ஃபேஷன் டிசைன்!

ந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் ஃபேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் துறைகளில் பி.ஏ., முழு நேரப் படிப்பைப் படிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: 011\29536982, 45561508

www.ignou.ac.in

-------------------------------------------------------------------

விரிவுரையாளர் பணித் தேர்வு!

ல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சட்டம், தத்துவம், மேலாண்மை, நூலக அறிவியல், உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர் பணிகளில் சேருவதற் கான தகுதித் தேர்வு (State Eligibility Test - SET) எழுத விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஜூலை 17-ம் தேதிக்குள் கிடைக்கும்படி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆகஸ்ட் 16-ம் தேதி SET தேர்வு நடைபெறுகிறது.

விவரங்களுக்கு: www.b-u.ac.in

-------------------------------------------------------------------

ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ்!

காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் எம்.எஸ்ஸி., ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் படிப்பு களில் சேர விரும்பும் மாணவர்கள் அது குறித்த விவரங்கள் அறிய பல்கலைக்கழக ஊரக மேம்பாட்டுத் துறைத் தலைவருடன் தொடர்புகொள்ளலாம்.

விவரங்களுக்கு: 9443015375

-------------------------------------------------------------------

அண்ணா பல்கலை எம்.பி.ஏ.,

ண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி யில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டான்செட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விவரங்களுக்கு: www.annauniv.edu

-------------------------------------------------------------------

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தகவல்களுக்கு: www.dtert.tn.nic.in/