12/31/2008 6:19:58 PM
DEAR FRIENDS AND BROTHERS
"WISH YOU A HAPPY NEW YEAR 2009"
"When you're lonely, I wish you Love!
When you're down, I wish you Joy!
When you're troubled, I wish you Peace!
When things seem empty, I wish you Hope!
Have a Happy New Year!"
GS Karthikeyan
singapore
Surya Karthikeyan E-mail: surya_karthikeyan@yahoo.com City: Singapore Country: Singapore
12/31/2008 12:03:48 PM
தேனீர் அருந்தும் வேளையில்
hai upper class folks
நலம் நலமறிய
இன்று அதிகாலை நல்ல பனிமூட்டத்துடன் பொன்புலரியில் 17 டிகிரி
relative hummidity 88 percent
nice weather ... marvelous
இந்த வருடத்தின் கடைசி Tea Time..
வருடத்தின் கடைசி தினங்களில்
நம்மவர்களில் சிலரிடம்
தனது அறையை சுத்தம் செய்யும் பழக்கும்
அல்லது அலமாரியை சுத்தம் செய்வது
அல்லது கணக்கு வழக்குகள் பார்ப்பது இப்படி ஏதாவது இருக்கும்.
நாளை முதல் இப்படி இருக்க வேன்டும்
சில தீர்மானங்களும் புத்தகங்களில் எழுதுவார்கள்..
ஆனால் வருடத்தின் இறுதியில்
நாம் கொடுக்கும் சிந்தனை இதான்
1)தமிழரிடம் தமிழில் பேசுங்கள்
2)அது போல சென்ற வருட காலங்களில்
ஏதாவது சொந்த பிரச்சனை காரனமாக
நாம் நமது பேச்சை நிறுத்தி இருப்போம்
அவர்களிடம் ஈகோ பாராமல்
நாம் பேச்ச துவங்குவோம்.
'நபிகளாரின் பொன்மொழியும் இதை சொல்கிறது
சொந்த பகமை காரனமாக
மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கவேன்டாம்
அதே போல நம்மிடம் இனையத்தில் உறவாட
மொழி பலருக்கு ஒரு தடையாக இருக்கலாம்.
அந்த பயம் நமது இனையத்தில் உலாவ தேவை இல்லை.
நம்மில் எத்தனை பேருக்கு சுத்தமாக பன்மொழிகள் தெரியும்.
எல்லாம் அறைகுறை..
நமது ஊர்களில் நமக்கு இந்தி தெரியாத காலங்களில்
உருது பக்கம் வாழும் முஸ்லிம்கள் பேசிக்கொள்வார்கள்
நாம அதை இந்தி என நினைத்தோம்..
எப்படி மாடு பள்ளம்மே கிர்கயா?
..)))))))))))))))j/k
அதே போல நாங்க இங்கே கிரிக்கெட்
பாகிஸ்தானிகளிடம் விளையாடும் போது
அவர்கள் அடிக்க வரும் போது
ஹம்பி முசல்மானே
தும்பி முசல்மானே
கியூன் எம்பி எம்பி மார்த்தாஹே
என கேட்க
அதற்கு அவர்கள் நம்மிடம்
'எம்பி எம்பி' கியா மத்லப்பே.. ha aaaa...
இப்போது நாங்கள் ஹிந்தியில் பண்டிட்
எங்க கிராம்மரே தனி..
ஒட்டகப்பள்ளிக்கு நாங்கள் சொல்வது
'ல்ம்பா வாலா பக்ரீ மஸ்ஜித்...' haa..aaa
ஒரு குடும்பம் எப்படியிருக்க வேண்டும்?
கலைஞரது குடும்பம்போல, எத்தனை தடவை வெட்டிக் கொண்டாலும் உடனே அவர்கள் ஒட்டிக் கொள்கிறார்கள்! இது மாதிரியெல்லாம் எந்தக் குடும்பத்திலும் நடக்காதுப்பா!
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/30/2008 1:10:45 AM
முஹர்ரம் தரும் சிந்தனை
நாம் வாழும் இந்த உலகில்
நம்மிடையே ஏராளனமான திருவிழாக்கள் வருவதுன்டு.
அந்த வகையில் தற்போது நம்மிடையே உலாவருவது என்ன?
புத்தாண்டுகள்.. இப்போது ஹிஜ்ரா வருடப்பிறப்பு,
அடுத்த சில தினங்களில் ஆங்கில வருடபிறப்பு
அடுத்தடுத்த வாரங்களில் தமிழ் வருடப்பிறப்பு.
ஆங்கில புத்தாண்டாக இருந்தால் என்ன செய்வோம்.
குறுஞ்செய்திகள் அனுப்புவோம்.
மின் வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம்.
சிலரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வோம்.
அதே தமிழ் வருடப்பிறப்பாக இருந்தால்
நமது வாழ்க்கை நடையே மாறும்.
அதிகாலையிலேயே எழுந்து
தனது காலை கடன்களை முடித்து
ஆலயங்கள் சென்று
இறை வழிப்பாட்டை முடித்து
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வோம்.
அன்றைய தினம் உணவில் கூட மாற்றம் இருக்கும்.
அதே போல இஸ்லாமிய ஆண்டு தொடக்கம் என்ன சொல்கிறது?
இது ஒரு தியாகத்தை சொல்லுகிறது?
அதாவது அன்றைய காலத்தில்
இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) தூதுத்துவத்தை
சொன்னதற்காக தானும் தனது மக்களும் பட்ட கஷ்டத்திற்காக
தனது சொந்த ஊரை விட்டு,
அனைத்து சுகபோகங்களையும் விட்டு,
ஈமானுக்காக நாடு விட்டு நாடு செல்லுதலே ஹிஜ்ரத் ஆகும்.
இஸ்லாமிய புத்தாண்டும் சொல்வது நமக்கு அந்த
ஈமானின் உறுதியையும் தியாகத்தையும் தான்.
இன்றைய நாம் உலகில்
நமக்கு ஹிஜ்ரத் இல்லை என நினைக்காதீர்கள்.
சவுதியில் மட்டும் தான் ஹிஜ்ரத் இல்லை.
இதை நாமாக சொல்லவில்லை.
நபிகளாரின் அழகான பொன்மொழி சொல்கிறது.
'புற்றிலிருந்து பாம்பு புறப்பட்டு
மீன்டும் புற்றில் அபயம் தேடுவது போல
ஈமான் மதீனாவில் நிலை பெறும்.'
இது மட்டுமல்ல
இறுதி நாள் வரும் வரையில்
நமது நப்சை அடக்குவதற்காக
நாம் ஹிஜ்ரத் செய்துகொன்டே இருக்கவேன்டும்.
மேலும் இது போன்ற தியாகத்தின்
நினைவு தினங்களில்
நமது வாழ்னாளிலும் ஈமானுக்காக
ஈமானின் உறுதிக்காக
நாம் சில உறுதிகள் மேற்கொள்வோம்.
என்ன அது?
என்னிலையிலும் அல்லாஹ்
ஒருவனையே வனங்குவோம்.
அதே போல சமுதாய தீங்குகளான.
வரதட்சனை, வட்டி, மது ,
விபச்சாரம், சூதாட்டம், புகைபிடித்தல்
இவைகளை ஒழிக்கவும்
நாம் நமது முயற்சிகளை மேற்கொள்வோம்.
இறைவன் போதுமானவனாக!
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/29/2008 11:06:47 AM
சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு:
குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் பங்கேற்பு
சென்னை: சென்னையில் ஜனவரி 7 முதல் 9ஆம் தேதி வரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் (பிரவாசி பாரதிய திவாஸ்) மாநாடு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளிநாடு வாழ் இந்தியர் விவரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி இதை தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில்,
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் 7-வது மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 8ஆம் தேதி கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றுகிறார். 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றுகிறார்.
தற்போது சென்னையில் நடக்கவிருப்பது 7ஆவது மாநாடு ஆகும். இதுவே சென்னையில் நடக்கும் முதல் மாநாடும் கூட. இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தவிர, மாநாட்டில் முக்கிய கூட்டங்களில் 3 மாநில முதல்வர்கள் உட்பட 20 அமைச்சர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். குறிப்பாக 9ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில முதல்வர்களிடையேயான சிறப்புக் கூட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ள உள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறை கண்காட்சியும் நடைபெறவுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர்கள் கூட உள்ளனர்.
இதன் மூலம் இந்தியத் தொடர்புகள் பெருகி, வர்த்தக, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. மேலும் 15 மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வர்த்தகம், முதலீடு, கல்வி கலாசாரம், மொழி, பொருளாதாரம், பத்திரிகை மற்றும் பொழுதுபோக்கு, சுகாதாரம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அடிப்படையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
மேலும் ஆப்பிரிக்க, ஆசிய பசிபிக், கனடா, கரீபியன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்காக மண்டல அளவிலான கலந்தாய்வு நிகழ்வுகளும் நடைபெறும்.
முக்கிய துறைகளில் முதலீடு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வண்ணம் நேரடி ஆலோசனை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினருக்கான பிரதமரின் உலகளாவிய ஆலோசனைக் குழு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தி மேம்பாட்டு நடவடிக்கைளுக்குச் சரியாக பயன்படுத்த வழி செய்யும் இந்தியா வளர்ச்சி அறக்கட்டளை, இந்திய வம்சாவளியினர் மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பல்கலைக்கழகம், அயல்நாட்டில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான கவுன்சில், தொடர்பான பல்வேறு புதிய முயற்சிகளுக்கான அறிவிப்புகளும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/27/2008 11:03:13 AM
FINANCIAL THOUGHTS
நமது பயணங்கள் எங்கே?
' பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு
ஏதாவது ஒரு காலகட்டத்தில் இருக்கத்தான் செய்யும்
தவிர்க்கமுடியாது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு காரனமாகும். இன்னும் 4,5 மாதங்களில் பணவீக்கம் 5 அல்லது 5.5. சதவிகிதமாகக்குறையும்.
உணவு தானியக்கொள்முதல் சிறப்பாக இருப்பதும்
நல்ல பருவ மழையும் விலை வாசி குறைய உதவிடும்.
அதே சமயம் கச்சா எண்ணெய் விலை உயர்வு
பெரிய பாதிப்பு தரும் விசயம் என்பதை மறுக்க முடியாது.
அதனால் நாம் பெரும் சிக்கலில் இருக்கிறோம்.'
(சி. ரங்கராஜன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர்)
இது ஜுன் மாதம் சொன்னது.
இன்று உலகெங்கும் பேச்சு என்ன
பொருளாதர சரிவு
பங்கு சந்தை வீழ்ச்சி
பணவீக்கம் உற்பத்தி விழுக்காடு தேக்கம்
தேவைக்கு அதிகமான அளவுக்கு அதிகமான பணம்
அமெரிக்க சந்தையில் உலவியது. வேலையில்லாத
இளைஞர்களுக்கு வீட்டுக்கடன், வாகன கடன்
கடன்கள் காப்பீடு செய்யப்பட்டு வங்கிகள் பாதுகாப்பை
தேடிக்கொண்டதாக எண்ணின.
158 ஆண்டு கால மரபுவழி மிக்க லேமன் சகோதரர்கள்
நிறுவனம் கடன் பத்திரங்களை (cdo)உலகெங்கும் விற்றது.
அனைத்து நாட்டு மக்களும் நம்பிக்கையுடன் வாங்கினர்.
ஆனால் கடன் பெற்ற அமெரிக்க குடிமக்களோ
வருவாய் இல்லாத நிலையிலும் பெரும் சொத்து மதிப்பு
தம்மிடம் இருப்பதாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர்.
வாங்கிய கடனை திரும்பி செலுத்தாத நிலையில்
வங்கியில் பணப்புழக்கம் தொய்வை சந்தித்தது.
கடன் பத்திரங்கள் நிறைவை எய்திய நிலையில்
முதலீட்டார்களுக்கு திருப்பித்தர முடியாத நிலையில்
லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலாகியது.
கடன்களை காப்பீடு செய்த காப்பீட்டு நிறுவனங்களும்
பணம் தரமுடியாத நிலையில் தள்ளப்பட்டன.
இது இப்போ இல்லை
2003 முதல் சிறுக சிறுக பெருகிய தவறுகள்.
இன்னைக்கு என்னடான்னா?
நேற்றைய செய்தி இந்தியாவில் தொழில் நுட்ப துறையில்
50'000 பேருக்கு வேலை வாய்ப்பு போகுமாம்.
வேலை போவது பிரச்சனையில்லை.
இந்த வேலையை நம்பி இவர்கள் எடுத்த
கடன்கள், கடன் அட்டைகள், இதை நம்பி
பேசி வைத்த திருமணங்கள், வாங்கிய ஹையுன்டாய் சான்ரோ கடன்,
அட தேவுடா....
இது எங்கேயோ அமெரிக்காவில்
நடந்தது என சந்தோசம் வேன்டாம்.
இதன் பாதிப்பு நமதூர் மீன், கருவாடு
ஏற்றுமதி வரை வரலாம்.
இதன் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
நமது நாட்டில் இதன் நிலையான பாதிப்பு
2009 அல்லது 2010தான் தெரியும்.
இறைவன் முன்னிற்க வேன்டும்!
இது போன்ற தருனங்களில்
நாம் பெற வேன்டிய பாடங்கள் என்ன?
நமக்கு மேல எல்லாம் வல்ல ஒரு சக்தி இருக்கிறது?
அவனை மறந்து ஆட்டம் போடக்கூடாது?
எத்தனை காலம் தான்
கருப்பு அட்டையை எடுத்துக்கொண்டு
நாம் உலகை உற்சாகமாக வலம் வருவது?
நமது தாயகத்தில் நமக்காக ஏதாவது
ஒரு தொழில் இருந்தால் எப்போதும் நிம்மதி.
தொழில் துவங்க நமக்கு என்ன வேன்டும்?
இதற்கு என்ற ஆலோசனை மன்றம் வேன்டும்.
The Big Idea For NRI'S
அல்லது நமதூர் வர்த்தக சங்கம்
இதற்காக முன்வரவேன்டும்.
ஆலயங்களையும் கல்வி சாலைகளையும் அமைத்தால் மட்டும் போதுமா?
நல்ல தொழில் வளங்களையும் ஏற்படுத்தி தரவேன்டும் அல்லவா?
இன்னும் ஒன்று சொல்லவேன்டுமானால்
அன்றைய காலங்களில் தொழில் வளங்களில் நமதூர் கொழித்தது.
இன்றைய இளஞர்களிடம்
மேற்கத்திய கலாச்சாரத்தில் மோகத்தில்
இருந்து விடுபட்டு
தன்னார்வத்தையும் நம்பிக்கையையும் ஊட்டி,
நல்ல தொழில் துவங்கவும்,
தனது வாழ்க்கை தரத்தை தாயகத்தில் அமைக்கவும்
சுயதொழில் தொடங்கவும்
நல்ல ஆலோசனைகள் வழங்க வேன்டும்.
Time and Tide wait for nobody
anwar E-mail: mailbags@in.com City: dubai Country: emirates
12/27/2008 9:43:18 AM
Job Vacancy
===========
Tamil speaking Driver required for the company based in Sharjah Free Zone.
Basci Salary: Dhs. 1,700/-
Allownace : Dhs. 200/- per month
Overtime : 2 hours daily on the basic salary for all the working days.
Working day: Sunday to Thursday
Contact : Mr. Prazoon Kumar (Branch Incharge) on 050 5517826 and speak to him in TAMIL.
Dheva. S E-mail: dheva2000 City: Dubai Country: U.A.E
12/24/2008 12:07:27 PM
அன்பானவர்களே
நலம் நலமறிய பேராவல்
என்ன விஷேசங்கள்?
இனிதே குளிருடன்
அதுவும் இன்று பனிமூடிய பாலங்களையும்
கட்டிடங்களையும் பார்க்கும்போது வாவ்வ்வ்வ்வ்வ்வ்
விடுமுறை மாதமாக இந்த மாதத்தை சொல்லலாம்.
இப்போது தான் விடுமுறைகள் முடிந்து
நாம் வேலைக்கு திரும்பும் போது
மீன்டும் விடுமுறை காலங்கள் வந்தாச்சி.
எதிர்வரும் 28ம் திகதி
இங்கே முஹர்ரம் தொடக்கத்தின் விடுமுறை
இது ஞாயிற்றுக்கிழமை வருவதால்
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.
