தேவையானபொருட்கள்

பருத்திவிதை     - 50 கிராம்

சோள மாவு       -100 கிராம்

அரிசிமாவு        - 100 கிராம்

சர்க்கரை          -300 கிராம்

நெய்              -150 கிராம்

பாதாம்            - 10 கிராம்

 

செய்முறை

1. பருத்திக் கொட்டையை நன்றாகக் கழுவி,அரைத்து வைத்துக் கொள்ளவும்.

2. இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

3. இப்போது அடுப்பில் வாணலியை வைத்து அதில், அரைத்து வைத்துள்ள பருத்தி மாவுவை ஊற்றி கிளற வேண்டும்.

4. நல்ல மணம் வந்தவுடன் அதில் சர்க்கரை, சோளமாவு, அரிசி மாவு கலவையை சேர்த்து அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.

5. அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதில் நெய் சேர்க்கவும்.

6. இறக்குவதற்கு முன்பு பாதாம் சேர்க்கவும்.

7. நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சூடு தணியும் வரை காத்திருந்து, பின் துண்டுகளாக வெட்டவும்.