வாளியின் கைப்பிடி சிலநேரம் துருப்பிடித்துப் போய் தண்ணீருடன் தூக்கும் போது சிரமாக இருக்கும். அப்போது சிறிய பாலித்தீன் பையை சுற்றி நூல் போட்டு கட்டிவிட்டால்
கையை துரு உறுத்தாமலிருக்கும்.
குளியலறையில் நாம் குளிக்கும் முன்பாக கொடியில் போடும் துண்டு. மாற்றுடைகள் நாம் குளிக்கும் போது நனைந்து போகும் வாய்ப்புண்டு. ரெக்ஸீனில் கிடைக்கும் ஒரு கொடியை மறைக்கும்படி தொங்கவிட்டுக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போதும் இந்த திரை இருக்கும் பக்கமாக அமர்ந்து தேய்த்துக்கொண்டால் சுவரில் கரை படிவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
குளிக்கும் சோப்பு ஒவ்வொருவருடைய தோலின் தன்மைக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிறத்தில் சோப்பு பெட்டிகள் வாங்கிக் கொண்டால் தேடாமல் சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.
விருந்தாளிகளுக்கென்று தனியே ஒரு சோப்புப் பெட்டியில் சோப்பைப் போட்டு வைத்துவிடுவதே சிறந்தது.
தேய்த்து சிறிதாகி விட்ட சோப்புகளை வாஷ்பேஸினின் மீது ஓரத்தில் வைத்துக்கொண்டால் கைகழுவும்போது பயன்படும்.
பல்துலக்கும் பிரஷ்கள் வாங்கும் போது ஒவ்வொருவரின் பல்லுடைய தன்மைக்குத் தகுந்தபடி தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிறங்களில் வாங்கினால் அவரவரது பிரஷ்ஷினை தேடாமல் சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்.
டெர்லின் சட்டைகளில் கறைபடிந்திருந்தால் சிறிது சாக்பீஸை தூளு செய்து கரைபடிந்த இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கிவிடும்.
ஒரு சிறிய பிளாஸ்டிக் கூடையையும் சுவற்றில் பொருத்திவைத்தால் பேஸ்ட் மற்றும் விருந்தாளிகளின் பிரஷ்கள் இவற்றைப் போட்டு வைக்க வசதியாக இருக்கும்.
பல்பொடியையும் வாங்கிவைப்பதில் பிரஷ் பயன்படுத்தாத, கொண்டுவர மறுந்துவிட்ட விருந்தாளிகள் பயன்படுத்த வசதியாக இருக்கும். பேஸ்ட் தீர்ந்து போனால் ஓரிரு நாட்களுக்கு நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேய்ந்து பழசாகிவிட்ட பிரஷ்களை சுத்தப்படுத்தி வைத்துக் கொண்டால் வாஷ்பேசின் கழுவும் போதும் தேய்த்துக் கழுவுவதற்கு பயன்படும்.
குளியலறையின் தரையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வாரத்திற்கு ஒருமுறையேனும் பாத்ரூம் பாசி பிடிக்காமல் தேய்த்துக்
கழுவுதல் ( தேவையானால் பீளீச்சிங் பவுடர் உபயோகிப்பது ) அவசியம்.
குளியலறையின் கழிவுநீர் குழாயினை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்து பினாயில் ஊற்றிவைக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் போது, சிகைக்காயோடு செம்பருத்திப்பூ இதழ்களை சேர்த்து அரைத்து வைக்கும் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் மணம் நீங்கி கூந்தல் மிருதுவாகவும், பளபளப்புடன் இருக்கும்.
உடைகளில் இரத்தக்கறை பட்டுவிட்டால், உப்புநீரில் அந்த உடைகளை ஊற வைத்துப் பிழிந்தால் கறை நீங்கிவிடும்.
சோப்புப் பெட்டியின் அடியில் சிறிய ஸ்பாஞ்சித் துண்டை வைத்துக் கொண்டால், சோப்பு நுரை வீணாகாது. ஸ்பாஞ்சை கை, முகம் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம்.
எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கையில் சிகைக்காயுடன் சிறிது வெந்தயத்தையும் அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். தலை சுத்தமாகி தலைமுடி கருகருவென வளரும் உடலும் குளிர்ச்சியடையும்.