அதே போல புத்தான்டின் தொடக்கம்
வியாழன் வருவதால் வியாழன் வெள்ளி சனி அட...
திருமண தகவல் தளங்களில்
நகைச்சுவையாக உள்ள சில profiles..
i want very simple boy. from brahmin educated family from Orissa state she is also know about RAMAYAN, GEETA BHAGABATA, and other homework
(Wut Homework?)
iam pranati my family histoy my two brother two sister and father & mother sister completely married
(somebody please explain in comments section how to get married 'completely' ?)
iam kanandevi. i do owo businas.one sistar.he was marred.
(No comments)
hello i am a good charactarised woman. i want to run my life happily. i divorced my first husband. his charactor is not good'.
i expect the good minded and clean habits boy who may be in the same caste or other caste accepted ...
(but credit cards not accepted..?? ?)
எதிர்வரும் வெள்ளி மாலை
துபாயில் உள்ள இந்திய தூதரக அரங்கத்தில்
முப்பெரும் தமிழ்விழா நடைபெற உள்ளது.
நேரம் மாலை 6.00 மணி.
அனைவரையும் கலந்துக்கொள்ள
மேலதிக விபரங்கட்கு 050 8575756
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/23/2008 2:03:24 PM
'காலங்காலமாக இருந்துவந்த நல்ல விதைகள்,
நல்ல விவசாய முறைகள், நல்ல கூலிப்பகிர்வுகள்
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்போது நல்ல விளை நிலங்களையும்
இழந்து கொண்டிருக்கிறோம்.'
- தினமனி
டிசம்பர் 23 விவசாயிகள் தினம்
இந்தியாவில் இன்று விவசாயிகள் தினம்
என அறிவித்தாலும் இதை கொன்டாட
என்றும் தகுதியானவர்கள் நாமே என்று பெருமையடிக்கலாம்.
காரனம் சங்ககாலம் முதலே
சோழனாடு சோறுடைத்த நாடு
என்ற பெருமையை தக்கவைத்துள்ளோம்.
ஆனால் சங்ககாலம் தொட்டே
நம்முடன் தொற்றி வந்த இந்த விவசாயம்
கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு மறைந்து விடுமோ என்ற அச்சம் நம்மை விட்டு அகலாமல் இல்லை.
காரனம், பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் எந்த நகருக்கு
பயணம் செய்தாலும் சாலையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு
பச்சைபசேல் பின் தொடரும் ஆனால் இன்றோ
விவசாயத்தை கொன்றதன் அடையாளமாக
நடுகல் நடப்பட்டு வீட்டுமனைகளாக இருப்பதைக்கானலாம்.
ஆனால், தமிழக அரசியல் சாசனம் என்ன சொல்கிறது?
விளை நிலத்தை வீட்டுமனையாக மாற்றவேன்டும் என்றால் அந்த நிலத்தில் சில ஆண்டுகளாக, தொடர்ந்து விவசாயம் நடைபெறவில்லை என்பதற்கான சான்று முக்கியம்.
இதெல்லாம் இப்போ யாரு பார்க்குறா?
நவீன உலகம் வந்துடுச்சி?
கிராமங்களில் உள்ள இளைஞர்களிடமும்,
இளசுகளிடமும் நவ நாகரீக மோகம் வந்துடுச்சி.
மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்
கனினி மோகம், சினிமாக்களின் தாக்கம்,
இவை தான் விவசாய தொழிலை பாதிக்கிறது.
கிராமங்களை விட்டு வெளியேறும் விவசாய தொழிளார்கள் ஏராளம்.
தமிழக அரசு முன்வந்து
மறையும் வயல்களை காக்குமா?
rajasimman E-mail: mailbags@in.com City: dubai Country: emirates
12/23/2008 10:02:11 AM
தமிழ் மன்ற சொந்தங்களே!
உங்கள் கவித்திறனுக்கு தீனி கொடுக்கும் வகையில் மன்றத்தால் நடத்தப்படும் கவிதைப்போட்டித்தொடரின் பதினாறாவது போட்டி நத்தார், ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, தைப்பொங்கல், இன்னும் விடுபட்ட அனைத்து நன்னாட்களையும் முன்னிட்டு நடத்தப்படுகிறது.
சிறந்த கவிதைகள் தமிழ்மன்றத்தில் மின்னிதழில் (நந்தவனத்தில்) வெளியிடப்படும்.
தலைப்பு : புதிதாய் ஒரு பூமி.
அனுப்பவேண்டிய கடைசித்திகதி : 31.12.2008
ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்
வாக்கெடுப்பு தொடங்கும் திகதி : 01.01.2009
வாக்கெடுப்பு முடியும் திகதி : பங்கெடுக்கும் கவிதைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பின்னர் தீர்மானிக்கப்படும்.
கவிதைகளை அமரன் க்கு தனிமடலிடுங்கள். அல்லது amaran.tamilmantram@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இடுங்கள். (முடிந்தால் பொருத்தமான படங்களியும் கவிதையுடன் இணையுங்கள் : கட்டாயமில்லை)
வரும் கவிதைகளில் இதழ்குழு தேர்ந்தெடுக்கும் கவிதை(கள்) தை இதழில் இடம்பெறும்.
போட்டி தொடர்பான சந்தேகங்களினை தனிமடலில் கேளுங்கள். அல்லது இங்கே கேளுங்கள் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10066
அனைவரும் திரண்டு வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
நன்றி.
தமிழ்மன்றம்
Faizal Ahamed E-mail: faizal.ablaze@gmail.com City: Dubai Country: U.A.E
12/22/2008 12:41:41 PM
பெற்றோர்களே..
உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா...?
மேலே தொடர்ந்து படியுங்கள்....
குழந்தையிடம் தொலைகாட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டது
1. சாதாரன குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக்காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக்காட்டிலும் அதிகமாகும்,(தூங்குவதைத்தவிர).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்வான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார்செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதைசம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்கின்றன.
குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:
1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை, அவை விளம்பர நோக்கத்திற்காக தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது, விளையாடுவது, பழகுவது, வீட்டு பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்முலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்பதினால், பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்தி, சகவாசமின்மை, முரட்டுத்தனம் ஆகிய பின்விளைவுகளை பெறுகின்றன.
வன்முறையும் தொலைக்காட்சியும்
=========================
1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக்காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன, பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுன் (ப்ரெஸ்சோல்) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது.
6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக கெட்ட நடத்தைகளை வளர்க்கிறது.
7. நினைப்பதை அடைய, வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குறியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் உணவு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன, ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.
தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படி தீர்மானிப்பது:
===========================================
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது / அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள், அதாவது, வீட்டு பாடம் படிக்கும் முன் / எழுதும் நேரத்திற்கு முன், சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்காமை.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம், வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டு பாடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர், குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின், பதிவு செய்து, பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று, இது வீட்டு பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும், குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும், டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையை தூண்டவேண்டும்,
இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைபடுத்தியும் டிவி தொடர்கள் கான்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
"யாழினிது கேழினிது என்பர் மடையர் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்" என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள், ஆனந்தமடைவீர்கள்.
வெளியீடு: A1 Proud of Madukkurian
தொடர்புக்கு:a1@madukkur.com
A1 Proud of Madukkurian E-mail: a1@madukkkur.com City: Dubai & Madukkur Country: U.A.E & INDIA
12/22/2008 11:03:46 AM
தேனீர் அருந்தும் வேளையில்
பல இனையங்களில் இருந்து
தொகுத்து தரும் பல செய்திகள்
டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டத்தால் 3 மணி நேரம் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. குளிர்காலம் நிலவுவதால் பஞ்சாப், அரியானா, பீகார், உ.பி உள்பட பல வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. கடந்த வாரத்திலிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பும் பல மாநிலங்களில் மந்தமான காலநிலைதான் நிலவுகிறது.
நேற்று பல பகுதிகளில் குறைந்த பட்ச காலநிலை 13.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் பகலிலும் விளக்கு வெளிச்சத்தில்தான் செல்கின்றன. நேற்றும் டெல்லியில் அதிகாலை முதல் 9 மணிவரை அதிகமான பனிமூட்டம் காணப்பட்டதால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 15 விமானங்கள் மிகவும் காலதாமதமாக சென்றது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து சேரவேண்டிய விமானங்களும் 6 மணி நேர காலதாமதத்துக்கு பின்பே நிலையம் வந்தடைந்தன. இண்டிகோ விமான சேவை மூலம் கோவா மற்றும் மும்பை செல்ல இருந்த இரண்டு விமானங்கள் உள்பட 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
விமான ஓடுதளப்பாதை பனித்துளிகளால் நிரம்பி காணப்படுவதால் விமானப்போக்குவரத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேர காலதாமதம் ஏற்பட்டதாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், பீகார் ஷாம்பார்க் கிரந்தி, மகாபோதி எக்ஸ்பிரஸ், காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்சேவை காலதாமதமாகவே புறப்பட்டது.
புதுடெல்லி டிச 22 : தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டின் மிகவும் முக்கியமான நபர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் சமீபத்தில் பதவி ஏற்றார். அவருக்கு தற்போது "ஒய்" பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அவரது புதிய பொறுப்பை கருத்தில் கொண்டு அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அந்த கோப்பை படித்து பார்த்த அவர் "எனக்கு இவ்வகை பாதுகாப்பு தேவையில்லை" என்று எழுதி கனிவுடன் மறுத்துவிட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகிலேயே மிகவும் அதிகாரம் பெற்றவர் பட்டியலில் சோனியாவுக்கு 17வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபலமான "நியூஸ் வீக்" பத்திரிகை சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் உலகிலேயே மிகவும் அதிகாரம் பெற்ற மனிதர்களாக கருதப்படும் 50 பேரை தேர்வு செய்து அவர்களை தரவரிசைப்படுத்தி உள்ளது.
கல்யாணத்திற்குப் பின் ஆணும் பெண்ணும் எந்த விதத்தில் மாறுகிறார்கள்?
சுதந்திரம் (கை) மாறியவர்களாக! கல்யாணத்திற்கு முன் அங்கங்கே அலைந்த ஆண் இப்போது அடைந்து கிடக்கிறான். கல்யாணத்திற்கு முன் எங்குமே சுற்றாத ஒரு பெண் இப்போது எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாக வலம் வருகிறாள்.
விவித்பாரதி E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/21/2008 12:37:55 AM
அன்பானவர்களே,
நலம் நலமறிய பேராவல்.
குளிரும் நாட்களில்
சற்றே வெதுவெதுப்பாக
இன்னும் சொல்லப்போனால்
குளிர் நாட்களில்
காலைப்பொழுதுகளில் நமது ஊர்களில்
எங்கேயாவது அமர்ந்து குளிர்காய்வது போல,
நமது வலைத்தளத்திலும் சிலவற்றை சொல்ல இருக்கிறோம்.
நமது இனையத்தின் வாசகர் அனைவரையும்
சந்திப்பதற்காக மதுக்கூர்.காம் வாசகர் வட்டம்
சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.
இந்த வாரத்தில் நிகழ்சிக்கான முழு விபரங்களையும் தர இருக்கிறோம்.
'மக்களின் மதியை மாய்க்கும்
ஏடுகளல்ல நமக்குத்தேவை.
தமிழரைத் தட்டி எழுப்பும்
தன்மான இலக்கியங்கள் தேவை.'
-அறிஞர் அண்ணா.
இனிவரும் காலங்கள்
நமது இனையதளம் நமது வழக்கமான
நோஸ்டால்ஜியாவான நமதூரின் செய்திகள்,
நமது மக்களை ஒருங்கினைத்து
இனையம் வழியே குவலயமாக வாழ்வது
என தனது பணிகளை செய்து வந்தாலும்
நமதூரின் நண்மையை கருதி,
காலத்தின் கட்டாயத்தை உனர்ந்து,
ஆக்கப்பூர்வமான பல காரியங்களை செய்ய,
தனது பாதங்களை எடுத்து வைக்கிறது.
'சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா..'
என்ற நமது பட்டுக்கோட்டையாரின் சிந்தனைக்கேற்ப
மதுக்கூர் வலைத்தளமும்
தனது பணிகளை செய்ய இருக்கிறது.
நமது என்னங்கள் எல்லாம் இனிதே நிறைவேற
வல்ல இறைவன் உதவி மட்டுமல்லாது
உங்களை போன்ற வாசகர்களின் ஆதரவும்
நிச்சயம் வேன்டும் என இங்கே நினைவுகூறுகிறோம்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/18/2008 3:01:36 PM
சுயமரியாதை திருமணங்கள் மீது மக்கள் சந்தேகம்!: கருணாநிதி வேதனை
சென்னை: சுயமரியாதை திருமண முறையை சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள் அதைக் கண்டு நடுங்கவும் செய்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
மாநில திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.
இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்முடைய சமுதாயத்தில் இந்தத் திருமண முறையைக் கண்டு நடுங்குகிறார்கள். சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள்.
திராவிட இயக்கத்தால் கிடைத்த பதவி, கிடைத்த ஆதாயம் இது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட தங்களுடைய வீட்டிலே திருமணங்கள் என்றால் பிள்ளையார் படம் போட்ட திருமணப் பத்திரிகை, திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட திருமணப் பத்திரிகை இவைகளைக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டார் கேட்கவில்லை, மறுக்கிறார்கள், நான் என்ன செய்வது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடத்திலேயே மன்னிப்பு கேட்பவர்கள் பலர் உண்டு. (நன்றி கல்கண்டு)
வணிகச்செய்திகள்
அமெரிக்கா நாணய மதிப்பை
அதன் பெடரல்வங்கி 0.025 ஆக குறைத்துள்ளது.
நேற்று முதல் இந்திய நாணய மதிப்பு காசுக்கட்டளைக்காக Draft rate நேற்று 78.00
இன்று Indian Rupee 12.79 (Dh 78.18/ Rs 1000)
ஆயில் விலை முதன் முதலாக
அதாவது கடந்த நான்கு வருடத்தில் குறைந்துள்ளது.
எவ்வளவு தெரியுமா? 39 டாலர்
147$வரை உயர்ந்தது தெரியும்
ஓபக்கின் என்னம் இதை 75$ கொன்டுவரவேன்டும்
இந்த விலை குறைப்புக்கு காரனம்
உற்பத்தி அதிகமாக இருக்கிறது.
வாங்குவதற்கு வர்த்தகர்கள் தயாராக இல்லை.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/17/2008 12:59:27 PM
குடியரசு....
==============
ஒரு குடியரசு நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு இன்றியமையாததோ அது போல உங்களது பங்களிப்பை நமது ஊரின் வளர்ச்சியில் காட்டுவது இன்றியமையாதது ஆகும்.
எந்த ஒரு தேர்தலிலும் நாம் வாக்காளிக்காவிட்டால் தனிப்பட்ட எந்த மனிதருக்கும் ஒரு பாதிப்பும் ஏற்படாததை போல தோன்றினாலும்....சர்வ நிச்சயமாய் உள் கட்டமைப்பு குலைந்து போவதற்கு நாமும் ஒரு காரணியாகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் விளைவுகளும் நம்மை மட்டுமின்றி சமுதாயத்தையே பாதிக்கும்.
தனி மனிதராய் நாம் நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். நமது ஊரின், நமது சமுதாய மக்களை முன்னேற்றும் வகையில் உங்கள் பங்களிப்பை, உங்களின் வலுவான கருத்துக்களை சக்தி மிகுந்த நமது இணைய தளம் வாயிலாக வெளிப்படுத்துங்கள்.
நாமில்லா விட்டாலும் நமது சந்ததியினர்....இன்னும் தெளிவான, சுகாதரமான...தொழில் நுட்பங்கள் நிறைந்த நிறைவான அமைதியான மதுக்கூரின் ஒப்பற்ற குடிமக்கள் ஆகட்டும்.
சிந்தனைக்கு: தவறு செய்வது மட்டும் குற்றமாகாது; சில நேரங்களில் செய்ய வேண்டியதை அந்த அந்த தருணங்களில் செய்யாமல் இருப்பதும் குற்றமே!
உங்களது கருத்துக்களை பதிவு செய்ய.....
Message Board - Post Your Message
Send Email to All our registered Members
Post your Message to Disscussion Form
வாருங்கள் ......சக்தி மிகுந்த வலுவான மதுக்கூரை உருவாக்குவோம்......!
