மதுக்கூர்
to
பட்டுக்கோட்டை சாலை....

மதுக்கூரிலிருந்து
பட்கோட்டைக்கு இருசக்கர
வாகனத்தில்
செல்பவரா
நீங்கள்...? இந்த
கட்டுரை உங்களுக்குத்தான்...
மதுக்கூரிலிருந்து
பட்டுகோட்டைக்கு அன்றாடம்
இரண்டு சக்கர
வாகனங்களில்
சென்று
வருவோர்
எண்ணிக்கை
நாளுக்கு
நாள் அதிகரித்துக்
கொண்டுள்ள
நிலையில்...( நமது
ஊரில்
இருந்து 10 நிமிடத்தில் பட்டுகோட்டை
சென்றுவிடுவதாக
கேள்வி) பட்டுக்கோட்டை
செல்லும்
வழியில்
உதாரணமாக தளிக்கோட்டை
ரோடு மெலும்
ஆத்திக்கோட்டை
கேணிப்பாலம்
முதல்
பட்டுக்கோட்டை
கைகாட்டி வரை
உள்ள
சாலைகளின்
அமைப்பை
கவனித்தால்...அதில்
உள்ள
விபரீதம் புரியும்!
புதிய
சாலை
போடுகிறேன்
பேர்வழி என்று
அரசாங்கம்...பழைய
சாலைகளின்
மீது ஜல்லி
இட்டு மேலும்
மேலும் தாரை
ஊற்றி சாலையை
உயரமாக்கிவிடுகிறார்கள்.
அதனால் சாலை
பக்கத்தில்
உள்ள
மண்தரையை விட 10 செ.மீ ஆவது
உயரமாக
இருக்கிறது. பேருந்துகள்
அல்லது
லாரிகள்
வரும் போது
இரண்டு சக்கர
வாகன ஓட்டிகள்
சாலையைவிட்டு
கீழெ இறங்க
வேண்டியுள்ளது, அப்போது
வாகனம்
சறுக்கி கீழே விழுந்து
நேரடியாக
சாலையில்
வரும் பெரிய வாகனத்தின்
சக்கரத்திற்குள்
செல்ல வேண்டியதுதான்!
மிகவும்
ஆபத்தான இந்த
வகையான அமைப்பு
எத்தனை
பேருக்கு
பாதிப்பு
ஏற்படுத்தியது
என்று தெரியவில்லை.
சாலையிடும் போது
அதன்
பக்கவாட்டையும்
சமப்படுத்தி
விட்டால் இது
போன்ற விபரீத
விளையாட்டுக்கள் தவிர்க்கப்படலாம்!
பட்டுக்கோட்டைக்கு
இருசக்கர வாகனத்தில்
செல்பவர்கள்
எல்லோரும்
அறிந்த ஒரு
செய்திதான்
நான் மேலே கூறியது!
பொது நல
அமைப்புகள்
அல்லது
தன்னர்வத்
தொண்டு நிறுவனங்கள்
சம்பந்தப்பட்ட
நிர்வாகத்தை தொடர்பு
கொண்டு
சாலையை சரி
செய்தால்
சரிதான்!
- Dheva. S