வாசகர் வட்ட சந்திப்புநிகழ்வுகள்!

20.03.2009

 


"
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்பதற்க்கு இலக்கணம் போல  நமது இனையத்தின் வாசகர் வட்டம்
நம்மை இங்கே எழுத வைக்கிறது. இன்றைய உலகில் பல்வேறு நிலைகளில்
மனிதனின் வாழ்வு சென்றுக்கொன்டிருக்கையில் இனையம் வழியே நல்வழிகளை தேடும் நல்ல ஒரு சமுதாயமும் நமது ஊரிலே உருவாகியுள்ளது என்பது தான் மறக்க முடியாத உண்மை.

சரி நமது வாசகர் வட்ட சந்திப்புக்குள் செல்வோமா?! நேற்று வெள்ளிக்கிழமை நமது வாசகர் வட்ட சந்திப்பு நடந்தது. மாலை சரியாக 5.30 மணிமுதல் நமது சந்திப்பு துவங்க..


வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத்துவங்கினார்கள்..

 



இதில் கலந்துக்கொன்டவர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொன்டவர்கள்
ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தந்தவர்கள். அஜ்மல், இஸ்ஹாக் அண்ணன், அலியார் அண்ணன், ஷெரீப், அக்பர், சாதிக், இல்முதீன், ஜஹாங்கீர்,
ஜெஹபர்சாதிக்,சாகுல் + இனையக்குழுவினர்.

இனையத்தில் தான் நமதூரில் நடக்கும் செய்திகளை படித்து தெரிந்துக்கொள்கிறேன் என அக்பர் சொன்னார், நமதூருக்கு வர நமது முயற்சியில் இருக்கும்
SBI வங்கியின் முயற்சிகளை குறித்துப்பேசினோம். 

அதே போல நமது ஊரை நல்ல ஒரு ஊராக மாற்ற  மரம் நடு விழாவை நாம் விழிப்புனர்வு செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதை வீட்டுக்கு வீடு செய்யலாம் அதாவது வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கவேன்டும் என்ற் சிந்தனையுடன்
மரம் நடுதல் குறித்து சிறிது நேரம் ஆலோசிக்கப்பட்டது.

அதே போல நமதூரின் தூய்மையும் சுகாதாரமும் குப்பைகள் கூழங்கள் இல்லாத மதுக்கூர் குறித்தும் பேசப்பட்டது. காரனம், நமது அருகாமையில் உள்ள ஊர்களில்
காசாங்காடு போன்ற ஊர்களில் புகையிலை, மதுபானங்கள் தடை. அதேபோல நமது ஊரில் செயல்படும் தன்னார்வலர்களை இனம் கன்டு அவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்க நமது இனையத்தில் அவர்களின்செயல்பாடுகளை எழுத பலரும் ஆலோசனை சொன்னார்கள்.


காரனம், அதுபோன்றவர்களை இனம் கான வேன்டும். குரு நானக் சொன்னது போல
நன்மையை செய் பலனை எதிர்பாராதே. 

நமதூரில் பலத்தெருக்கள் உள்ளது.  ஆனால், எந்தெந்த தெரு என பெயர் பலகைகள் இல்லை. ஆகையால், தெருப்பெயர்களை எழுத ஏதாவது ஒரு தன்னார்வ அமைப்புகள்
முயற்சி செய்யவேன்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

அதே போல நமது ஊரின் வார்டுகளில் சிறப்பாக செயல்படும் வார்டு கவுன்சிலர்களை அடையாளம் கன்டு இனையத்தில் எழுதலாம் எனவும் வாசகர்கள் சொன்னார்கள்.
அடுத்து தேர்தல் வருகிறது.  தேர்தல் நிலைகளை நமதூரில் நடக்கும் செய்திகளை
தேர்தல் பொதுக்கூட்டங்களை அப்படியே வெளினாட்டு வாழ் வாசகர்கள் தெரிந்துக்கொள்ள இதில் எழுதுங்கள் என வாசகர்கள் சொன்னார்கள்.

ஊரிலிருந்து வந்த வாசகர் ஜஹாங்கீர் இன்றைய நமதூரின் பல செய்திகளை
நமக்குச்சொன்னார்.. அதில் முக்கியமாக நமதூரின் அரசு மருத்துவமனை புதுப் பொலிவுடன் செயல்படுவதையும் சொன்னார்.

இப்படியே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் நமது சந்திப்பு சென்றுக்கொன்டிருக்க..
இடையே பல கலகலப்புக்கும் குறையவில்லை.


தேனீர் அருந்தும் நேரம்...
முர்தபா எப்படி செய்வது என எழுதினீர்கள் ஆனால் உப்புப்போட மறந்து விட்டீர்கள் என சொல்ல அங்கே பெரும் சிரிப்பலைகள் எழுந்தது.. அதே போல நமது ஊரின் புது மையவாடியை  ஏரிக்கரையில் அமைந்து இருப்பதால் அதை நாம் பூங்காவாக மாற்ற குத்தகைக்கு கொடுப்பீர்களா என அலியார் அண்ணனிடம் கேட்க ஹா..ஹா...
அங்கேயும் நமதூர் மக்களின் நகைச்சுவையும் மிகைத்தது.

நமதூரில் பலருக்கும் இனையம் பார்க்கும் விழிப்புனர்வு இல்லை
அதை செய்யுங்கள் என வாசகர்கள் சொன்னார்கள் அதே போல ரிலையன்ஸில் WIRELESS INTERNET கிடைப்பதாக தகவலும் சொன்னார்கள்.

சகோதரர் ரூமியின் கட்டுரை நன்றாக இருந்ததாக அக்பர் சொல்ல, ( ரூமி அடிக்கடி கட்டுரை எழுதவும்)  ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பேரூராட்சி அலுவலகம்,
போன்றவற்றில் நடக்கும் அலுவல் குறித்தும் இனையத்தில் எழுதுங்கள் என வாசகர்கள் சொன்னார்கள்.

அதேபோல பான்கார்டு (PANCARD) குறித்தும் எழுதச்சொன்னார்கள்.
பான்கார்டு குறித்து சரியான கட்டுரை விரைவில் தருகிறோம். காரனம் இது அவசியமான ஒன்ற
ு.
 

அதே போல சென்னை செல்லும் பேருந்து விபரங்கள் சென்னையில் இருந்து ஊருக்கு வரும் பேருந்து நேரங்கள், அதே போல புகைவண்டி நேரங்களையும் கொடுக்கச்சொன்னார்கள்.  நமதூர் நூலகம் மீன்டும் சிறப்புடன் செயல்பட
நல்ல முயற்சி மேற்கொள்ள ஆலோசனை சொன்னார்கள்.

தஞ்சை வேலை வாய்ப்பு அலுவலகத்தின் நமக்கென வேலைகள் காத்து இருக்க
நாம் யாரும் பதிவதில்லை என ஜஹாங்கீர் சொன்னார். உண்மையில் அப்படி ஒன்று நாம் யாரும் செய்வதில்லை. படித்து முடித்தால் நமது கண்களுக்கு புலப்படுவடு தூரதேசங்கள் தானே.

 

இறையின் உதவியால் இனிதே நடந்த வாசகர் சந்திப்புகள்
இனியும் தொடரும் என சொல்லி... நமது தட்டச்சை முடிக்கிறோம்.
..!

 

www.madukkur.com