வெளியீடு:A1 Proud of Madukkurian
தொடர்புக்கு: a1@madukkur.com
A1 Proud of Madukkurian E-mail: a1@madukkur.com City: Dubai & Madukkur Country: Dubai & INDIA
12/17/2008 10:56:44 AM
தேனீர் அருந்தும் வேளையில்
hai folks
Cool Morningggggggggg....
காலையிலே என்ன குளிர் என்ன குளிர்
நேற்று இரவும் இதே போல வெளியில்
நல்ல கூதலாக இருந்தது.
காலையில் சொன்னது 17 டிகிரி என..
ஆனால் இது என்ன மலைவாழிடமா?
சரி போகட்டுங்க!
இங்கேயாவது பரவாயில்லை.
நம்ம தலை நகரம் புதுதில்லியில்
நேற்று எத்தனை தெரியுமா?
6.டிகிரி செல்சியஸ்.. யப்பா....
வாரான் வாரான் பூச்சான்டி என
நம்மவர்கள் ஒரு பயம் காட்டுவது சகஜம்.
அப்படி பூச்சான்டி காட்டாமல் ஒரு சம்பவம்.
சென்ற வெள்ளிக்கிழமை சென்னையில்
பாரத் கல்ச்சரில் நடைபெற்ற விழாவில்
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துக்கொண்டு, அதுவும் வழக்கம் போல
வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டியுடன்..
விழா முடியும் வரை இருந்துவிட்டு பின்னர் தனியாக சென்று இருக்கிறார்.
சாதாரனமாக ஒரு வட்டம்,
மாவட்டம் வர்றது என்றாலே..
ஏராளனமான தடல் புடல்கள் நடக்கும்..
அதிலும் இவர் ஒரு மத்திய அமைச்சர்..
பாதுகாப்பு ஏற்பாடுகள்.. கருப்பு பூனைகள்..
இப்படி எதுவும் இல்லை..
அடக் கடவுளே..
ஆமாங்க நாம பிறந்த ஊரிலே
நமக்கே சுதந்திரமாக இல்லாவிட்டால்,
வேறு எங்கே தான் போவது?!
தோஷிபாவில் புதியதாக
அதுவும் கைக்கடக்கமாக
நம்மவர்கள் சொல்வது போல
சும்மா சிக்கென ஒரு கையடக்க கணினி வந்துள்ளது.
பார்க்கவே அழகாக வடிவமைத்துள்ளார்கள்.
சொந்தமாக எங்கேயும் எடுத்து செல்லவும் சிறந்தது.
இதன் விலையும் அதிகமில்லை..
1995 திர்ஹம்ஸ் தான்.
மாடல் வரிசை.. TOSHIBA/NB 100
மூளையை குளிர்ச்சியாக்கும் கொட்டாவி
உங்கள் மூளை சூடேறுகிறதா அப்படி என்றால் அடுத்த வினாடி நீங்கள் நிச்சயம் கொட்டாவி விடுவீர்கள் என்றுகிறது அறிவியல் ஆய்வு. அண்மைய புதிய கண்டுபிடிப்பில் மூளையின் தட்ப வெட்ப நிலையை கட்டுப்படுத்துவதே கொட்டாவியின் வேலை என்று தெரியவந்திருக்கிறது. ஏன் தூங்குவதற்கு முன்னரும் தூங்கி எழுந்த பின்னரும் கொட்டாவி வருகிறது, சில நோய்கள் வந்தால் ஏன் கொட்டாவி அதிகம் வருகிறது? மூக்கு வழியாக சுவாசிப்பதினாலும் தலையை குளிர்ச்சியடைய செய்வதினாலும் ஏன் கொட்டாவி நிற்கிறது என பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடர்பில் பிங்ஹாம்தொன் பல்கலைக்கழக உயிரியல் துறை ஆய்வாளர் என்ட்ரு கேலப் கூறுகையில் மூளை கணினியைப் போன்றது. அவை குளிர்ச்சியாக இருக்கும்போது நன்கு வேலை செய்கின்றன. இதற்கு கொட்டாவி பெரிதும் உதவுகிறது. என்கிறார்.
(நன்றி; வணக்கம் மலேசியா)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/16/2008 7:16:55 PM
FNC proposes increasing minimum salary needed to apply for family visa
=================================================
By Samir Salama, Associate Editor
Published: December 16, 2008, 13:56
Abu Dhabi: The Federal National Council (FNC) on Tuesday proposed increasing the minimum salary requirement to sponsor families of expatriates in the UAE.
According to the proposal, the minimum salary required for an expatriate - without company accommodation - to sponsor family should be Dh10,000 and an expatriate with company accommodation: Dh8,000.
The FNC resumed its session on Tuesday after National Day and Eid holidays on Tuesday.
An Ad-hoc committee of the House also suggested that family-visa applicants should be asked to submit bank statements of six months, detailing salary transfer.
The House also suggested that an expatriate with a minimum salary of Dh15,000 should only be allowed to sponsor housemaids. It also recommended increasing the annual fee for sponsoring a housemaid to Dh7,000.
- Thanks Gulf News
dheva. S E-mail: dheva2000 City: Dubai Country: U.A.E
12/16/2008 10:55:16 AM
Shamal wind to bring cooler weather
By Alice Johnson, Staff Reporter
Published: December 15, 2008, 12:25
Dubai: The Shamal winds expected this week will cool the Emirates, bringing minimum temperatures of between 17C and 18C.
The welcome rain that has added to the cooling may also revisit this week, although not extensively.
Dr S. K. Gupta, duty forecaster, Dubai Meteorological Office, said: "This week we are expecting a bit of Shamal so it will be a cooler week with partly cloudy skies. There is a possibility of a few spots of rain," he said.
Winds will be mostly confined over the sea, blowing at between 20 and 24 knots offshore, and a much reduced 12 to 16 knots inland.
The clouds of dust and sand - that can sometimes pose a risk to motorists by reducing visibility - are not expected, as the winds will not be that strong.
Gupta said of camping conditions for the weekend: "It will not be that pleasant, there won't be bright sunshine and it will be a bit windy. It will be around 22C to 23C with a few spots of rain here and there."
Humidity will not be a factor next week, rising to morning highs of 80 per cent but hovering at at 30 per cent during the day.
(gulf news)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/16/2008 1:01:15 AM
காபி குடிக்கும் வேளையில்
அன்பான மக்களே
நலம் நலமறிய
என்ன சேதி? எப்படி இருக்கீங்க?
போகுது பொழுதுகள் இனிதே..
இறைவன் மிகப்பெரியவன்..
மார்கழி மாதக்குளிரில்
அந்த அதிகாலை விடியலில்
நாம் போர்வைக்குள் விழிக்கும் வேளையில்
எங்கேயோ அம்பலங்களில் ஒலிக்குமே சுப்ரபாதம் ரசித்திருக்கிறீர்களா?wowwwwwwwwwww...nice..yaa..
தமிழகத்தில் வாழ்ந்த காலங்களில்
பலரும் அதன் தருனத்தில் ரசித்திருப்பார்கள்.
அந்த இனிய குரலில் பதிவு செய்தவர் யார் தெரியுமா?
எம்.எஸ். தாங்க..
இதே மாதிரி ஒரு டிஸ்ம்பரின் இரன்டாவது வாரத்தில் தான்
எம்.எஸ். மறைந்தார்...
அந்த கானகுயிலுக்கு மரியாதையாக சுப்ரபாதத்தை
வேறு யாரும் பதிவு செய்யவில்லை.
இது போல குளிர் காலங்களில்
தமிழக மக்களிடையே அதிகமாக
வழக்கத்தில் உள்ளது என்ன தெரியுமா?
தேனீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம்..
'விருந்தின் பயனெல்லாம் வீனாகும் காபி
அருந்தத் தராமல் விட்டால்'
என்றொரு பகடிப்பாடல் அன்றைய காலங்களில்
காபி படுத்திய பாடுதான்.
தமிழகம் முழுவதும் காபி ப்ரியர்கள் வாழ்ந்தாலும்
தமிழத்தில் தஞ்சாவூர் காபிக்கென தனிப்பெருமை உண்டு.
அதென்ன தஞ்சாவூர் காபி
இதைத்தானே கேட்கவர்றீங்க?
அதாவது, நன்கு விளைந்த நயமான
ஹாசன் பீபரி காபி கொட்டையைத் தெறிக்கும்
பதத்தில் வறுத்து - பதமான சூட்டில் அரைத்துத் தூளாக்கி, அதில் வடிந்த டிக்காஷனில் சரி விகிதம் நன்கு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து,
கசப்பு மறைய மட்டும் ஜீனி சேர்த்து,
அது கரைய கரைய குடிக்கக் கிடைத்தால்..
அட..ட... அது தான் தஞ்சாவூர் காபி.
காபியின் சுவை நாக்கு வழியே வயிற்றுக்குள் இறங்கும் முன்,
காபி மணம் மூக்கு வழியே தலைக்கு மேல் கேறி ஏற வேன்டும்.
அதான் பக்குவம்.. அதான் ருசி.
இந்த ருசிக்காகவே அன்றைய காலங்களில்
ஜட்கா வண்டி பூட்டிக்கொண்டு
காபி கிளப்புகளில் அடைக்கலம் ஆன கூட்டமெல்லாம் நம்மூரில் உண்டு.
அடடா.. படித்ததும்
காபி குடிக்கனும் என ஜொள்ளு விடுறீங்களா?
நம்ம தஞ்சாவூரிலே எல்லையம்மன் கோவில் தெருவிலே
அரை நூற்றாண்டு மேலாக இருக்கே 'காபி பேலஸ்'
கம கம என நறுமனத்துடன்....சூடாக...
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/15/2008 4:34:59 PM
Developments of SBI Project
==============================
Dear Natives,
We are taking full effort to bring SBI branch to Madukkur. As you all know
that we have accomplished to get the signatures from all our natives
residing in UAE and also received request letters from Major associations
from Madukkur. (You can see the copy of the letter in our website)
We several times contacted the SBI Branch Manger at Pattukkottai to keep
the things in order to get our things done. Now.we are in the stage of
submitting all the documents to the appropriate Department.
We all now pray and believe that we will get our SBI Branch at our
Native.
Yes!!!! You are correct..whatever human mind can conceive and
believethat will happen!
OUR CURRENT MOTO IS BRINGING THE BRANCH OF SBI TO OUR HOME TOWN!
- A1 Proud of Madukkurian
A1 Proud of Madukkurian E-mail: a1@madukkur.com City: Dubai & Madukkur Country: U.A.E & INDIA
12/13/2008 10:46:21 AM
தமிழும் டமில் கலாச்சாரமும் வளர்வது எங்கே?
என்று பட்டிமன்றம் வைத்தால் அதை விட
சுவாரஸ்யமான நகைச்சுவை அரங்கம் எதுவும் கிடையாது.
இதற்கு மிகப்பெரிய ஆதாரமா தேவை?
ரியாலிட்டி ஷோவுக்கு ரம்பாவை நடுவராக உள்ளதே போதும்.
அடடா.. என்ன ஒரு டமில்ல்..
இலங்கை மக்களால் ஐரோப்பிய ராஜ்யங்களில் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்றில்
ஒரு முறை ஒரு நேயர் 'கல்யானம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?
என்ற பாடலை கேட்கிறார். அவர்களும் அந்த பாடலை ஒலிபரப்புகிறார்கள்.
எப்படி காட்சி மட்டும் தான். ஆனால், சப்தம் இல்லை.
காரனம் இந்த பாடல் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத பாடல் என்பதால்,
அவர்கள் மறுக்கிறார்கள்.
அட புலம் பெயர்ந்த தமிழர்களிடம்
தமிழும் கலாச்சாரமும் எப்படி பேனி காப்பாற்றப்படுகிறது?!
ஆனால் தமிழகத்தில் இந்த நிலையா?
நீங்கள் வேஷ்டி உடுத்திக்கொன்டோ அல்லது,
கைலியுடனோ ஏதாவது அலுவலங்கள் செல்லுங்கள்
உங்களுக்கு உள்ள மரியாதையை பாருங்கள்.
அதே சமயம் நீங்கள் பேன்ட் சர்ட்டுடன் இன் செய்து
அலுவலங்கள் செல்லுங்கள் அப்போது கிடைக்கும் மரியாதையை பாருங்கள்.
இது மட்டுமல்ல இது போல ஏராளனமானவைகளை சொல்லலாம்.
ஆனால் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் விரும்பி காப்பாற்றுவது
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இன்று தமிழ் மக்கள் எங்கே வாழ்ந்தாலும்
அங்கே எல்லாம் தமிழ் சங்கம் இருக்கிறது.
சிகாகோ தமிழ் சங்கம், ஹைதை தமிழ் சங்கம்,
ஹைதராபாத் தமிழ் சங்கம்
என இப்படி பலதை சொல்லலாம்.
இவர்கள் தமிழையும் கலாச்சாரத்தையும் எப்படி எல்லாம்
வளர்க்கிறார்கள் பாருங்கள்.. உதாரனமாக..
'திருவனந்தபுரம் தமிழ் சங்கம்' பார்ப்போம்.
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் நாகர்கோயில் செல்லும் வழியில் கிள்ளிப்பாலம் தாண்டி பி.எஸ்.ஆர் மருத்துவமனையின் எதிரே செல்லும் ஒரு தார்ச் சாலையின் வழியே செல்ல, முதலாம் வளைவைத் தாண்டினால் தெரிகிறது.
திருவள்ளுவரும், பாரதியாரும் இருபுறமும் இருந்து ஞான முகம் காட்ட வாசல் நடுவில் உள்ளது. உறுப்பினர் ஆக வேண்டுமெனில் இரு ஆப்ஷன்கள் உள்ளன. ஆண்டு சந்தா 100 ரூ. ஆயுள் சந்தா 1000 ரூ, ஒரு முறை மட்டும்.
மேலே நூலகம் இருக்கிறது. கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், உரைநடை, வாரப் பத்திரிக்கைகள் என்று அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நாவல் வரிசையில் பாக்கெட் நாவல், உங்கள் ஜூனியரில் இருந்து, காவல்கேர் வரை இருக்கிறது.
மூவாயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். பெரும்பாலும் இங்கே உறுப்பினராகச் சேர்ந்து, நன்கு பயிற்சி பெற்று தலைக்கு ஒரு புத்தகம் பப்ளிஷ் செய்த பின்னர் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பராகிப் போய் விடுகிறார்கள் என்று பட்டது.
மாதக் கடை ஞாயிறு என்பதால், கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டல், தாம் எழுதிய கவிதைகளை படித்துக் காட்டல் என்று இரு பிரிவுகள். புதிய கவிதைகளைத் தொகுத்து சிறந்த கவிதைக்கு நீல பத்மம் பரிசு மற்றும் சில பரிசுகள் தரப்படுகின்றன.
சமீபத்தில் 180-வது கவியரங்கம். கணக்கு போட்டு பார்த்தால் 15 வருடங்களுக்கு மேலாக நடத்துகிறார்கள். யப்பா..!
என்னங்க ஆச்சர்யமா இருக்கா?
தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும்
வளர்ப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்கள்
தான் சந்தேகமில்லை.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/13/2008 10:15:06 AM
அண்ணாவின் மணிமொழிகள்
நம்முடைய பரம்பரை பெரியது.
நமது தமிழினம் மானமே பெரிதென மதித்த இனம்.
எவ்வுரையினும் தன்னுயிர் போல்
காத்து வந்தவன் தமிழன்.
பிறரை எதிர்பார்த்து வாழாதவன் தமிழன்.
உண்மையான தொண்டு
தன்னலமற்ற இருத்தல் வேன்டும்.
பிறரை மகிழ்ச்சியுடன் வாழச்செய்தால் தான்
நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை.
அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால்
வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
மொழி... உன் விழி.
அது ஒரு சமூகத்தின் முகவரி.
அது ஒரு பண்பாட்டின் மூச்சு:
அது ஓர் இனத்தின் ஆடை;
அது ஒரு தாயின் இரத்தம்.
மக்களின் மதியை மாய்க்கும்
ஏடுகளல்ல நமக்குத்தேவை.
தமிழரைத் தட்டி எழுப்பும்
தன்மான இலக்கியங்கள் தேவை.
தன்னம்பிக்கை ஊட்டி மதியைப் பெருக்கும்
விளக்க நூல்கள் தேவை.
