நகைச்சுவை -  இரசித்தவை

==========================

ஆசிரியர்: கோபால், அஞ்சும் மூனும்
எவ்வளவு?


கோபால்: ம்..ம்.. வந்து.. ஏழு சார்.


ஆசிரியர்: என்ன ஏழா? எப்படி
கூட்டினாலும் வராதேடா?


கோபால்: தப்பாக் கூட்டினால் வரும்
சார்!!!


#######################################


தாத்தா: டேய் கோ..வாலு! என்னோட
கண்ணாடியக் காணோம்; கண்ணு
தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம்
தேடி எடுத்துக் கொடுடா.


கோபால்: போ தாத்தா, எனக்கு
வேலை இருக்கு. நீயே கண்ணாடியப்
போட்டுக்கிட்டு தேடி எடுத்துக்கோ!


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தலைமையாசிரியர்: (பள்ளி ஆண்டு
விழாவில்) : பள்ளிக்கு தினமும்
லேட்டா வந்தாலும், முன் சொன்ன
காரணத்தையே மறுமுறையும் சொல்லாமல்
தினம் புதுப் புது சாக்கு, போக்குகளைச்
சொன்ன  வர(ரா)தராஜனுக்கு இந்த
சிறப்புப் பரிசு அளிக்கப்படுகிறது.


!!!!!#####!!!!!#####!!!!!#####!!!!!#####



இதோ இன்னொரு லேட்டா வர்ற ஜோக்;

ஒரு அலுவலகத்துல இருந்த லேட் ரிஜிஸ்டரை பாத்துட்டிருந்த
மேலதிகாரி, லேட்டா வந்த எல்லாரையும் அழைத்து
எப்போ ட்ரீட் வைக்கப்போறீங்க?”ன்னு கேட்டாராம்.

எல்லாரும் எதுக்குன்னு தெரியாம முழிக்க, அந்த லேட்
ரிஜிஸ்டரைக் காட்டினாரு.

அதுல முதல் ஆள் `என் மனைவிக்கு அதிகாலை ஆண்மகன்
பிறந்தான். மருத்துவமனையிலிருந்து வர தாமதமாகிவிட்டதுன்னு
எழுதியிருந்தாரு.

லேட்டா வந்த எல்லாருமே அதுக்கு டிட்டோ போட்டிருந்தாங்களாம்!

 

=====================================================================