பல நேரங்களில் வேலைச்சுமை , டென்சன் என அத்தனையும்
நம்மை ஆட்கொண்டாலும் அந்த நேரம் மழை வந்தால் நாம்
அடையும் மகிழ்ச்சியும் தனி சுகம் தான் அத்தனை கவலைகளும்
பறந்து விட்டதுபோல் தோன்றும் அந்த வகையில் மழை வராத
நேரத்தில் நீங்கள் நினைக்கும் போது மழை சத்தத்தை கேட்க ஒரு
இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.

இன்னும் சில பேர் மழைசத்தத்தை கேட்டவுடன் மகிழ்ச்சியாகி
விடுவர் குழந்தைகளும் இந்த மழை சத்தத்தை கேட்டதும்
வெளியில் சென்று மழைநீரில் மகிழ்ச்சியாக ஆட்டம் போட
நினைப்பர் அப்படி மழை நீரை ரசிக்கும் குழந்தை உள்ளம்
கொண்டவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் மழையின்
சத்தத்தை காது குளிர கேட்கலாம். தொடர்ந்து கேட்டு கொண்டே
இருக்கலாம்.இணையப்பக்கமும் முழுவதும் மழைநீரால்
நனைந்துள்ளது. இனி உங்களுக்கு எப்போதெல்லாம்
போரடிக்கிறதோ அந்த நேரத்தில் நீங்கள் இந்த மழை சத்தத்தை
கேட்கலாம்.
இணையதள முகவ்ரி : http://www.rainymood.com
அதோடு நீங்கள் மழையில் விளையாடியதை உங்கள் நண்பருக்கு
பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தும் கொள்ளலாம்.