அன்பானவர்களே
நமதூர் வலைத்தளம் துவங்கி கிட்டத்தட்ட எட்டுஆண்டுகள் ஆகிவிட்டது. ஆண்டுகள் சில சென்றாலும் இது துவங்கிய நோக்கம்,சிந்தனை,
நமது மக்கள் உலகம் முழுவதும் பரந்து வாழும் காலங்களில் அவர்கள் வந்து உறவாடும் உறவுப்பாலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல்,
கல்லாமை, மூட நம்பிக்கை இவற்றில் இருந்து மக்களை விடுத்து, நல்ல அறிவு சார்ந்த சமுதாயமாக உருவாக்கவேன்டும் என்பதில்
எல்லாம் வல்ல இறைவன் துனையோடு தனது பாதையில் கடந்துக்கொண்டு இருக்கிறது.
நமது வலைத்தளம் சிறகடிக்க... உற்சாகமாக..
ஒரு சந்தோசமான செய்தி என்னவெனில்..
இதுவரை நமது இனையதளம் சார்பாக ஒரு தடவை கூட மக்களுடன் அமர்ந்து உரையாடவில்லை.
எனவே இனயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு
மதுக்கூர் வலைத்தளம் வாசகர் வட்டம் சந்திப்பு
இன்ஷால்லாஹ் துபாயில் நடைபெற உள்ளது.
இது எப்போது, எங்கே, எந்த இடம்,
குடும்பத்துடன் வரலாமா?
போன்ற கேள்விகளுக்கு விளக்கங்களுடன்
காலக்கிரமத்தில் நிகழ்ச்சி நிரல் தருகிறோம்.
நம்பினால் நம்புங்கள் -6
உலகிலேயே பெரிய பூ 'ரப்ளீஷியா'
மலேசியா, போர்னியா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ்
போன்ற இடங்களில் கானப்படுகிறது. இது
106 செ.மீ. சுற்றளவும், 10 கிலோ எடையும் கொன்டது. அழுகிய மாமிசத்தின் நெடி உமிழ்வதால் இதற்கு பிணம் நாறி என்ற பெயரும் உண்டு. மலேசியாவின் சபா மானிலம்,
தாய்லாந்தின் சுரத்தானி மாகானம் ஆகியவற்றின் தேசிய மலர்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/10/2008 4:52:34 PM
hai all?!
how is ur holidays?!
enzoyyyyyyyyyyyyyy
விடுமுறை நாட்களில் இருந்து
நடைமுறை வாழ்க்கைக்கு
அதுவும் எப்படி?
என்னத்தே என....
இன்று அரசு அலுவலகங்களும் வங்கிகளும் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கானப்படுகின்றன..
கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின்
மீன்டும் இயந்திர வாழ்க்கைக்கு...
அமீரங்களில் இனிதே சந்தோசமாக
தியாகத்திருனாள் கொண்டாடினோம்.
நமது ஊரிலும் நேற்று பெருனாள் கொண்டாடினார்கள். நேற்றும் ஊரில்
தொடர்ந்து மழை நசநசத்தது.
ஆர்வமாக ஊருக்கு போன மக்கள்
நொந்து நூடுல்ஸாகி திரும்பி வருவார்கள்.
இது போல பண்டிகை தினங்களில்
அடமழை பெய்தால்,
இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது,
பண்டிகை தின கொண்டாட்டங்களும்
மந்தனிலை தான்.
இந்த ஐந்து நாட்கள் விடுமுறையில்
என்ன செய்தோம் என்பதை
ஒரு புத்தகமாகவே நாம் வெளியிடலாம்.
என்ன தலைப்பு?
'விடுமுறை நாட்களை
வெட்டியாக போக்குவது எப்படி?'
சாப்பிட்டோம், தூங்கினோம், டிவி பார்த்தோம்,
நண்பர்களுடன் அரட்டை அடித்தோம்.
வெட்டியாக போனில் மொக்கை போட்டோம்.
இதில் முக்கியமாக சொல்லவேன்டுமானால்,
இந்த ஐந்து நாட்களில்
500 பயனர்கள் நமது மதுக்கூர்.காம்
வந்து உலாவி இருக்கிறார்கள். gud..gud..
நாம் நமது ஊர் மக்களை சந்தித்து
பெருனாள் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டாலும்
இது போன்ற தினங்களில்
நமது ஊர் மக்கள் அனைவரும்
சந்திக்க ஒரு ஏற்பாட்டை
ஏதாவது ஒரு அமைப்பு முன்வந்து செய்யவேன்டும்.
திரைகடலோடி திரவியம் தேடிவந்த நாட்டிலே..
நமது ஊரார்கள் அனைவரையும் சந்திக்கும் பாக்யம் கிடைக்கனும் அல்லவா?
இந்த காலத்தில் ஐக்கியமாக வாழ்வது
எவ்வளவு சந்தோசமானது என்பது
காலம்கன்டு நடப்பவர்கள் சொல்வாங்களே..
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/6/2008 12:41:54 PM
அவஸ்தைகள் பலவிதம் 3
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் செயல்கள்
நமது தமிழ் கலாச்சாரம் எங்கே போகிறது என
நம்மை எழுதவைக்காமல் இல்லை..
அப்படி என்னதான் என்று தானே கேட்குறீர்கள்?
அன்றைய காலங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும்
அந்த திருவிழாக்களில் கலந்துக்கொள்ள ஏராளனமான பக்தகோடிகள்
திருவிழா நிகழ்ச்சிகளில் காண பலரும் வருவார்கள்.
அந்த திருவிழாக்களில் முக்கியமாக சங்கீத கச்சேரிகள் பலே..பலே..
அந்த பனிபொழியும் இரவுகளிலும், நிலாக்கால பொய்கைகளிலும்,
நடக்கும் சங்கீத கச்சேரிகளின் அருமையை இந்த
சிறு கட்டுரையில் சொல்லியடங்காது.
அது நாதஸ்வரமாக இருக்கட்டும் இல்லை வாய்ப்பாட்டாக இருக்கட்டும்.
ஆனால் இன்றைய காலங்களில் இதன் போக்கே மாறிவிட்டது.
சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைத்தளத்தில் நாம் படித்த கட்டுரை
நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. என்ன எனில்,
இப்போதெல்லாம் விழாக்களில் அதாவது சில ஊர்களில்
நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நடன நிகழ்ச்சிகளை
நீங்கள் பார்த்தால் நான் எழுதியது தப்பில்லை என சொல்வீர்கள்?!
அவரது வலைதளத்தில் சில புகைப்படங்களும் தந்துள்ளார்.
அதாவது மேடை நிகழ்ச்சிகளில் அப்படி ஒரு ஆபாசம்
இதோ அவரின் எழுத்துக்கள் சில...
'சமூக நலத்தோட பார்த்தால் இவர்கள் செய்வது மிகதவறு.ஆனால் இப்படியும் பெண்கள் பொது இடங்களில் தங்களை தொட அனுமதிப்பார்கள் என இதை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.ஆனால் அவர்கள் சூழ்நிலை என்ன என எனக்கு தெரியாது. இதை ஒரு பிழப்பாக தேர்வு செய்வது கையாலாகாதனம்.இந்த நிகழ்ச்சி சில பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.'
இது என்ன? இதை எப்படி மக்கள் அனுமதிக்கின்றாங்களே தெரியலை.
குஷ்பு சொன்னதற்காக துடைப்பத்தை
எடுத்துச்சென்ற மகளிர்கள்,
இப்போ எங்கே போனாங்க என
நம்மை கேட்க வைக்கிறது.
இது போல தொலைக்காட்சிகளில்
நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கள்,
அது என்ன மானாட மயிலாட..
உருப்பட்ட மாதிரி தான்...
இதெல்லாம் தமிழ் இளைஞர்களை
எங்கே போய் விடும்னு சொல்லமுடியாது.
செய்திதாள்களில் படிக்கிறோமே.. அங்கே இங்கே
யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போவது,
கள்ளத்தொடர்புகள் என இது போன்றவைகள்
நடைபெற என்ன காரனம்னு நினைக்கிறீங்க?
இது போன்ற கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிப்பது தான்.
புயல் மழையில் நிவாரனம் கொடுப்பது,
தீ விபத்துகளில் பங்களிப்பது,
இரத்ததான முகாம்கள் நடத்துவது மட்டும் தான்
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்களின் கடமையா?
இல்லையே? இது போன்ற கலாச்சார சீரழிவிற்கு
எதிர்ப்பு தெரிவிப்பதும் நமது கடமையல்லவா?
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/6/2008 11:45:45 AM
தேனீர் அருந்தும் வேளையில்
விடுமுறை நாட்கள் தூவான மழையில் நனைந்தவாறு
இனிதே சென்று கொண்டு இருக்கிறது.
அமீரகத்தில் வாழாதா பிற மக்களுக்காக
இங்கே ஹஜ்ஜூப்பெருனாள் விடுமுறைகள் நேற்றுமுதல்
தொடங்கிவிட்டது. நாளை இன்ஷால்லாஹ் அரபாதினம்
நாங்கள் நோன்பு நோற்கவேன்டும்.
இந்த நோன்பு சிறு பாவங்களுக்கு பரிகாரமாகும்.
இன்ஷால்லாஹ் திங்கட்கிழமை இங்கே பெருனாள்.
நேற்று மாலை அற்புதமான ஒரு சந்திப்பு நடந்தது.
தமிழ் மக்களிடையே பலர் தனது நேரத்தை தொலைக்காட்சிகளில் ஒதுக்கினாலும்,
எல்லாரும் அப்படி இல்லை என சொல்லலாம். காரனம், இன்னும் பலர் புத்தகங்களில் தனது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில்
நேற்று மாலை துபாயில் கீற்று வாசகர் வட்டம் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதன் சந்திப்பு நிகழ்ச்சி கீற்றுவில்
பத்து நாட்களுக்கு முன்னரே விளம்பரம் செய்ய
அதை பார்த்து மக்கள் வந்து சேர்ந்தனர்.
நேற்று மாலை 5.00 மணி முதல்
நண்பர்கள் ஒருவர் ஒருவராக வந்து ஐக்கியமாக, நிகழ்ச்சி களை கட்டியது.
இந்த சந்திப்பில் கீற்றுவின் கட்டுரைகள்,
அதன் நடைமுறைகள்,
கீற்று உருவான வரலாறு,
கீற்றுவின் எதிர்காலம் எப்படி,
வாசகர் தளத்தை விரிவுபடுத்துவது,
கீற்றுவை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்யலாம் போன்றவைகள் கலந்துரையாடலில் பேசப்பட்டது. பல நண்பர்களின் கருத்துக்கள்,
அவர்களின் சிந்தனைகள், பாராட்டுக்குரியது.
நல்ல பல சிந்தனையாளர்களை சந்திக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.
இப்படி ஒரு வாசகர் வட்டத்தில் சந்திப்பது
இதுவே முதல் முறை.
இன்றைய காலகட்டத்தில் வெட்டியாக
இதழ்கள் நடத்தாமல்
நல்ல ஒரு சமுதாயத்திற்கு வழிகாட்டியாக
கீற்று தொடர்ந்து வர
நமது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
இந்த சந்திப்பில்
Iniyavan Media Vision International
இனியவன் ஹாஜிமுஹம்மது சார்பாக
ஊடகத்துறையில் சிறப்பாக
பணியாற்றும் 'கீற்றுவின் ரமேசு'க்கு
விருதும் வழங்கப்பட்டது.
கீற்று இனையதள முகவரி
http://www.keetru.com
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/4/2008 7:15:33 PM
அனைவருக்கும்
இனிய மழை காலங்களில்
இனையம் சார்பாக வெதுவெதுப்பான வாழ்த்துக்கள்.
நனைஞ்சீங்களா?
இந்த மாதிரி மழையில் நனைய..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
இன்று காலை புலரும் பொழுதே
வானமகள் கொஞ்ச தொடங்க..
பின்னர் அனைவரும் வேலைக்கு
சிறிது நேரம் விட்டுகொடுத்தாள்.
இருந்தாலும் அதன் பின்னரும்
மழை பல இடங்களில் நச நசக்க..
வாவ்வ்வ்வ்வ்
மழை பெய்த பிறகு கூறப்படவேன்டிய துஆ
முதிர்னா பி பள்லில்லாஹி வரஹ்மதிஹி
அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனது அருளால்
நாங்கள் மழை பொய்விக்கப்பட்டோம்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
'லப்பைகல் லாஹும்ம லப்பைக,
லப்பைக லா ஷரீக லக லப்பைக,
இன்னல் ஹம்த வந் நிமத லக
வல் முல்க லா ஷரீக லக.'
புனித ஹஜ்ஜின் மாதத்தில்
நமது ஊரிலிருந்து பத்திற்கும் மேற்பட்டவர்கள்
ஹஜ் புனித பயனம் சென்று இருக்கிறார்கள்.
இறைவன் அவர்களின் இந்த புனித பயனத்தை ஏற்றுக்கொள்வானாக! ஆமின்.
இந்த பயனத்தில் அவர்களிடம்
ஏதாவது குறைகள் செய்து இருந்தால்
அதை இறைவன் மன்னிப்பானாக! ஆமின்.
அவர்கள் அனைவரும் நல்லமுறையில்
தாயகம் வர பிரார்த்திப்போம்.
இனையம் சார்பாக அனவருக்கும்
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/3/2008 11:51:32 AM
இயற்கையின் காட்சிகளை ரசித்தபடியே
மேற்கு தொடர்ச்சி மலையில்
நாம் பயனம் செய்யும்போது
எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்
திடீரென்று மழை
அதாவது தூவான மழை..
நம்மையும் மலைகளையும் நனையவைக்க..
அது போல காலையில்
விடுமுறை நாட்கள் என்பதால்
சோம்பலாக நெட்டிமுறித்தபடி
மெல்ல ட்ராபிக் இல்லாத துபாய் சாலையில் செல்ல
நம்முடன் செல்லத்தோழியாக வானம் தண்ணீர் தெளித்து குதூகாலிக்க..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னத்தே சொல்ல...
நம்ம ஊரு பக்கம் சொல்வாங்க
கார்த்திகை மாசம்
கருத்த இடமெல்லாம் ஊத்தும் என
அட அது போல இங்கேயுமா?
இறைவன் மிகப்பெரியவன்..
( நம்ம தஞ்சாவூர் பாஷையிலே சொன்னா குறுவைசாகுபடிக்கு இந்த மழை நல்லது)
இந்த மழைக்கு தகுந்த மாதிரி
ஒரு கிராமிய மணத்தில் கவிதை கூட
சிங்கையில் இருந்து ஒரு வாசகர் அனுப்பி இருக்கார்
சிங்காரத்துல
சிந்தாட்டத்துல
செந்தூரத்துல
சிங்காபுரம் குளிக்குது - வானில்
சேனைகூட குதிக்குது!
பாரோரத்துல
தாராளத்துல
காரோரத்துல
வாணவெடி வெடிக்குது - மனசு
கானபாடம் படிக்குது!
பூந்தோட்டத்துல
சேர்ந்தாட்டத்துல,
சார்ந்தாட்டத்துல
காந்தாரப்பண் பாடுது -சிங்கை
பூந்தேரென ஓடுது!
பறந்த பாரில்
பிறந்த நாளில்
சிறந்த நாளளாய்
மலர்ந்த முகம் காட்டுது - இனங்கள்
கலந்து உறவு கூட்டுது !
கொண்டாட்டத்துல
குதுகலத்துல
கும்மாளத்துல
குவலயமே கலந்துக்கோ - வந்து
கூட நீயும் சிறந்துக்கோ!
(SINGAI ANM HITHAYATHULLAH )
இது டிஸம்பர் மாதம் அல்லவா?
டிஸம்பர் என்றாலே சங்கீத ஸீஸன்
நம்து இனையத்திலும் கொஞ்சம் சங்கீதம் கலப்போம்
ராகங்களில் மிகச்சிறந்தது ஷண்முகப்ரியா
இந்த ராகத்தில் அமைந்த
பல பாடல்கள் இருக்கின்றன.
உதாரனமாக 'ஆலப்போல் மேலப்போல்
ஆழம் விழுது போல்..'
என இது போல பல பாடல்கள் இருக்கு.
இது ஒரு மேளகர்த்தா ராகம் ஆகும். 72 ராகங்களின் வரிசையில் இது 56 வது ராகமாகும்.இது பத்தாவது சக்ரமான 'திசி' சக்ரத்தில் இரண்டாவது ராகமாகும்.
