மலபார் மஷ்ரூம் மசாலா

 

 

 தேவையான பொருட்கள்
***********************

 

தக்காளி - பாதி
மிளகாய் - 1
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டை-4
மஷ்ரூம்-1/4 கப்
கேப்சிகம்-1/4 பகுதி
சீரகம் பொடி-2 சிட்டிகை
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
சில்லிபொடி-1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகு தூள் -3 சிட்டிகை
எண்ணை  - ஒரு தேக்கரண்டி

காய்களை மிகசிறியதாக கட்செய்யவும்

 

ஒரு  பாத்திரத்தில் எண்ணைய் சூடானதும் அதில்  வெங்காயம், போட்டு நன்கு வதக்கவும்

 

 நன்கு வதங்கியவுடன் மஷ்ரூம் போட்டு வதக்கவும் எண்ணைய் மேல் வந்தவுடன் எல்லா மசாலாவையும் போட்டு வதக்கவும்

 


பின் தக்காளி கேம்சிகம் மிளகாய் ,கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.

 


தக்காளி நன்கு வதங்கி மசால் போல் வந்ததும் முட்டையை அடித்து அதில் ஊற்றி நன்கு கிளரவும்

 


 
நன்கு தனிதனியாக வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும் மேல் மிளகு பொடி போடவும்

 


சுவையான மலபார் மஷ்ரூம் மசாலா ரெடி

 


இட்லி தோசை,சப்பாத்தி,சாதம் இவற்றுடன் சாப்பிடலாம்.