சென்னைக்கு
நேரடி பேருந்து
வசதி கிடைக்குமா...?

அன்றைய
காலங்களில்
நமது ஊரில்
இருந்து சென்னைப்போன்ற
பெரிய
பட்டணங்களுக்கு செல்பவர்கள்
எத்தனை பேர்
என்பதை விரல்
விட்டு எண்ணி
விடலாம்.
அப்போது எல்லாம்
பட்டுக்கோட்டை
சென்று வரவரசி
மாலை
பார்ப்பது
அபூர்வம். இப்போ
எல்லாம் காலம்
மாறிப்போச்சி. நமது
ஊரில்
இருந்து சேர
நாட்டுக்கு
சென்று ஓனம்
பண்டிகை பார்க்கிறார்கள்.
அதே
போல வேலை
வாய்ப்பிற்கும், கல்வியை
தேடியும்
நமது இளைஞர்கள்
அன்றாடம்
பயணம் செய்து
வருகிறார்கள்.அதே
போல
சென்னையில்
திருமணம்
பலர்
முடித்துள்ளதால்
தமதுஉறவுகளை
தேடி சென்னை
சென்று வருகின்றனர்.
அதே
போல திரைகடலோடி
திரவியம்
தேடச்செல்பவர்கள்
விமான நிலையத்திற்கு செல்லவும்
அன்றாடம்
செல்கிறார்கள்.
ஆனால், இவர்கள்
எளிதாக பயணம் செய்ய எந்த
வசதியும்
இல்லை.
பட்டுக்கோட்டை
சென்று
சென்னை செல்லனும். அல்லது
மன்னார்குடி
சென்று
சென்னை
செல்லனும். இந்த
பேருந்து வழிப்பயணத்தில் நாம்
விரும்பும்
இருக்கை
கிடைக்குமா? என்றால்
சந்தேகமே? புகைவண்டி
பயணம் நமது
ஊரில்
இருந்து
சாத்தியமா? என்றால்
நிச்சயம்
இல்லை.
சீமைத்துரைகள்
இருந்தால்
சொல்லலாம். எங்கே
இவர்களிடம்
இது எல்லாம் சொல்வது? வட்டம், மாவட்டம்
என
அரசியல்வாதிகளிடம்
மனு எழுதி கொடுத்து.. கொடுத்து..
கொடுத்து... ??!!
எனவே, நமதூரில்
இருந்து
நேரடியாக
சென்னைக்கு
செல்ல ஒரு
பேருந்து
வழித்தடத்தை
ஏற்படுத்த
வேன்டும். இதற்கு
வாய்ப்பு
உள்ள
தன்னார்வ மக்கள்
தங்கள்
முயற்சிகளை
மேற்கொள்ளவும்.
இன்னும்
வெளினாடுகளில்
இருந்து இது சம்பந்த
பட்டவர்களுக்கு
மின்னஞ்சல்
அனுப்பி
தங்கள்
முயற்சிகளை தொடரலாம்.
யார்
செய்தால்
என்ன? ஒரு
புதிய பாதை
கிடைத்தால் போதும்?! ஊரிலிருந்தும்
மதுக்கூர்.காம்
இதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளும்.
சமீபத்தில்
ஒரு
ஸ்வாரஸ்யமான
சம்பவம் நடந்தது
தெரியுமா?
நமது ஊரில்
இருந்து ஒரே
நாளில்
இருபது பேர்
சென்னை
செல்லனும்.
என்ன
செய்தார்கள் தெரியுமா? ஒரு வேன்
எடுத்தார்கள். அதில்
ஒரு இடத்தில்
இருந்து புறப்பட்டு சொகுசாக
சென்னை
சென்றார்கள்.
அட
தேவுடா!
- Anwar