நமது ஊர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் + வாழ்த்துக்கள்....!
சாயங்கள் வெளுக்கத்
துவங்கி இருக்கும்
நேரம்...ஆன்மீக வேடங்களும்
அதை அம்பலப்படுத்தும்
ஊடகங்களும்
உளவியல் ரீதியாக மக்களின் மனதில் வேடிக்கை காட்டிக்கொண்டு
இருக்கும்
இந்த சமயத்தில்
நமது அறிவுக்கண்களைக்
கொண்டு வாழ்வின் நெறிகளை... நமக்குள் சரி செய்து
கொள்ளும்
நேரம்.
நித்யானந்தரும்...அவரின்
அந்தரங்கத்தை
படம் பிடித்துக்காட்டிய
ஊடகங்களும்
சரி நமது
கண்களின்
முன் இந்த
சமுதாயத்தின்
முன் குற்றவாளிகள்தான்.
தன்னை ஒரு பிரம்மச்சாரி
என்று பகிங்கரப்படுத்தி
அதன் கட்டுக்கோப்புகளை
தகர்த்ததின்
மூலம் நித்யானந்தத்தின்
அந்த சத்தியம்
அழிந்து அகோரமாகி விட்டது.
காமத்தை அடக்குவது
என்பது அதை விட்டு
வேறு எங்கோ
ஓடுவதில்லை.......அதை மறுப்பதைல்லை...மாறாக...அதை
சரியானமுறையில்
அனுபவித்து
விளங்கி அதன் இச்சைகளை
உடலை விட்டு
அகற்றுவதுதான்...காமத்தை அடக்குதல்.
ஒரு இல்லறவாசி...காமத்தில்
திளைத்து
அதில் முழ்கி அனுபவித்து
அது போதும்
என்று மெல்ல விலகும்போது
காமம் அவனிடம் இருந்து மெல்ல அழிக்கப்படுகிறது. இந்த நிலைதான்
பிரம்மச்சார்யம்.
அப்படி இல்லை என்றால்
காமம் என்ற ஒன்றே
உங்களுக்குள்
தோன்றவில்லை,
பிறப்பிலேயே
உங்களுக்கு
அதில் நாட்டமில்லாமல்
இருக்கிறது
இறைவழி பாட்டிலும்
ஆன்மீகத்தேடலிலும்தான்
உங்களுக்கு
நாட்டம் இருக்கிறது
என்றால்...அந்த வாழ்க்கையும்
பிரம்மச்சார்யம்தான்.
மேற்சொன்ன இரண்டு வழிமுறைகளையும் தாண்டி நீங்கள்...உங்களின் இச்சைகளை அடக்கி வாழமுற்பட்டால்...... நித்யானந்தர்கள் போல சறுக்கி விழ வேண்டியதுதான். அடக்கி வாழாமல் அறிந்துதான் வாழ வேண்டும்!
நித்யானந்தன்
தவறு இழைத்து
விட்டான்
என்ற ஒரு
காரணத்தை
கையில் எடுத்துக்
கொண்டு பணமும் அதிகாரமும்
கொண்ட ஊடங்கள் .... நமது
வீடுகளில்
ஒரு நீலப்படத்தை
திரும்ப திரும்ப ஓடவிட்டதே.....?
அது என்ன நியாயம்? அம்மா, அப்பா
தங்கை
, தம்பி, குழந்தைகள்
என்று எல்லோரும்
பார்க்கும்
தொலைக்காட்சியியில்,
இணையத்திலும்
நீலப்படத்துக்கு
சமமாக ஓடவிட்டீர்களே....?இது பத்திரிகை
தர்மத்தில்
எந்த பக்கத்தில்
வருகிறது.
5 வயது என் மகள்
என்னப்பா
ஆச்சு என்று கேட்கிறாளே
அவளுக்கு
என்ன பதில்
நான் சொல்வது?
ஆன்மீகத்தின் பெயரால்
எம்மக்கள்
நம்பிக்கை
வைத்து ஏமாந்ததை சொல்லவா? இல்லை... உண்மையை
காட்டுகிறேன்
என்று ஆபாசத்தை ஓயாமல் ஓடவிடும் சுய நல
ஊடங்களின்
வியாபார உத்தியை சொல்லவா?
ஒரு பத்திரிக்கை
தனது இணையத்தில்
நித்யானந்தாவின்
படத்தினை
ஓடவிட்டு
தரமான முளு நீள
காட்சிகளுக்கு
இந்த இணைப்பை
அழுத்துங்கள்
என்று கூறி...கூவி
கூவி விற்கிறதே?உங்களின்
அறுவெறுப்பான
நோக்கம் உங்களுக்கே
தெரியவில்லையா?
நீங்கள் காட்டும் காட்சியில்
அப்பட்டமாய்
எல்லாவற்றயும்
காட்டுகிறீர்களே....
சிறிது தணிக்கை செய்து காட்டி உங்களின் வருமானத்தை
கொஞ்சம் குறைத்து நமது கலாச்சரத்தைதான்
கொஞ்சம் காப்பாற்றுங்களேன்!
நீங்கள் தாயாரிக்கும்
படம்... நாடகம்
அல்லது உங்களின் சுய நலம்
சார்ந்த கருத்துக்களை
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
அலுத்து போகும் அளவிற்கு விளம்பரம்
செய்து மக்களின் மூளைகளை சிந்திக்கவிடாமல்
மூளைச்செலவு
செய்து உங்கள் தயாரிப்புகளை
பார்க்க அல்லது படிக்கச் சொல்வீர்கள்....ஒரு வகையில்
நீங்களும்
நித்யானந்தர்
போலத்தான்...என்பதை மறுப்பதற்கில்லைதானே?
ஊடங்கள் மக்களுக்கு
சொல்லும்
செய்திகளின்
சாரம் நல்ல கருத்தை
மக்களிடம்
விதைக்க வேண்டும் ! நெஞ்சில் கை வைத்து
சொல்லுங்கள்...
நீங்கள் எல்லாம் செய்வதில்....
அந்த சத்தியம்
இருக்கிறதா?
- S. தேவா.