இந்த ராகத்தின் ஆரோஹணம் அவரோஹணம் கூறுகிறேன்.
ஸ, ரி2, க2, ம2, ப, த1, நி2 ஸ்
ஸ், நி2, த1, ப, ம2, க2, ரி2, ஸ
அதாவது இதன் ஸ்வரங்கள், ஸ (ஷட்ஜம்), சதுச்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், ப்ரதி மத்யமம், ப (பஞ்சமம்), சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் மற்றும் மேல் ஷட்ஜம்.
ஷண்முகப்ரியா என்ற பெயரில் "ஷ" மற்றும் "மு" அதாவது "ம"வைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் - 'ண்' என்பது முழு அக்ஷரமாக இல்லாததால் அதற்கு அடுத்த 'ம' வை எடுத்துக் கொள்ள வேண்டும். 'ஷ' என்பது 'யாத்யஷ்ட'வில் ஆறாவதாக வரும். 'ம' என்பது 'பாதிபஞ்ச'வில் ஐந்தாவதாக வரும். அப்படியே பார்த்தால் 65 என்று வரும்.
ஆனால் நாம் அதைத் திருப்பிப் போட வேண்டும். கணக்குப் பாடத்தில் நாம் ஒன்று, பத்து, நூறு என்று வலப்புறத்தில் இருந்து இடது பக்கம் செல்கிறோம் அல்லவா - அதே போல இங்கும் முதலில் வலதுபுறம் இருக்கும் எண்ணைத்தான் பார்க்க வேண்டும்.
மறைந்த இசைமேதை திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், அவருடைய ராக ஆராய்ச்சியில் ஷண்முகப்ரியா ராகத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"ஷண்முகப்ரியா ராகம், கேட்பவர் மற்றும் பாடுபவரது புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்யும் வல்லமை படைத்தது. அது மனதுக்குத் தைரியத்தை அளித்து உடல் வலிமையைப் புதுப்பிக்கிறது.
இந்த ராகத்தில் திரைஇசைப் பாடல்கள் பல உள்ளன..
அவற்றுள் முதன்மையானதாகத் திகழ்வது, 'தில்லானா மோஹனாம்பாள்' படத்தில் வரும்
"மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
அழகர் மலை அழகா, இந்தச் சிலை அழகா - என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ??"
சில திரை இசைப்பாடல்கள் ஒரு ராகத்தின் ஸ்வரங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் இந்தப் பாடலோ ஷண்முகப்ரியா ராகத்தின் முழு ரசத்தையும் பிழிந்து கொடுக்கிறது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.
அந்த "மாலவா, வேலவா, மாயவா, ஷண்முகா.." அந்த இடம் ஒன்று போதுமே.
இந்த ராகத்தில் அமைந்த இன்னும் சில பாடல்கள் :-
'சதாரம்' என்ற படத்தில் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத இன்பம் பெருகுதே"
'திருவிளையாடல்' படத்தில்
காலத்தால் அழியாத ஒரு பாடல்
திருமதி. கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய,"பழம் நீ அப்பா, ஞானப்பழம் நீ அப்பா,தமிழ் ஞானப் பழம் நீ அப்பா...."
'தூக்குத்தூக்கி' படத்திலிருந்து..
"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்,
கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்"
'அருணகிரிநாதர்' படத்தில், திரு.டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் அப்படியே அருவி போல பொழிந்து பாடி இருக்கும்,
"முத்தைத்தருபத்தித்திருநகை அத்திகிறை சத்திச் சரவண முத்துக்கொருவித்துக் குருபர எனவோதும்" இன்னொரு அற்புதமான உதாரணம் இது.
'இரும்புத்திரை' படத்தில் பி.லீலா அவர்களின் குரலில் ஜொலிக்கும் ஒரு பாடல்,
"நெஞ்சில் குடி இருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா ??"
'புதிய வார்ப்புகள்' படத்தில்,"தம் தம் தன தாளம் வரும், புது ராகம் வரும்,
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்"
'சலங்கை ஒலி' படத்தின்,
"தகிட ததிமி தகிட ததிமி தந்தானா
ஹ்ருதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா"
இசைஞானி இளையராஜா அவர்களின்
" Nothing but Wind" என்ற தொகுப்பில் கூட முதலில் வருவது இந்த ராகமே.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
12/1/2008 12:44:55 AM
Hai folks,
நலம் நலமறிய பேராவலுடன்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
'செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'
தஞ்சை ஜில்லாவில் உள்ள பேரூராட்சிகளிலே
நமதூர் ஒரு சிறந்த ஊர் என்றால் மிகையல்ல.
ஏராளனமான கல்விமான்களும்,
ஆன்மிகவாதிகளும், திராவிட சித்தாந்தம் உள்ள மக்களையும்
வணிகத்தில் சிறந்து விளங்கும் ஒரு பழைய ஊர்.
நமதூர்வாசிகள் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
இவர்கள் அனைவரையும் இனைக்கும் உறவுப்பாலமாக
நமக்காக இனையத்தை வடிவமைத்தோம்.
இறைவன் துனையுடன் இன்று நமது இனையத்தில்
வருகை பதிவேடு 70000 நெருங்கிவிட்டது
இறைவன் மிகப்பெரியவன்.
இது போன்ற இனையப்பத்திரிகைகள் நடந்த
உங்களைப்போன்ற வாசகர்களின் ஆதரவு தான் முக்கியம். இனிவரும் காலங்களிலும்
உங்களின் ஆதரவும், என்னங்களும்,
என்றும் தொடர கேட்டுக்கொள்கிறோம்.
ஊரில் மழை விட்டு
இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் வந்துகொன்டு இருக்கின்றனர். இப்போ அவர்களுக்கு தேவை என்ன தெரியுமா? ஒரு பத்து நாளைக்கு மழை இல்லாமல்
நல்ல வெயில் அதான்..
இது போன்ற நாட்களில் வெயிலில் அமர்ந்து
அந்த இளவெயிலில் குளிர்காய்வது
இன்னும் பல கிராமங்களின் வாழ்வில் கலந்த ஒன்றாகும். அதே போல இது போன்ற வெயில் அடிக்கும்போது வெயிலில் அனைத்தையும் காய வைக்க மக்கள் விரும்புவார்கள்.
துணிமணிகள் முதல், வீட்டு கதவுகள்,
ஜன்னல்கள் திறந்துவைத்து,
தலையனைகள், மெத்தைகள், பாய்கள் என அனைத்தையும் உலரவைப்பார்கள்.
காரனம், தொடர்மழை என்பதால்
அந்த ஜில்லெப்பு மாற மக்கள் விரும்புவார்கள்.
சமீபத்தில் இந்தியர்கள் அனைவரையும்
நடுங்க வைத்த சம்பவம் மும்பை தாக்குதல்
இதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு
நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இந்த தாக்குதலை முறியடித்து
இயல்பு நிலைக்கு மாற்றி தந்த
இந்திய வீரர்களுக்கு நமது ராயல் சல்யூட்.
இதில் பலரும் இறந்துள்ளனர். அதில் இறந்தவர்களில்
டைம்ஸ் ஆப் இந்தியாவின் துனை ஆசிரியர் சபீனாவும் ஒருவர்
அவருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
(தனியாக காரனம் பத்திரிகையாளர்)
வட இந்தியாவில் ஒரு சொல் சொல்வார்கள்
கேள்விபட்டு இருக்கிறீர்களா? என்ன அது?
'Brain in india
come from south'
கேள்விபட்டு இருக்கிறீர்களா?
அதை உறுதி செய்யும்வன்னம்
பல சம்பவங்கள் சொல்லலாம்.
மும்பையில் நடந்த சம்பவத்திற்கு பின்
மத்திய மந்திரி பதவியிலிருந்து
சிவராஜ்பாட்டீல் ராஜினாமா செய்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும்
அதே போல கட்சி நடத்தவும்
மிகவும் இக்கட்டான சூழ்னிலை.
இந்த காலகட்டத்திலும்
அவரின் மந்திரி சபையையும்
எடுத்த கூடுதலாக நடத்த அண்ணன் 'ப.சி'. சம்மதித்துள்ளார். அசரலையே..?!
இது ஒரு வரவேற்புக்குரிய சம்பவம்.
அதுவும் ஒரு தமிழர் எடுத்து நடத்துவது
பெருமைக்குரிய நிகழ்ச்சியாகும்.
நன்மக்கள் இந்த மண்ணின் நாற்றங்கால்கள்
என்பது சான்றோர்களின் வாக்கு
அதை நிருபித்துள்ளார். வாழ்க 'ப.சி'.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/29/2008 1:09:51 PM
Mumbai Attacks Some Common Questions from Normal Indian Mind
==============================================
1) Where was Raj Thackaray for past few days? who can speak lot and trouble all the people in the name of community but something major thing happening in the capital city where he and his team? Why should they hide themselves? Hope they can understand Mumbai or any part of India is not for particular Religion or Community or Political Partyits for INDIANS!
Raj Thakery and his team should notice that lots of North and South Indians Sacrificed their life to take care of not only the people at Mumbai but including Raj Thakarys peaceful sleep!
2) We all understood that how the Militants entered via sea.but still here two questions
a) Inteligengy bureau is functioning or sleeping?
b) We all heard more than 60 infiltarators entered the countyr and speard over to the full City where they can stay place like Nariman!.Public - you all are not well aware of the doubtful movements of anonymous people?
3) This questions goes to Media of Tamil Nadu..
We all noticed that past few days global media is standing infront of the War Places and transfering the news to the Internationl community. For Example; NDTV, CNN, BBC, Asianet and lot of other channels were focusing the current sitution of the war site where they took life Risk, but we did not see non of the bold Tamil Chanells were doing that.. Tamil TV Media has lot of time slot to make money in safer ways like brodcasting only the movie related and entertainment based programmes.
Yesterday the whole country was at risk our Tamil Channels were broadcasting the Dramas & Dance programmes.
Why any media can not do the live cast with Tamil commentry.. sothat altleast all the people in Tamil Nadu also may well aware of the contrys situation and will take individual responisibility for their lives.
Real hereos of our country are NSG (NATIONAL SECURITY GUARDS)
INDIA SALUTES THEM!!!!!
Dheva. S E-mail: dheva2000 City: Dubai Country: U.A.E
11/27/2008 5:50:57 PM
நிஷா புயல் கரையை கடந்தது
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த "நிஷா புயல்' இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. அது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்திற்கு பலியானவர் களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக விடிய விடிய மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, புயல் சின்னமாக மாறியது. நிஷா என்ற இந்த புயல் நேற்று காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாலையில் கடக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியது. ஆனால் வேதாரண்யம் அருகே நிலை கொண்டு மேலும் வலுவடைந்தது.
இன்று அதிகாலை வடமேற்கு திசை நகர்ந்து தமிழகம், புதுவை கடற்கரையில் காரைக்கால் அருகே மையம் கொண்டிருந்தது.
கடந்த சில நாட்களாக கண்ணா மூச்சி விளையாட்டு நடத்திய இந்த "நிஷா புயல்' காரைக்காலுக்கு வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்கு இடையே கரையை கடந்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரை அருகே காரைக்காலுக்கு வடமேற்கு பகுதியில் அதுமையம் கொண்டிருந்தது.
மேலும் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான அல்லது மிக கடுமையான மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. ஒரு சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை கொட்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும், கடல் கொந்தளிப்பாக இருக்கும். பலத்த சூறாவளி காற்று காரணமாக குடிசைகளுக்கு சேதம் ஏற்படும். மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழக்கூடும். கடற்கரை பகுதியில் மின்சார மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்படலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
33 சென்டிமீட்டர் மழை
ஒரத்நாடு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் மிக அதிகபட்சமாக 33 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் 28 செ.மீ., திருவடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் 26 சென்டிமீட்டரும், சீர்காழியில் 25 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.
பண்ருட்டியில் 23 செ.மீ., சேத்தியாதோப்பு, கொள்ளிடம் 21 செ.மீ., திருத்துறைப்பூண்டி 20 செ.மீ., காரைக்கால், நாகப்பட்டினம் 19 செ.மீ., புதுச்சேரி விமான நிலையம் 18 செ.மீ., கொடவாசல், நன்னிலம், திருவாரூர் 17 செ.மீ., கும்பகோணம் 16 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இன்று டெல்லி மருத்துவமனையில் மரணமடைந்தார். வி.பி.சிங் கடந்த சில ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். சிறுநீரக கோளாறு உட்பட பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
.
இந்நிலையில் இன்று டெல்லி மருத்துவமனையில் வி.பி.சிங் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த வி.பி.சிங், 1989 ஆம் ஆண்டு முதல் 90 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அதற்கு முன்னர் அவர் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சராக இருந்தார்.
அதற்கு முன்னர் அவர் உத்திரபிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார்.
காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் ஜனமோர்ச்சா எனும் தனி கட்சி ஏற்படுத்தி பின்னர் கூட்டணி ஆட்சி அமைத்தார்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirtes
11/27/2008 11:32:58 AM
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 12 காவலர்கள் உள்பட 100 பேர் பலி
===========================================================
வியாழன், 27 நவம்பர் 2008
மும்பையில் நேற்றிரவு அடுத்தடுத்து 9 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே, 11 காவலர்கள் உள்பட 100 பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பையில் பயங்கரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதயடுத்து அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அதிரப்படையினர் தாஜ் ஓட்டலுக்கு விரைந்தது. அங்கு பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்க அதிரடிப்படையினர் முற்பட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சுட்டுக் கொல்லப்பட்டார். புல்லட் புரூப் சட்டை அணிந்திருந்த கார்க்கரே, அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.
இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அப்போது நடந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவல்துறை அதிகாரியும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியானார்.
இதே போல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ள 3 எம்.பி.க்கள் உள்பட 100 பேரை மீட்க ராணுவம், அதிரடிப்படையினர், மும்பை காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
இதனிடையே மும்பை நிகழ்வை தொடர்ந்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
dheva. S E-mail: dheva2000 City: Dubai Country: U.A.E
11/26/2008 6:24:40 PM
ஆற்றங்கரையோரம் பெரிய ஆலமரம் மதில்சுவர் உடைத்து விழுந்து
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பிறகு சரிபார்க்கப்பட்டது.
ஆற்றங்கரையிலிருந்து செட்டித்தெரு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்துள்ளது
நேற்று இரவு முதல் மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 12மணி நேரத்திற்கு
மேலாகும் என தகவல்கள்.
ஏனெனில் சாலைகளில் ஆங்காங்கு
மின்கம்பிகள் அறுந்து கிடப்பதே காரனம்.
ஆன்கள் மேல்னிலைபள்ளி அருகே மரம் ஒன்று
வேரோடு சாய்ந்துள்ளது..இதனால் போக்குவர்த்து பாதிப்பு. பிறகு சரி செய்யப்பட்டது.
பேருந்து நிலையம், முக்கூட்டுச்சாலை, கடைத்தெரு, மார்க்கெட்,
என அனைத்து இடங்களிலும்
கடைகள் மூடப்பட்டு கானப்படுகின்றன.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர் செய்திகளுக்காக இன்வென்டர் வசதியுடன்
நமது செய்தியாளர் அல்பாஸ் சுல்தான்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/26/2008 2:56:58 PM
மழை செய்திகள்....
நமதூரில் இன்றும் மழை தொடர்கிறது
மக்கள் வெளியே செல்லமுடியாமல்
காற்றும் வீசுகிறது. மக்கள் வீடுகளை விட்டு
வெளியே எங்கேயும் செல்லவில்லை...
மானிலத்திலேயே அதிகபட்சமாக
திருவிடை மருதூரில்
மழை பதிவாகியுள்ளது.
கண்ணன் ஆற்றுக்கு மேலே
வெள்ளம் கரைபுரன்டு ஓடுகிறது.
இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(தினதந்தி)
வேதாரன்யத்தில் இன்று மாலை
புயல் கரையை கடக்கும் (குமுதம் செய்திகள்)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/26/2008 2:52:39 PM
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/25/2008 8:00:33 PM
நமதூரில் நேற்று வரை
பெய்த மழையின் அளவு 55மி.மீ.
மழை அறிவியல் பார்வையில்:
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.
மழை வேதபாடங்களில்:
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது". (அல் குஆன் 39:21)
"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்". (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.
இதைப் பற்றி The Bible, The Quran and Science என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The quran and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டா மாரிஸ் புகைல் கூறினார்.
இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டா மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை.
நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது (அல் குஆன் 39:21)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/25/2008 7:02:31 PM
மழை..
மேகங்களின் சிரிப்பு
இல்லை
மேகங்களின் ரங்கோலி
இல்லை
மேகங்களின் குதூகாலம்
இல்லை
மேகங்களின் மஞ்சுவிரட்டு...
கடந்த 3 நாட்களாக
ஊரில் நல்ல மழையாம்
இன்றும் மழை தொடருகிறது.
நமதூரே தண்ணீரில் இன்னும் மிதக்க தொடங்கலை..
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படவில்லை
தொலைபேசி இனைப்புகள் பாதிப்பு இல்லை
இனி வரும் காலங்கள்
இது போல செய்திகளுக்காக
ஒரு ஹாட்லைன் தொடங்கிவிடுவோம்
அதற்கான ஏற்பாட்டை செய்ய முயல்வோம்
நமதூர் அவசர செய்திகளுக்காக
அந்த ஒரு சில நாட்கள்
ஒரு குறிப்பிட்ட நம்பரில் அழைத்து
நமதூரின் செய்திகளை கேட்டுப்பெறலாம்.
மதுக்கூரில் வசிக்காத மதுக்கூர்வாசிகள்
நலன்கருதி இதை செய்யலாம்.
ஆனால் இது போல தொடர் மழை தரும்
வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
மழை இல்லாமல் மனிதன் வாழ்வு சிரமமே..
நமதூரில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம்
மிகவும் தாழ்ந்த நிலையில்
இதுபோல மழையினால் நீர்மட்டம் உயரும்.
அதுபோல அன்றைய வாழ்வில்
எல்லோர் வீட்டிலும் கிணறு இருந்தது.
இப்போது கிணறு எங்கே? என
தேடித்தான் பார்க்கவேன்டும்.
அடுத்த தலைமுறைகள் கிணற்றை அருங்காட்சியகத்தில் தான் படிக்க வேன்டி இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் வன்னாங்கேனியை கூகிள்'ல் தேடும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை.
அன்றைய காலம் போல
மீன்டும் கிணறுகள் உபயோகம் வரனும்.
ஆமாம். பாலாவரன்டி தெரியுமா?
ஹா..ஹா... அப்படின்னா?
என்ன என தானே கேட்குறீங்க?
நம்ம வீட்டு கிணறுகளில் ஏதாவது விழுந்தால்
எடுக்க உதவும் உபகரனங்க...
இப்போது இதைபார்க்கவேன்டும் என்றால்
கிராமப்புறங்கள் தான் போகவேன்டும்..
நான் வெளியே வந்ததும்,
வேகமாய்
எட்டிப் பார்த்தது
ஒரு குட்டித் துளி,
வசமாக மாட்டிக்கொண்டாய்,
இசையாக நனைத்துவிடுகிறேன் என்று,
சத்தமாக மொத்தமாய்
கொட்டித் தீர்த்துவிடத்
துடித்ததோ என்னவோ,
தாயைப் பார்த்த
கன்றினைப் போல்
துள்ளித் திரிந்துதான்
என் மேல் படர்ந்தது..
சிலுசிலுவென்று இதமாய்
மனதினில் நுழைந்து,
ஆளரவமற்ற மலைகளின்
ஓரமாய் ஓடும்
நதியின் அலைகளை,
மெலியதாய் அசைத்து,
தேகம் குளிராமல்
வருடிச்செல்லும் காற்றும்,
இசைவாய்ப் பறந்தபோது,
சில்லறையாய் நனைந்த நான்
மொத்தமாய் நனையத் தொடங்கினேன்.
வழிமறித்து மனதை
கொள்ளை கொள்ளும்
மழையை எதுர்த்து
எதுவும் செய்யத் தோன்றாமல்,
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரை
ஆனந்தமாய் மூழ்கியபோது
கண்டுகொண்டேன்
மழை எப்போதும் இன்பம்,
உடல் நனைத்தல் மட்டுமல்ல,
மனம் நிறைத்தல் கூட,
இப்போது புரிந்தது,
ஏன் மழைக் கள்ளன் என்பதுவும்
(நெட்டில் சுட்ட கவிதை)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/25/2008 1:56:31 PM
Deadline - for Emirates Identity Card
========================================
What is the deadline for legal residents to register? Will it be extended?
As per the law and regulation, the deadline for all legal residents is December 31, 2010. In order to regulate the registration flow and ensure that every Emirati and resident get registered before the deadline, the EIDA prepared an Enrolment Strategy to support the government deadline. Hence, each category has been given a specified period.
Emiratis: from June 2005 to December 31, 2008. (The reason for the longer duration was given until the EIDA positioned itself over the seven Emirates, which took place by early 2008).
Residents working for the public sector and their families: from May 2008 to October 31, 2008.
Professional residents working in private sector and their families: from July 2008 to December 31, 2008.
Other categories shall be announced early January 2009.
The EIDA will continue registering these categories even after the deadline, but it is at their own risk and they will have to put up with the long queues because other categories will also be registering and will be given priority.
Registration
===============
It has become impossible to find registration forms, or register on the website? Will I be penalised?
It is your responsibility to register. New software for 'pre-registration' is now available on the EIDA website and is hosted by about 50 other organisations. You can fill out the form within ten minutes, using the software for you and your family members on your personal computer.
Free CDs of the software will be issued soon at EIDA centres. This online service (first free of charge application among government entities) is made available as an add-on service, while other channels were made available to get this service from such as from Emirates Post centres, and third party typing centres within major EIDA centres for Dh40.
FAQ
--------------
1) The website does not allow me to book an appointment for my entire family. If I sponsor my spouse and children, will I have to go with them for every appointment?
The appointments until December 31, 2008 have already been booked in major registration centres. But half of the registration capacity of the EIDA centres has been kept for walk-in registrations. Each category has to register with their families.
Although the card is optional for children below 15 years old (but registration is compulsory) the guardian's consent is required to issue the card. Children must be present. One guardian must accompany children for registration.
2) Will hospitals not treat me if I do not have an ID card?
This is not within our jurisdiction. If entities demand the ID card, that is up to them. From a humanitarian point of view, everyone should be entitled to medical treatment in emergency situations.
Barcode
========
3)What is the need for a barcode?
The barcode expedites the registration process; it provides security and privacy to the applicant's information. The barcode guarantees that the information provided by the potential card holder is accurate and genuine.
4) If an expatriate holds a diploma and works as a professional, will he be required to register for an ID card?
He or she must register.
5) If a professional has a degree and does not work, will it be mandatory for the spouse to apply for an ID card?
Yes. A family is a unit and is required to register if one of the spouses is part of the category.
6)If an employed professional has children who have completed their university studies and are unemployed, do they have to register for an ID card. If so, when is the deadline?
Yes. December 31, 2008. Again the family is a unit and is required to register if one of the spouses is part of the category we called upon for registration according to our Enrolment Strategy.
7)What about new professionals joining after December 31?
They can register after obtaining a residence permit.
8)If one is able to generate an online application and fix an appointment, will it be possible to change the appointment date?
Yes, you can, but you have to give 24 hours notice that you want to change or cancel and you can use the online appointment system for that.
Married
9)As an expatriate woman married to an Omani, I already have a GCC ID card. Will I need to register for a card in the UAE as well?
Yes.
10)Is the cost of the national ID card the responsibility of the sponsor or the company?
The law does not force the employer to pay the fees for his employees but it must ensure the employees register. By law, it is the resident's individual responsibility to pay the fee. But if an organisation wants to pay the fee, it is their decision.
11)Is there a grace period for those who get their residence visas on December 30 or 31? Do they have to rush to get an ID card?
They have to register as soon as they get a valid visa.
12)Are professionally qualified housewives required to register for the card before 2009?
Yes.
13) What happens to the ID card if one dies after obtaining it?
The card gets automatically deactivated once we receive an automatic update from the government entity that authorises and authenticates this event.
Darwish Ahmad Al Zarouni, Director-General of the EIDA, and Thamer Rashid Al Qasimi, Planning Director and Project Management Director, exclusively answered the questions most frequently asked by Gulf News readers.
(THANKS - GULF NEWS)
Dheva. S E-mail: dheva2000 City: Dubai Country: U.A.E
11/23/2008 1:09:38 PM
தேனீர் அருந்தும் வேளையில்
நலம் நலமறிய பேராவல்
என்ன சேதி?
எப்படி இருக்கீங்க?
ஊரில் கடந்த சில நாட்களாக
நல்ல மழையாம். இதனால்,
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நமதூரில் எத்தனை பெய்துள்ளது என மழையளவு தெரியவில்லை. ஆனால் பரவலாக காவிரி படுகையில்..
Nannilam in Tiruvarur district recorded the maximum rainfall of 60 mm in the last 24 hours till Saturday morning.
The chief amount of rainfall (above 10 mm) recorded in other places are: Tiruthuraipoondi 31 mm, Tiruvarur and Kodavasal 11mm each , Valangaiman 19 mm, Thiruvaiyaru and Ayyampettai 12 mm each, Kumbakonam 13 mm, Papanasam 14 mm, Thanjavur 27 mm and Mannargudi 10 a.m.'
(source; hindu)
சென்ற வெள்ளிக்கிழமை துபாயில்
அமீரக கவிஞர் பேரவை சார்பில்
'கவிதை கூடல்' நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அண்ணன் கதீம் அவர்கள் தலமையேற்க,
துபாயில் உள்ள கவிஞர்கள், கட்டுரையாளர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
விழாவில் 'கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களும்,
ஹிதாயத்துல்லாஹ் அவர்களும்
(காங்கிரஸ் செயலாளர்,
செயலாளர் இஸ்லாமிய இலக்கியகழகம் ) கலந்துக்கொன்டனர்.
விழாவில் நம்மிடம் உள்ள பல ஐயங்கள் குறித்து
தெளிவு படுத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதை பலரும் பயன்படுத்தி பலகேள்விகள் கேட்டனர்.
அனைத்திற்கும் கவிக்கோவின் இனிய நடையில் பதில் வந்தது. இதில் முக்கியமாக செம்மொழி சம்பந்தமாக ஒரு வினா?
தமிழ் செம்மொழியாக்கப்பட்டதால்
தமிழ் அடையும் பயன் என்ன?
இதனால் தமிழ் மொழி வளர்ச்சி
எப்படி இருக்கும் என கேட்கப்பட்டதற்கு
கவிக்கோ அழகாக இதன் பயன்களை விளக்கினார்.
தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தில்
கவிக்கோவும் ஒரு உறுப்பினர்.
நிகழ்ச்சியில் இறுதியாக ஹிதாயத்துல்லாஹ்
சிறிது நேரம் உரையாற்றினார்.
இலக்கியதமிழில் உரையாடல் அழகு..அழகு...
இதில் அமைதியும் மகிழ்ச்சியும் நாம் அடைய
எப்படி வாழ்க்கை நடை ஏற்படுத்திக்கொள்ள வேன்டும்
என இறைசிந்தனையுடன் பேசியது நம்மை
சிந்திக்கவைத்தது. நிகழ்ச்சி இரவு உணவுடன் இனிதே நிறைவேற தமிழ் தாகத்துடன் அனைவரும் கலைந்தனர்.
இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
தெற்கத்திக்காரர்களுக்குப் போதும். சென்னைவாசிகளுக்கும் போதும். இடையில் இருப்பவர்களுக்குப் போதாதுங்க! இன்னும் நாற்பது நாளுக்குத்தான் மழையை எதிர்பார்க்கலாம். இது கடந்து விட்டால் பல மாவட்டங்களுக்குப் பற்றாக்குறையும் திண்டாட்டமும்தான்!
(நன்றி: கல்கண்டு)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/19/2008 7:58:12 PM
அவஸ்தைகள் பலவிதம் -2
முஸ்தபா..முஸ்தபா..டோன்ட் ஒர்ரீ முஸ்தபா...
என்ற பாடல் தமிழகத்தில் மட்டுமல்ல
உலகில் தமிழர்கள் வாழும் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது
இந்த பாடல் சொன்னது என்ன?
மூழ்காத ஷிப்பே பிரட்ஸ்ஷிப் தான் என...
ஆனால் இன்று உள்ள காலகட்டங்களில் அப்படி பாடமுடியுமா என்றால் ?
சற்றே நமக்கு ஏற்படுவது சங்கோஜம் தான்.
நட்புகள் நம்மிடம் உள்ளது பலவகை
ஒரு தெருவில் கட்டிப்புரன்ட புழுதி தோழர்கள்
பள்ளியில் ஒரு சேர படித்த நண்பர்கள்
கல்லூரி சாலையில் பயனித்த நண்பர்கள்
அலுவல் நிமித்தமாக சங்கமிக்கும் நண்பர்கள்
இவையல்லாமல் இலக்கியம், சங்கங்கள், சுற்றுலா என
மட்டுமல்லாமல் நமது வாழ்வில் உயர கை கொடுக்கும் உற்ற தோழர்கள்
என நாம் மிகப்பெரிய பட்டியலே போடலாம்.
ஆனால் இவைகளில் தலையாய நட்புவட்டம் யார்?
நமது புழுதி தோழர்கள் தான்.
அன்றும் இன்றும் நமக்கு என்றும் உன்னத நட்பு இவர்களிடம்
ஆனால் இன்று இந்த நட்புகள் ஏன் எனத்தெரியவில்லை..
ஒரு சேர அமர்ந்து படித்து,
ஒரு தட்டில் அமர்ந்து சாப்பிட்டு,
ஒரு கூட்டமாக சுற்றுலா சென்ற காலமெல்லாம் மறந்து,
இன்று வட்டத்திற்குள்ளே வந்தது என்ன தெரியுமா?
என்னமோ ஈகோவாம். என்ன புன்னாக்கோ?
எங்கேயோ போற மாரியாத்தா ஏன் மேலே வந்து ஏறிட்டு போறாங்கிற மாதிரி,
அடிக்கடி உறவுகளில் விரிசல்கள்,
அதுவும் எப்படி?
அவனுக்கு நாம எப்படி போன் அடிக்கிறது, அவன் அடிக்கட்டுமே..?
நட்பில் கூட கெளரவமா?
அட தேவுடா?
இதில் இன்னும் குறைகள் வேறு?
நம்ம பெண்களை போல
நீ என்னிடம் சொல்லவில்லை ?
நீ என்னிடம் கேட்கவில்லை என?
அட நட்பின் மறுபக்கம் பாருங்கள்
ஒரு பொட்டலம் கடலை வாங்கி பிரித்து தின்றோம்
நம்ம ஊரு பாலத்தடியில்
கொட்டும் பனியிலும் அமர்ந்து பேசினோம்
நேரம் காலம் தெரியாம
பந்து விளையான்டு...
நாம வீட்டுக்கு வரும்போது
அந்த அப்பம் கூட முதுகை திருப்பிக்கொண்டு நிற்க..
ஒரு சேர குளிக்க சென்று
ஒரு குழுவினராக சைக்கிளில் உலா வந்து,
ஒன்றாக ஊரிலே அடிக்கிற வெயிலை எல்லாம் தலையிலே வாங்கி,
ஒன்னுக்கும் உதவாத உதவாக்கரைகள்
என திட்டு வாங்கியது எல்லாம் மறந்துட்டோமா?
இன்னைக்கு நமக்கு என்ன? வந்துச்சி?
கல்யாணம் தானே பண்ணியிருக்கோம்.
பூ முடிச்சி
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா,
அதானே
இல்லை கவிதை நடையில் சொன்னால்,
சின்ன நெற்றியில் சந்தனமிட்டுக்கொண்டு
பின்னலிடாத ஈரக்கூந்தலோடு
பட்டு சரசரக்க..
நாம் கூப்பிடும் போதெல்லாம்
அலங்கமலங்க.. பதறிய படி ஒரு பூச்சரம்..
அது இருக்கட்டுமே...
யாரு வேண்டாம்னு சொன்னது?
நமக்கு நட்பும் வேனும்னு தான் சொல்றோம்
இந்த ஊரிலே வேலைதான் முக்கியம்
நேரம் கிடைப்பது அரிது தான்
பிரச்சனையில்லை
நேரம் கிடைக்கும் போது
ஒரு போன் ஹாய் நல்லா இருக்கியா?
வாரம் ஒரு முறை
இல்லை மாதத்தில் ஏதாவது ஒரு முறை
நட்பை வளர்க்கலாமா?
இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்னங்க?
நல்ல நட்புகள்..
அது என்றும்
நல்ல உறவுகளாக
நம்மிடம் இருக்கனும்..
நட்பு என்றால் சாதாரனம் அல்லங்க..
அது ஸ்னேகிதம்
அதுவும் எப்படி
வெல்லம் போட்ட ஸ்னேகிதம்..
எங்கே ஒரு சந்தோசமாக
நட்பு வட்டத்திற்கு போன் அடிங்க...
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/19/2008 3:49:22 PM
FLASH NEWS
==============
பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. கடந்த பல நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அவர் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிசிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணியளவில் அவர் காலமானார். 1919 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்த எம்.என். நம்பியார், தனது, 13 வயது முதலே நாடக கம்பெனிகளில் நடித்து வந்தார். பின்னர், 1935 ஆம் ஆண்டு, முதன் முதலாக, பக்தராமதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். கல்யாணி மற்றும் கவிதா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். பின்னர், பிரபல நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் சிவந்த மண், மற்றும் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார். இதுவரை அவர், ஆண்டுதோறும், சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
www.madukkur.com E-mail: FLASH NEWS City: Dubai & Madukkur Country: U.A. E & INDIA
11/19/2008 11:14:22 AM
News Update
==================
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவம் குண்டுவீச்சு-15 ஆயிரம் மாணவர்கள் பரிதவிப்பு
=================================================
இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் அந்நாட்டு ராணுவம் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளதால், அங்கு 15 ஆயிரம் மாணவர்கள் பரிதவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பில்லை-ரனில் விக்ரமசிங்கே
===============================================
டெல்லி: இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று இலங்கை எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நிதி வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்-ப.சிதம்பரம் பேச்சு
===============================================
டெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு நிதி வளர்ச்சி விகிதம் சிறப்பாக அமையும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி
=================================================
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கே 80 சதவீத வேலைவாய்ப்பு-அரசு அறிவிப்பு
=================================================
மும்பை: மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் 80 சதவீத வேலைவாய்ப்பு மராட்டியர்களுக்கே வழங்கவேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சிட்டி வங்கி நிறுவனத்தில் 52 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
=============================================
வாஷிங்டன்: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி குரூப் நிறுவனத்தில் 52 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் 300 ஊழியர்களும் வேலை இழக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடன்குளத்தில் மேலும் 4 அணுஉலைகள் : ரஷ்யாவுடன் விரைவில் கையெழுத்து
==========================================
டெல்லி : கூடன்குளத்தில் 4400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 4 அணுஉலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
www.madukkur.com E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: U.A.E & India
11/18/2008 8:14:30 PM
மாலைப்பொழுதின் மயக்கத்திலே....
சற்றே அமீரகம் குளிரும் நிலையில்
மாலைப்பொழுதுகள் இனிவரும் காலங்கள்
ஆமாங்க இனி குளிர்காலம் தானே..
நாமும் இப்போ பள்ளிக்கூடத்தில்
சேர்ந்து படிக்கலாம் என இருக்கு
பார்த்தீங்களா? அனியாயத்தை 12 நாட்கள் விடுமுறை.hey வான்டுஸ் enzoyyyyyyyyyyyyyyy
சில பேரிடம் எப்போதும் ஹாஸ்யம் இருக்கும்.
சமீபத்தில் நண்பர்களின் சில நகைச்சுவை கவிதைகள்
' நான் காற்று வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதை டோபி வாங்கி போனான்
அந்த டோபி என்ன ஆனான்..?!'
ஹா..ஹா...
இன்னுமொரு கவிதை பாருங்கள்.
சில வீட்டில் சமையல் பிரமாதம இருக்கும்??
அதை நாசுக்காக கவியில் சொல்லலாம். எப்படி?
' 'என் மனைவி மட்டும் பத்தினி அல்ல
அவள் வைக்கும் சட்னி கூட பத்தினி தான்
என்னைத்தவிர யாரும் தொட முடியாது..'
ஹா..ஹா.. இதை கேட்கும் போது
நம்மால் சிரிக்காமல் இருக்க இயலாது.
அதே போல அந்த காலத்தில் கவிஞர்கள்
எத்தகைய சூழ்னிலையிலும் பாடல்கள் எழுதுவார்கள்.
அந்த வகையில் கவியரசர் கண்ணதாசன்
ஒரு முறை பெங்களூருக்கு பாடல் எழுத சென்றபோது
சென்று மூன்று நாட்களாகியும் பாடல் எழுதவில்லையாம்.
ஆனால் அவரிடம் போய் கேட்க அஞ்சிய வன்னம்
தயங்கி தயங்கி இசையமைப்பாளரும்,
இயக்குனரும் கேட்க .. கோபப்பட்டு
கவியரசர் என்னய்யா உனக்கு பாட்டு தானே வேனும் இதோ என எழுத..
இன்று வரை தமிழகத்தில் சூப்பர்ஹிட் அந்த பாடல்
என்ன பாடல்.. தெரியுமா?
சொன்னது நீதானா.. சொல்..சொல்.. என்னுயிரே..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதே போல இந்த பாடலில்
அமைந்த வார்த்தைகள் marveloussssssss...
சிந்திக்க:
பயத்தினால் வரும் மரியாதையைவிட அன்பினால் வரும் மரியாதை சிறந்தது
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/18/2008 1:01:56 PM
BED SPACE AVAILABLE
--------------------------
2 Bed Space Alailable From December 1st 2008, Near Dubai Zuleika & NMC Hospital Al Nahda Area,Al Qusais,
Conatact Akbar Ali HR 050-7942680
hrmanson@gmail.com E-mail: hrmanson@gmail.com City: Dubai Country: U.A.E
11/18/2008 10:28:07 AM
News Update
=================
கிளிநொச்சியில் கடும்போர்௨5 வீரர்கள் பலி
====================================================
கொழும்பு: இலங்கையின் கிளிநொச்சி பகுதியில், நேற்று காலை விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற கடும்மோதலில் 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து போர் தீவிரம் அடைவதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 7 ஒரு நாள் போட்டித்தொடர்-இந்தியா அபார வெற்றி
=============================================================================
இந்தூர்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையயேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி, 23 பேர் காயம்
========================================================================
ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் பலியாகினர். இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டம்௨5 ஆம் தேதி பந்த்
=====================================
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி, தமிழகத்தில், வரும் 25 ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சென்னையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சந்திரயான் லேசர் கருவி இயக்கம்
============================
பெங்களூரு : சந்திரயான்௧ விண்கலத்தில் உள்ள ஆய்வுக்கருவிகளில் லேசர் கருவி நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதன்மூலம் நிலவின் மேற்பரப்பை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
info@madukkur.com E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: U.A.E & INDIA
11/17/2008 10:28:48 AM
Police warn that 2o-year-old cars will be confiscated
========================================
By Rayeesa Absal, Staff Reporter
Published: November 16, 2008, 23:50
Abu Dhabi: Police will strictly enforce new norms to do away with motor vehicles that are more than 20 years old and will confiscate vehicles found flouting the rules, officials said in Abu Dhabi on Sunday.
The announcement follows the decision of the authorities to begin phasing out old cars from December 1, with the aim of easing traffic congestion and reducing vehicular pollution.
"Vehicles found flouting the regulations will face confiscation," Colonel Hamad Adil Al Shamsi, director of the Traffic and Patrols Department at Abu Dhabi Police, said in a statement.
Noting that over 30 per cent of accidents were caused by old cars that lacked standard safety features available on newer models, Al Shamsi said the decision to ban old cars, besides improving safety standards, would also have a positive effect on the traffic situation in the city.
Onus on the owner
Old cars can be scrapped or shipped out of the country but the onus is on the owner of the vehicle to find a suitable solution, he said.
With the implementation of the decision, over 68,000 cars would be taken off the city's roads by the end of 2009, according to Colonel Gaith Al Za'abi, head of the traffic department at the Ministry of Interior.
As the phasing out continues, approximately 200,000 cars will be banned in 2010 with the authorities renewing registration of only cars less than 15 years old, Al Za'abi said.
Vehicles which are 20 years or older as of December 1, cannot have their registration renewed as per the new rules. However, if the registration of such a car expires before December 1, it will be renewed for one more year.
Taxis older than five years apart, import of light vehicles older than five years and heavy vehicles older than seven years will be banned. Classic and antique cars have been exempted from this rule.
Import of light vehicles older than five years and heavy vehicles older than seven years will also be banned.
(Thanks - Gulf News)
www.madukkur.com E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: India & Dubai
11/16/2008 11:21:26 AM
திராவிட முன்னேற்ற கழக தேர்தலில்
பழனிமானிக்கம் அணியில் நின்று ஜெயித்து
நமதூர் N.S.M. பஷீர் அஹமது அவர்கள்,
(பேரூராட்சி தலைவர்)
தஞ்சைமாவட்ட தி.மு.க. பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு
'தலைவர் கருனாநிதி அவர்களுக்கும்'
'அன்பழகன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து,
'N.S.M.பஷீர் அஹமது' அவர்களையும்
மதுக்கூர் இனையதளம் மற்றும்
ஏ1 மதுக்கூரியன் சார்பாக வாழ்த்துகிறோம்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/16/2008 11:09:08 AM
News Update
-------------------
இலங்கையில் போர் தீவிரம்-பூநகரி பகுதியை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு
=================================================================
பனைக்குளம்: இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்கரை பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
ராஜ்தாக்கரே இன்று கைதுசெய்யப்பட்டார்-மும்பையில் பதற்றம்
=================================================
மும்பை: மகராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வேலை இழப்பு அதிகரிப்பு-ஆய்வில் தகவல்
===================================================
லண்டன்: சர்வதேச பொருளாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, இங்கிலாந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டு புள்ளியியல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி-பாரக் ஒபாமா முடிவு
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்குவதற்கு பாரக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசியக்கொடி பொறிக்கப்பட்ட எந்திரம் நிலவில் தரை இறங்கியது
=====================================================
பெங்களூரு: இந்தியாவின் ஆள் இல்லா விண்கலமான சந்திரயான்௧ல் இருந்து இந்திய தேசியக்கொடி பொறிக்கப்பட்ட எந்திரம் நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிர தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை எண்ணூரில் கடல் கொந்தளிப்பு௪0க்கும் மேற்பட்ட வீடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
======================================================================
சென்னை: சென்னையில், எண்ணூர் மற்றும் திருவொற்றியூரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 40 வீடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் நீடிக்கிறது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர் தாக்குதல் சம்பவம்-தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு
===================================================================
உசிலம்பட்டி: சென்னை சட்டக்கல்லூரி மாணவர் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
www.madukkur.com E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: U.A.E & INDIA
11/15/2008 10:15:46 AM
கச்சா எண்ணெய் 55 டாலராக வீழ்ச்சி
-------------------------------------
டெல்லி: சர்வதேச அளவில், கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 55 டாலராக வீழ்க்சி அடைந்துள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான சாமியார் பாண்டோவுக்கு அரசியல் பிரமுகர்கள் தொடர்பு
---------------------------------------------------------------------------------
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான சாமியாருடன் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்பு
----------------------------------
டெல்லி: சர்வதேச நிதி நெருக்கடியால், இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தவறுவது அதிகரித்து வருகிறது.
ஜி௨0 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று பயணம்
டெல்லி: அமெரிக்காவில் நாளை நடைபெறும் ஜி௨0 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றார்.
சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: உசிலம்பட்டியில் பேரூந்துகள் மீது கல்வீச்சு, பதற்றம்
--------------------------------------------------------------------------------
உசிலம்பட்டி: சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இன்று, பள்ளி மாணவர்கள் பேரூந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக பதவியை துறக்கத் தயார்-கருணாநிதி
-------------------------------------------------
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக, தனது பதவியை துறக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை புதிய கமிஷனர் கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்
-----------------------------------------------------------------
சென்னை: சென்னை மாநகர மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் சிறப்பாக செயல்பட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் எதிரொலி : கமிஷனர் மாற்றம்
----------------------------------------------------------
சென்னை : சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர்கள் இடையே நடைபெற்ற கடும் மோதலை அடுத்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆர்,சேகர் மாற்றப்பட்டுள்ளார்.
நிலவில் இன்று மூவர்ணக் கொடி
-------------------------------
சென்னை : சந்திரயான்௧ விண்கலத்தில் இருந்து, கருவிகள், இன்று நிலவில் இறக்கப்பட்டு, இந்திய தேசியக் கொடியை நாட்ட இருப்பதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
(Thanks - Kumudam Latest News)
www.madukkur.com E-mail: info@madukkur.com City: Dubai & Madukkur Country: UA.E & INDIA
11/13/2008 11:39:15 AM
ஆன்மிக சிந்தனை
இந்த உலகில் நாம வாழ
இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகள்
கொஞ்சமா? நஞ்சமா? நினைத்துப்பாருங்கள்
இன்னும் பல இடங்களில் பரவிச்சென்று
இறைவனின் படைப்புகளை பாருங்கள்
இவ்வளவு நாம் வாழ வசதி கொடுத்தவனுக்கு
நாம் என்ன செய்கிறோம்?!!
இந்த வானமும் பூமியும்
நாம் வாழ இத்தனை தந்தும்
இந்த ஜனங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
நம்பினால் நம்புங்கள் 5
ஏ பிரிவு இரத்தம் ஏ பிரிவினருக்கும்
ஏபி பிரிவினருக்கும் பொருந்தும்
பி பிரிவு இரத்தம் பி பிரிவினருக்கும்
ஏபி பிரிவினருக்கும் கொடுக்கலாம்
ஏபி பிரிவு இரத்தம் ஏபிக்கு மட்டும் கொடுக்கலாம்
ஆனால் இவர்களுக்கு எல்லா பிரிவு இரத்தமும் பெற்றுக்கொள்ளலாம்
ஆகையால் இவர்களை universal reciepients
என அழைப்பார்கள்.
ஒ பிரிவு இரத்தம் ஒ பிரிவினருக்கு பொருந்தும்
இவர்கள் இரத்தம் எல்லோருக்கும் கொடுக்கலாம்
ஆகையால் இவர்களை universal donar
என அழைப்பார்கள்.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/12/2008 7:53:56 PM
தேனீர் அருந்தும் வேளையில்
தென்றல் வந்து என்னைத்தொடும்..
உலவும் தென்றல் காற்றே...
தென்றல் என்னை முத்தமிட்டது....
என இது போல
தென்றல் தாலாட்டும் பாடல்கள்
நாம் கேட்டு இருக்கிறோம்.
ஆனால் அது போல தென்றல் வருடும்/தழுவும் நேரங்கள் அனுபவிக்கவேன்டாமா? அந்த வசந்தகாலங்கள் வரத்துவங்கிவிட்டது.
சில நாட்களாக பருவனிலைமாறி வசந்தம்வீச தொடங்கிவிட்டது.. அமீரகத்தில் வெப்பமான தட்பவெப்பம் மாறி இனி எப்படியும்,
நான்கைந்து மாதங்களுக்கு
தென்றலுடன் + குளிரும் தழுவி
அனைவரையும் oooppss சொல்லவைக்கும்
ஒரு இதமான ஸ்வெட்டர் கலாச்சாரம்.
(breeze + winter = sweater culture) அல்லாஹ்பெரியவன்.
இது போல ஸ்வெட்டர் கலாச்சாரம்
நாம் மட்டும் வரவேற்கவில்லை
பலரும் இது போன்ற வித்யாசமான தருனத்தை விரும்புகிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த நீலகிரி மலை இரயில் நூற்றாண்டு விழாவே சாட்சி.
அந்த குளிரையும் பொருட்படுத்தாமல்
லல்டேல் முதல் ஊட்டி மத்திய இரயில் நிலையம் வரை மாரத்தான் ஓட்டம் wowwww...
சந்திராயன் -1 வெற்றியைத் தொடர்ந்து சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திராயன்-1ன் வெற்றிக்கு அடுத்து, ஆளில்லா விண்கலம் ஒன்றை சூரியனுக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ - ISRO - Indian Space Research Organization ).
இந்தப் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகளும், முதன்மை தேசிய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா சார்பில் இப்படியொரு முயற்சி எடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலம் ஒரு மினி செயற்கைகோளாகும். கரோனா எனப்படும் சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்ய இது அனுப்பப்படவுள்ளது. சூரியனிடமிருந்து வெளித்தள்ளப்படும் பொருட்கள் பற்றியும், அவை காற்று மண்டலத்தில் கலப்பது பற்றியும் இதுவரை நிலவிவரும் மர்மங்கள் பற்றியும் ஆய்வு செய்யப்படும்.
