இன்றைய பொருளாதாரமும் வேலை வாய்ப்புகளும்.
இன்றைய
பொருளாதாரம் ஒரு பெரும் விழ்ச்சியில் இருந்து மீண்டு வந்துகொண்டுள்ளது என்பது நமது
எல்லோருக்கும் அறியும். ஆனால் அதன் வேகம் பலதடைகளினால் மெதுவாக உள்ளது. கீரிஸ்
போன்ற நாடுகளின் கடன் சுமையினால் ஐரோப்பா பொருளாதாரம் பின் தங்கி உள்ளது.
அமெரிக்காவின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிக குறைவாக உள்ளது. அரபு நாடுகளின்
பொறுளாதாரம் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை நம்பி உள்ளது (பெட்ரோல் விலை). உலக
பொருளாதாரம் மீண்டு வருகின்றது என்றாலும் அது நாடுகளுக்கு நாடு வித்தியாசமாக உள்ளது.
அமேரிக்க ஜனாதிபதி ஒரே மாதத்தில் முன்று முறை இந்தியாவின் வளர்ச்சியைப்பற்றி
குறிப்பிட்ட உள்ளார் என்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு அதாரமாகும். இப்பொழுது துபாய்
போன்ற அரபு நாடுகளைவிட இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளதால் அங்கு வேலை வாய்ப்புகள்
அதிகம் உள்ளது. இதுவே இன்றைய நிலமை. எனவே நமது புதிய தலைமுறையினர் படிப்பு
முடிந்தவுடன் இந்தியாவில் பணி தேடி அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த அனுபவத்துடன்
பின் வளர்ச்சி அடைந்த துபாய் வரும் பொழுது தங்கள் இழந்ததாக நினைக்கும் செல்வத்தைவிட
பலமடங்கு பெறலாம்.
எனவே சமுதாய அந்தஸ்துகாக முடிவு எடுக்காமல் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்திற்காக
முடிவு எடுங்கள். -நலம் விரும்பி