்ச்சி
நடை பெற்றது.
நிகழ்ச்சியின் தலைப்பாக...வெளி நாட்டில்
வேலை செய்வது
சுவையா? சுமையா? என்ற தலைப்பில்
விவாதம் நடை பெற்றது.
விவாதாம் சூடாகவும்
விறு விறுப்பாகவும்
இருந்தாலும்...இந்த விழாவின்
நாயகன் கோபிநாத்தான்
என்பது அனைவருக்கும்
தெரியும்!
அவரின் தொடர்ச்சியான
உரையும்....தன்னம்பிக்கையும்,
உறுதியான
வார்த்தைகளும்
அவற்றின்
பின்புலத்தில்
அவருக்கு
இருக்கும்
மிகப்பெரிய
அறிவின் வெளிப்பாடக
இருந்தது!
அவரது சொற்பழிவின்
சில முக்கிய
கருத்துக்கள்
உங்களின்
பார்வைக்காக....

1) வாழ்க்கையை
முழுமையாக
ஏற்றுக்கொள்ளும்
மனோபாக்கியம்
வேண்டும்.
அது போலத்தான்
வெளி நாட்டு
வாழ்க்கையும்
அதில் சுகத்தை ஏற்றுக்கொள்ளும்
நீங்கள் அதனால் ஏற்படும் வலிகளையும்
ஏற்றுக்கொள்ளவேண்டும்.
2) வெளி நாட்டில்
வேலை செய்வது
ஒரு வேளை
சுமையாக இருந்தாலும்
அதை சுகமாக
ஆக்கிக்கொள்ளுங்கள்.
உதாரணமாக
திங்கட்கிழமை
முடிந்து
விட்டது என்று கவலைப்படாமல்...
நாளை செவ்வாய்கிழமை
என்று சந்தோசம் கொள்ளுங்கள்!
3) தேவைகள் உள்ளவரை உங்களுக்கு
வெளி நாட்டு
வாழ்க்கை
இனிக்கிறது.
உங்களின் தேவைகள்
முடிந்தவுடன்
கசக்கிறது.
இப்படியாக நிறைய
பயனுள்ள கருத்தகளை
பகிர்ந்து
கொண்டார். நடு
நிசி 12 தாண்டியும்
மக்கள் அவரின் கட்டுண்ட பேச்சில் கட்டுண்டு
போயிருந்தார்கள் என்பதுதான் உண்மை!
நிகழ்ச்சி
முடித்தவுடன்
நமது இணையம்
பற்றி
கோபியிடம் பற்றி ஒரு
சிறு அறிமுகம்
செய்தோம்
மேலும் அவரின் சமூக பணிகளுக்கு
நமது இணையம்
சார்பாக வாழ்த்துக்கள்
தெரிவிக்கப்பட்டது!
- மதுக்கூர்.com