மேலும், சூரியனின் வெளிப்பகுதி வெப்பநிலை, விண்வெளி வானிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும். விண்வெளியில் உள்ள வானிலை குறித்த ஆய்வு மூலம் இஸ்ரோ அனுப்பியுள்ள செயற்கைகோள்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
சூரியனிடமிருந்து வரும் கதிர்வீச்சு பற்றியும், அதனால் தொலைத்தொடர்பு வசதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
சூரியனுக்கு அனுப்பப்பட உள்ள விண்கலத்திற்கு தற்போது ஆதித்யா (சூரியன்) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஏவப்படும் தினம் இன்னும் முடிவாகவில்லை.
(நன்றி கல்கண்டு)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/11/2008 7:18:23 PM
நாமும் சுற்றுலா செய்திகள்
அடிக்கடி எழுதிவருகிறோம்.
ஆனால், நாம் செல்லமுடியாத ஒரு சுற்றுலா
இடத்தைப்பற்றி இங்கே எழுதலாம் என இருக்கிறேன்.
ஏன் செல்லமுடியாது? இதானே உங்க கேள்வி
செல்லலாம் ஆனால் இது இருப்பது அமெரிக்காவில்...
ஆகையால், அங்கே இருப்பவர்களுக்கு தான் செல்லவசதி.
அமெரிக்காவில் எல்லாம்
எப்படியா பட்ட வாழ்க்கை என சொல்லவேன்டியதில்லை.
அது ஒரு விதமான E
அங்கே விடுமுறை நாட்கள் கிடைக்கும்போது
நமது மக்கள் ஒரு நாள் சுற்றுலாவாக சென்றுவர..
ஒரு அருமையான இடம் தான்
felton-ல loch Lomond Lake (near santa cruz)
ரொம்ப அருமையான இடம்
போட்டிங் எல்லாம் இருக்கு
நன்னா குளிர்ச்சியா இருக்கும்.
நம்ம ஊரு மக்களும்
கலிபோர்னியா பக்கம் இருக்காங்க தானே
சென்று வந்து உங்கள் கட்டுரை எ௯ழுதுங்க
போட்டோவும் அனுப்பித்தாருங்கள்.
கூடுதல் விபரங்கட்கு
இனையதளத்தில் பார்க்கவும்
http://lompico.org/lochlomondlake.html
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/9/2008 1:47:50 PM
நலம் நலமறிய ஆவல்
என்ன சேதி
எப்படி இருக்கீங்க?
இரன்டு நாட்கள் வார விடுமுறைகள்
இறையருளால் இனிதே சென்றது..
வேற என்ன சேதி?
வெள்ளிக்கிழமை இரத்ததானமுகாம் இருந்தது
நமது தமிழக வழக்கத்தில் சொல்வார்கள்
தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என,
இதை நமது ஊர் சகோதரர்கள் ஒத்துழைப்புடன்
இது வரை 11முகாம்கள் நடத்திவிட்டோம்.. அல்ஹம்துலில்லாஹ்.
நேற்றைய முகாமில்
நமது குழுவில் வந்த ஒருவரின்
இரத்தத்தில் அதிகமாக இரத்த தட்டுக்கள் இருந்ததால்
அது அவசியம் என நம்மிடம் அனுமது பெற்று
இரத்தத்தில் இருந்து அதை மட்டும் பிரித்து எடுக்கிறார்கள்.
அதை எடுப்பதற்கான அனைத்து உபகரனங்களும் இவர்கள்
வைத்து இருக்கிறார்கள். அது போல அவர்கள்
பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வழங்கலாமாம்.
அல்லாஹ் அஹது.
அதே போல வெள்ளிமாலை
துபாயில் அமீரகதமிழ்சங்கம் துவக்கவிழா
நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள்
கலந்துக்கொன்டனர். மாலை 6.00 மணிக்கு விழா தொடங்கி
இரவு பதினொரு மணிவரை விழா நடைபெற்றது.
இந்த விழாவைப்பற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன்.
இலவசங்களுக்கு விவஸ்தையே இல்லையா?
சென்னை மாநகராட்சிப் பள்ளி - மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் கொடுத்ததைச் சொல்கிறீர்களா? இதைக்கூட இங்குள்ளவர்கள், இந்தியாவிலேயே முதன் முறையாக என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே, அதுதான் எனக்கு விவஸ்தையாகப்படவில்லை
(நன்றி கல்கண்டு)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emriates
11/6/2008 11:18:21 AM
hai folks
gud morning
என்ன சேதி
எப்படி இருக்கீங்க?
weekend வந்தாச்சி
எப்படி ஒரு வாரம் போனதுன்னு தெரியலை..
அல்லாஹ் அஹது....?!!!
சற்றே ஆன்மிக சிந்தனையுடன் தொடங்குவோமே..
இனையதளத்திலும் விரைவில்
ஆன்மிகத்திற்கென தனியாக ஒரு பக்கம் வரும்..
துர்சகுனத்தை வெறுத்து துஆ
அல்லாஹும்ம லாதைர இல்லா தைருக,
வலா கைர இல்லா கைருக,
வலா இலாஹ கைருக.
சகுணம் உன் சகுணமல்லாத இல்லை
நன்மையும் உன் நன்மையல்லாது இல்லை
உன்னையன்றி வணங்கப்படுபவனும் இல்லை.
அமெரிக்காவில் புதிய அதிபர் வந்தாச்சி
நம்ம ஊரு பானியிலே சொல்லவந்தால்
நாடு நலம் பெற
நல்லாட்சி நடைபெற
ஒபமாவை வாழ்த்துவோம்.
நமது ஊரில் உள்ள பெரியவர்களாக சேர்ந்து
மதரஸா நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஆன்மிக செயல்பாட்டிலும்
நமது ஊரின் அனைத்து காரியங்களிலும்
பல காலங்களில் பாடுபட்டவர்கள்
இவர்கள் தற்போது சில இடங்களில் குரான் கற்கும்
பாடசாலைகளை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஆண்டு விழா கூட சென்ற ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த மதரஸாவின் பெயர் தர்பியத்துல் பனாத் குர் ஆன் மதரஸா.
'நினைவு பந்தல் பெயர்
யாக்கூப் மரைக்காயர் நினைவு பந்தல்.
' மு.மு.அ. அப்துல் ஹூதா
நினைவு அரங்கம்.
அந்த நோட்டீஸ் மேல் இருந்த வாசகம்
கல்வி கற்பவராக இரு
கல்வி கற்பிப்பவராக இரு
கல்விக்கு உதவிபுரிபவராக இரு.
அட நம்மை சிந்திக்க வைக்கிறது அல்லவா?
தகவல்- ஏ.என்.எம் ஹிதாயத் சிங்கை
( நமது சிங்கை செய்தியாளர்)
இதயத்தை காக்க.....................
இதயத் துடிப்பு உயிருக்கு முக்கியம். இதயம் நன்றாக வேலை செய்ய வேண்டுமானால், இதயத் தசைகள் நன்றாக வேலை செய்வது அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதய நோய் பிரச்னை பல பெரியோருக்கு உள்ளது.
வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்றைய இளைஞர்களும் இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியுள்ளனர். பெரியவர்களுக்கு ரத்தக் குழாயின் குறுக்கு விட்ட அளவு குறையத் தொடங்கி, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.
இந்த இடத்தில்தான் இதய நோயாளிகளுக்கு கொழுப்புச் சத்து குறைவான உணவு முக்கியத்துவம் பெறுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
குளிர் பானங்கள், சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் கார்போஹைட்ரேட் சத்து அதிகமாகி, கொழுப்புச் சத்தாக உருமாறும்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கும். இவ்வாறு ரத்தக் குழாய்களில் அடைப்பு --அதைத் தடுப்புதற்கு உணவு முறை முக்கியப் பங்காற்றுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் --காய்கறிகள், பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம்.
உணவில் உள்ள கரையும் நார்ச்சத்து (பருப்பு, ஓட்ஸ் உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகளில் இத்தகைய நார்ச்சத்து உள்ளது.) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பதைத் தடுக்கிறது. எனவே இத்ககைய உணவு இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சர்க்கரை நோயாளிகளைப் போலவே இதய நோயாளிகளும் உணவு ஆலோசனை நிபுணரின் மதிப்பீட்டீன்படி, தேவையான கலோரிச் சத்தைக் கொண்ட உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனெனில் இதய நோயாளி இஷ்டம்போல் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் - இதயம் திணறும். தீவிர உடற்பயிற்சியை இதய நோயாளிகள் செய்ய முடியாது. இதனால்தான் உணவில் அக்கறை செலுத்தி உடல் எடை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதய நோயாளிகள் காலை எழுந்தவுடன் ஒரே நேரத்தில் அதிக அளவு குடிநீர் குடிக்கக் கூடாது. நாள் முழுவதும் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் குடிக்கலாம். இதய நோயாளிகள் சப்பாத்தி மட்டுமே சாப்பிட வேண்டும் என நினைக்க வேண்டாம்.
கலோரிச் சத்து குறைவான-ஊட்டச்சத்து நிறைந்த உணவை இடைவெளி விட்டுச் சாப்பிடலாம். இதய நோயாளிகள் வாக்கிங் உள்பட உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ரத்த அழுத்தம் உயரும் அளவுக்கு இதை பதற்றத்துடன் செய்யக் கூடாது.
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/5/2008 5:17:59 PM
E-mail: City: Country:
11/5/2008 5:15:21 PM
Test Msg please ignore.
Webteam E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE
11/5/2008 5:14:54 PM
Test Msg please ignore.
Webteam E-mail: info@madukkur.com City: Dubai Country: UAE
11/2/2008 5:10:48 PM
நாமும் பத்திரிகை-துறையும்
இன்று எத்தனையோ
தமிழ் அமைப்புகள் உள்ளது.
இந்த அமைப்புகளின் பிரச்சாரம் என்ன?
உங்கள் கண்களை தொலைக்காட்சி
பெட்டியிலிருந்து மாற்றி
புத்தகங்களின் மீது பதியுங்கள் இதான்.
இன்று உலகமே 'e' உலகமாகிவிட்டது.
அல்லது worldonline என்றும் கூட சொல்லலாம்.
இதில் நாமும் தப்பிவிடவில்லை.
அலுவலகம் சென்றால் கணினி இல்லை என்றால்
ஒரு அலுவலும் நடப்பதில்லை.
அல்லது வீட்டில் ஓய்வு நேரங்களில் கூட
நமக்கு துனையாக ஒரு கணினியின் அவசியம் தேவைப்படுகிறது.
நமது ஓய்வு நேரங்களை அல்லது
அலுவலகத்தில் கிடைக்கும் நேரங்களில்
நாம் ஏதாவது செய்திகளை சொல்ல விரும்பினால்
அதை சுலபமாக சொல்லலாமே...
ஒன்றும் பெரிய காரியமே இல்லை
இனையம் வழியே மின்னஞ்சல் சில நொடிப்பொழுதுகளில்
எங்கள் இனைய முகவரிக்கு வந்து விடும்.
இதை சற்று சோம்பலாக சிந்தித்தால்
என்னத்தே எழுதி..என்னத்தே அனுப்பி தான்...
அதுவே புத்திக்கு சுறுசுறுப்பை கொடுத்தால்..
wowwwwww... brilliance..
நமது தமிழ் வார மாத இதழ்களில் பத்திரிகையால் பிரபலம் அடைந்த பெயர்களை..பார்த்திருக்கிறோம்.
உதாரனமாக.. சில பெயர்கள்..
'வலங்கைமான் நூர்தீன்,
கதீஜாஹனீபா திருச்சி,
ஜெ,முகம்மது பாரூக் நெல்லிகுப்பம்,
வளர்மதி தஞ்சாவூர்,
எம்.அசோக்ராஜா அரவாக்குறிச்சி,
இரணியல் கலை,
கிணத்துக்கடவு ரவி,
படுதலம் சுகுமாரன்,
என இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.
இவர்கள் செய்தது என்ன?
ஏதாவது பத்திரிகை வாங்கி படித்தால்
அதை படித்து விட்டு
ஏதாவது தனது கருத்துக்களை
ஒரு அஞ்சல் அட்டை வழியே அனுப்பிவிடுவார்கள்.
சமீபத்தில் இரணியல் கலை இறந்த போது
அந்த வாரம் புத்தகம் படித்து விட்டு
இரன்டு அஞ்சல் அட்டை தயாராக எழுதி வைத்து இருந்தாராம்.
நமது இனையத்திற்கும் அதுபோல
ஏதாவது ஒரு தகவல்கள் அவ்வப்போது அனுப்பித்தாருங்கள்.
நமதூர் நிகழ்ச்சிகள்,
பிறப்பு- இறப்பு செய்திகள்,
திருமண நிகழ்ச்சிகள்,
பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்,
நகைச்சுவைகள்
அரசியல் நிகழ்சிகள்,
இப்படி ஏதாவது அனுப்பலாமே..
இதற்கு ஒன்றும் சிரமமில்லை.
ஆங்கிலத்தில் அனுப்பலாம்.
அல்லது தமிழில் அனுப்பலாம்.
தமிழில் அனுப்பும்ப்பொது யுனிகோட் தமிழில் அனுப்புங்கள்.
நீங்கள் நினைக்கலாம்
இனையங்கள் என்றால்
அலுவலகத்தில் ஆசனத்தில் அமர்ந்து
சீமான்கள் படிப்பது என..
அப்படி நாங்கள் ஒரு போதும் நினைப்பதில்லை.
கல்வியில் உயர்ந்தவர்கள் முதல்
பாமர மக்கள் வரை வந்து உலவவேன்டும் என்பதே எண்ணம்.
நமக்காக நமது ஓர் பெயரில் ஓர் இனையம்.
உலகம் முழுவதும் நாம் பரந்து வாழ்ந்தாலும்
இனையம் வழியே நாம் ஒரு குவலயகுடும்பமாக வாழ்வோம்.
இறைவன் நல்வாழ்க்கை தருவானாக!
(சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/1/2008 3:52:41 PM
விக்ரமத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி:சீன காசுகள்
விக்ரமத்தில்( விக்ரமம்)தொல்பொருள் ஆராய்ச்சி:சீன காசுகள் கண்டெடுப்பு
---->நண்பர்களே வணக்கம் அண்மையில் நான் திரு பழநெடுமாறன் அவர்கள் எழுதிய தமிழர் பரவிய நாடுகள் என்ற நூலைப்படித்தேன் அதில் ஒரு செய்தி இடம்பெற்றது
----->1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியில் இந்த ஊரில்(விக்கிரமம்) பல சீன காசுகள் கண்டெடுக்கப்பட்டன,அந்த காசுகள் ""கி.பி.700ல்"" சீனாவில் பயன்படுத்தப்பட்ட காசுகள் என தெரியவந்துள்ளது,எனவே இந்த பகுதியானது அந்த காலத்திலேயே(1300 ஆண்டுகளுக்கு முன்) தோன்றிய ஊராக இருக்கவேண்டும் ,
----->ஒரு வேளை இந்த பகுதியில் அந்த காலத்தில் பெரிய வாணிபம் நடைபெற்று இருக்கலாம் என்று கருதுகிறார்கள்,இந்த செய்தி வயதானவர்களுக்கு தான் தெரிய வாய்ப்ப்பு உள்ளது ,இதைப்பற்றி அந்த ஊர் நண்பர்கள் யாருக்காவது மேலும் தகவல் தெரிந்தால் இங்கே குறிப்பிடலாம்,
(thanx : natives of madukkur)
anwar E-mail: anwar_2020@rediff.com City: dubai Country: emirates
11/1/2008 9:50:58 AM
Welcome to Travel Exchange Rates news. We will update you with the latest travel related news and current exchange rates of various currrencies interested to Madukkurians.
Editors E-mail: www.madukkur.com City: Dubai Country: UAE
10/30/2008 1:06:23 PM
தேனீர் அருந்தும் வேளையில்
டெர்மினல் 3 புதியதாக
இங்கே திறந்துள்ளார்கள்.
இதில் இருந்து ஆப்ரிக்கா,
மத்தியகிழக்கு நாடுகள்,
அமெரிக்கா மற