|
செய்முறை
- பூண்டு, சி.வெங்காயத்தை
தோலுரித்து
நீள நீளமாக
மெலிதாக
நறுக்கி வைக்கவும்.
- தக்காளியை
நான்காக
நறுக்கியும், ப.மிளகாயை
தட்டியும்
வைக்கவும்.
- சோம்பை
தட்டியும்
வரமிளகாயை
இரண்டிரண்டாக
கிள்ளி விதை
நீக்கியும்
வைக்கவும்.
- கறியை
நன்கு கழுவி
உப்பு, மஞ்சள்
பொடி, மல்லிப்
பொடி, இஞ்சி & பூண்டு விழுது, தட்டிய ப.
மிளகாய், இருநூறு
மிலி தண்ணீர்
சேர்த்து
முக்கால்
பாகம் வேக வைக்கவும்.
- அடுப்பில்
கடாயை
வைத்து
எண்ணை
முழுதும் ஊற்றி
சோம்பு, வரமிளகாய்
தாளித்து சிவந்ததும்
நறுக்கிய
பூண்டு, வெங்காயம்
சேர்த்து
நன்கு
வதக்கி
கறிவேப்பிலை சேர்க்கவும்.
- ஒரு
நிமிடம்
கழித்து
தக்காளித்
துண்டங்களை
சேர்த்து
வதக்கவும்.
- தக்காளி
கரைந்து
எல்லாம்
சேர்ந்து
எண்ணை மேலே
பிரியும்
போது கறிக்
கலவையை கொட்டி
அடுப்பை
சிம்மில்
வைத்து
அடிக்கடி கிண்டி
விடவும்.
- கறி
நன்றாக
வெந்து
தண்ணீர்
முழுதும்
வற்றியதும்
இறக்கவும்.
|