ஏழை
மாணவர்களுக்கு
வட்டியில்லா
கல்விக் கடன்
: மத்திய அரசு
புதுடெல்லி, ஆக.27 : மாணவ சமுதாயத்துக்கு
மிகுந்த பயன்
அளிக்கக் கூடிய
அம்சமாக, தொழிற்கல்வி
பயிலும் ஏழை மாணவர்களின்
கல்விக்
கடனுக்கான
முழு வட்டியையும்
மானியமாக
ஏற்றுக்கொள்வது
என்று மத்திய
அரசு முடிவு
செய்துள்ளது.
பிரதமர்
மன்மோகன்
சிங்
தலைமையில்
புதுடெல்லியில்
வியாழக்கிழமை
நடைபெற்ற பொருளாதார
விவகாரங்களுக்கான
மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில்
இதற்கான
ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை, அமைச்சரவை
கூட்டத்துக்குப்
பிறகு செய்தியாளர்களிடம்
தெரிவித்த
உள்துறை அமைச்சர்
ப. சிதம்பரம், "மாணவர்கள்
முழு வட்டி
மானியத்தை
பெற, அவர்களுடைய
பெற்றோர் ஆண்டு
வருமான உச்ச
வரம்பு ரூ. 4.5 லட்சமாக
இருக்க
வேண்டும்.
பொருளாதார
ரீதியில்
நலிவடைந்த
பிரிவைச் சேர்ந்த
மாணவர்களுக்கு
அரசு அங்கீகரிக்கப்பட்ட
எந்தவொரு
தொழில் மற்றும்
தொழில்நுட்பக்
கல்வியானாலும் கிடைப்பதற்கு
இந்த வட்டி
மானியம்
உதவும்.
நாடு
முழுவதும்
இத்திட்டத்தால்
மொத்தம் 5 லட்சம்
மாணவர்கள்
பலனடைவார்கள்," என்றார்
ப.சிதம்பரம்.
மேலும், கடந்த
மார்ச் 31 ஆம்
தேதி
வரையிலான
காலத்தில்
மொத்தம் 16 லட்சம் மாணவர்கள்
கல்விக்கடன்
பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு 24 ஆயிரம்
கோடி ரூபாய்
கடன் வழங்கப்பட்டுள்ளது," என்றார்
அவர்.